Tuesday, 9 November 2021
Saturday, 6 November 2021
Sunday, 31 October 2021
வாழ்க்கை வரமா? சாபமா?
வாழ்க்கை வரமா சாபமா,
கேள்விகளிலே ஓடுகிறது
விடை தான் தெரியவில்லை!
எதையும் கனவிலே காண்பது சாபம்!
எதையும் கையிலே உண்டாக்குவது வரம்!
எதற்கும் பிறரை நாடியிருப்பது சாபம்!
எதற்கும் பிறருக்கு கொடுத்தளிப்பது வரம்!
கையில் எதுவும் வந்த உடன்
காணமல் செய்வது சாபம்!
கையில் ஈட்டியதை எப்படியாவது
இரட்டிப்பாக்குவது வரம்!
இவ்வுலகில் செய்வதற்கு ஆயிரம் உள்ளது!
இவ்வுலகில் பேர் பெருவதற்கு ஆயிரம் உள்ளது!
எது நமது என்று தேடி அதை நாடி
அதில் ஆடிப் பாடி நெகிழ்க வாழ்வு வரமாகும்!
-செல்வா
Friday, 29 October 2021
தனிமை!
தனித்து விடப்பட்ட காட்டில்
தனியாக நிற்கப்பழகியவன் நான்!
தனிமை என்னை ஒன்றும் செய்ததில்லை!
தனிமை என்னை மென்றும் திண்ணவில்லை!
மாறாக நான் நன்றாகவே உணர்ந்தேன்!
மாறாக நான் நன்றாகவே இருந்தேன்!
இளமையில் தன்னை பற்றி யோசி!
முதுமையில் தன்னை பற்றி சுவாசி!
தனிமை தெரியாமல் கலந்துவிடும்!
தனிமையும் இனிமையே!
இனிமையும் தனிமையே!
-செல்வா!
Thursday, 28 October 2021
சிரிப்பு!
சிரித்துப்பழகினால்
வாழ்க்கை எளிதாகுமே!
கடினமோ கவலையோ
இன்னலோ இக்கட்டோ
துன்பமோ துயரமோ
சிரித்திட எல்லாம்
விலகிப்போகும்!
தன்னை மறந்து
தன்னை நினைத்து
தானே சிரிக்க
யாரும் புத்தரே!
நடமாடும் உலகில்
நாகரிகம் என்றென்னி
சிரிக்காமல் ஓடுகின்றனர்
நாளுக்கு ஒருமுறையேனும்
சிரிப்போம் சிந்திப்போம்
வளமுடன் வாழ்வோம்!
-செல்வா
Wednesday, 27 October 2021
Tuesday, 26 October 2021
தேநீர் நண்பனே!
என் உணர்வுகளுக்கு
மதிப்பளிக்கும் உன்னத
தேநீரே உன்னில் கரையாத
உணர்வுகள் என்னில் இல்லை!
எவ்வுணர்வாயினும்
அதை இரட்டிப்பாக்கவும்
அரைபாதியாக்கவும்
நீட்டிக்கவும் துண்டிக்கவும்
பலமுறை கைகோர்த்தாய்!
பேசாமலே உன்னால்
இத்தனை காரியம்
எவ்வாறு சாதிக்கிறாய்
என்னையும் ஈர்க்கிறாய்!
உன்னோடு கழிந்த
நொடிகள் மறவாத
இலக்கணவரிகள்!
தீராத்தாகம் தீர்க்க வா!
பருகி தணிகிறேன்!
-செல்வா!
Sunday, 26 September 2021
கடினம்!
வாழ்வில் கடினமான என
ஒன்று இருந்ததில்லை!
நாம் தயாராக இல்லாத போது
எளிமையானதும் மலைப்பாகிடும்!
வைரத்தினை வைரத்தினால்
வெட்டிட இயலும்,
இமாலய சிகரத்தின் மீது
எறி வென்றிட இயலும்!
கடினமான காலங்கள்
கடந்து போகக்கூடியவையே!
பிறகு அசை போட்டால்
நமக்கே சிரிப்பு வரும்!
கடினம் வரும்
கவனமாய் இரு
கடந்து விடாலாம்
கவலையை விடலாம்!
வாழ்வில் கடினமான
ஒன்று இருந்ததில்லை!
விழி.எழு.விருட்சமாகுக!
-செல்வா!
Monday, 20 September 2021
ஆயத்தம்!
காத்திருந்தேன் என் கனவுகளுக்கு
சிறகு முளைக்கும் வரை!
எதிர்பார்த்திருந்தேன்
என் சிந்தனைகள்
வானத்தை எட்டும் வரை!
யார் என்ன செய்து விட முடியும்!
யார் என்னை வென்று விட முடியும்!
மனது படியாத வரை
முயற்சி முடியாத வரை
இடர் வரினும் தடை வரினும்
தொட்டுவிடாலாம் விட்டுவிடாதே!
வெற்றி நமதே!
விழி.எழு.விருட்சமாகுக!
-செல்வா!
Saturday, 18 September 2021
முடிவு!
இவர் ஒன்று சொல்லுவார்
அவர் ஒன்று சொல்லுவார்
முடிவில் திகைப்பவன் நீயே!
தீர்க்கமாக முடிவை எடு
முழு பொறுப்பும் உனதே!
அறிவுரை பற்பல கேள்
முடிவு உனதாக இருக்கட்டும்!
எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு,
அதை கண்டு அடைவதே காலம்,
இன்றைய நிலையை வைத்து,
நாளைய பொழுதை எடை போடாதே,
இன்று விதைத்தால் நாளை அறுவடை!
பொறுமை, காலம் இவை இரண்டும்,
பதில் உரைக்கும் திடமாக இரு!
-செல்வா!
Thursday, 16 September 2021
Saturday, 21 August 2021
பயம்!
காத்திரு அது தவம்
தவத்தின் பலன் அதை
காலம் இரட்டிப்பாக்கும்!
பயம் தான் மனிதனை
சங்கிலி போல் கட்டிவிடுகிறது
நம் பயதின் மீது பிறர் ஏறி
நம்மீது சவாரி செய்கின்றனர்!
பயப்படாமல் துணிந்து
மதிகொண்டு செயல்படு
எட்டாத தூரத்தில்
ஏதுவும் இல்லை!
இதுவும் கடந்து போகும்
எதுவும் வந்து சேரும்
காலம் தந்து விடும்
காத்திருத்தல் தவம்
என்ற புரிதல் வரும்!
-செல்வா
Thursday, 12 August 2021
Thursday, 5 August 2021
Friday, 23 July 2021
Tuesday, 20 July 2021
தொடர் ஓட்டம்!
காலங்கள் கடக்கின்றன,
மாயங்கள் நடக்கின்றன!
தொடர் ஓட்டத்தில்
தொடர்ந்து ஓடினால்
இலக்கை அடைந்திடலாம்
ஆனால் எத்தனை முறை
தொடர்ந்தோம் கேள்விக்குறி?
சில சமயம் ஏன் ?
பல சமயங்களில்
எல்லையின் தூரம்
கண்களை அச்சுறுத்தும்
கால்களை பலவீனமாக்கும்
ஆனால் மனதின் பலத்தால்
சாதித்தவை பல உண்டு!
நம் வாழ்விலும் உண்டு!
நம்பிக்கை வைத்து ஓட,
தூரமும் பாரமும் குறையும்!
காலங்கள் கடந்து செல்ல
மாயங்கள் நிகழ்ந்து விடும்!
விழி.எழு.விருட்சமாகுக!
-செல்வா
Saturday, 10 July 2021
Monday, 5 July 2021
Friday, 2 July 2021
Saturday, 26 June 2021
பிரச்சனை!
பிரச்சனைகளே தீர்வுக்கு ஆரம்பம்!
பிரச்சனை யில்லாத வாழ்வில்லை யார்க்கும்!
பிரச்சனைகள் நம்மை வளர்க்கும்!
பிரச்சனைகள் தீர்வு உண்டாக்கும்!
பிரச்சனைகள் திறமை அள்ளித்தரும்!
பிரச்சனை பிரச்சனையாக அனுகாதே!
பிரச்சனையிலிருந்து விலகி நின்று பார்!
பிரச்சனை சிறிதாக தெரியும் தீர்வும் வரும்!
பிரச்சனை தீர்க்க முடியுமானால்!
பிரச்சனை பிரச்சனையே இல்லை!
விழி.எழு.விருட்சமாகுக!
-செல்வா!
Sunday, 20 June 2021
Saturday, 19 June 2021
செயல்!
மாற்றம் என்பது செயலில் உள்ளது,
பேச்சிலும் சொல்லிலும் இல்லை!
நம்பிக்கை என்பது நிரூபணத்தில் உள்ளது,
புராணத்திலும் பேச்சு வழக்கிலும் இல்லை!
இன்று என்பது அனுபவத்தில் உள்ளது,
நேற்றும் நாளையும் இன்றைய வடிவில் உள்ளது!
உலகின் தலைசிறந்த சொல் செயல்!
சொல்லாமல் செய்தால் செயலுக்கு அழகு!
-செல்வா
Read my thoughts on YourQuote app at https://www.yourquote.in/selva-sankar-cgsnu/quotes/ceyl-maarrrrm-ennnptu-ceylil-ulllltu-peeccilum-collilum-col-b8tgi7
Friday, 18 June 2021
வள்ளுவம்!
வள்ளுவம் வாழ்வியலுக்கானது!
பயிற்றுவிக்க தவறிவிட்டார்கள்!
இன்றும் தாமதமில்லை,
இன்றே துவங்கினால்,
நன்றாய் துணைவரும்!
வாழ்வின் எந்த சூழ்நிலைக்கும்!
விடை கொடுக்கும் ஓர் அரிய புதையல் திருக்குறள்!
மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை
வாழ்விற்கு அருள் சேர்க்கும் அரும்பொருள்!
நாம் தமிழராக பிறந்த கொடை!
திருக்குறளின் உண்மை உணர்தலே!
-செல்வா!
Wednesday, 16 June 2021
Tuesday, 15 June 2021
Monday, 14 June 2021
தமிழ் போல் வாழ்க!
தமிழ் போல் வாழ வரம் வேண்டும்!
ஆண்டு பல நூற்றாண்டு கண்டும்!
தன்னகத்தே அனைத்தையும் கொண்டும்!
மாறுதலுக்கு தகவமைத்துக் கொண்டும்!
செழுமையிலும் வளமையிலும்
குறைவிலாமல் நிறைவாய்!
எல்லோருக்கும் சான்றாய்
சகிப்பின் ஊன்றாய் நிற்க!
எவர் எதை தேடிப்பயணித்தாலும்
தமிழில் அதற்கான விடை உண்டு!
தமிழ் போல் வாழ்வு கிட்ட
எவரும் வரம் பெற்று வர வேண்டும்!
-செல்வா!
Saturday, 12 June 2021
வாய்ப்பு!
வாழ்க்கை எப்போது யாருக்கு
வாய்ப்பளிக்கும் என்பது தெரியாது?
கற்பனைக்கு எட்டாத கனவும்
விற்பனைக்கு எட்டாத பொருளும்
இடைவிடாத முயற்சியால் எட்டும்!
வாழ்க்கை அதன் ஒவ்வொரு படிக்கும்
நம்மை வெகுவாய் தயார் செய்யும்!
வாய்ப்பு கிடைக்கும் வரை பயிற்சி செய்!
தக்க நேரத்தில் வெற்றிக்காக முயற்சி செய்!
வரலாற்றின் பக்கங்களில் சுவாரசியம் குறையாமல்
உனது கதையே சேர்த்திடு!
-செல்வா
Friday, 4 June 2021
பரிசு!
எனை முட்டிச்செல்லும் யாவும்
வல்லமை படைத்தவையே!
எனை விட்டுச்செல்லும் யாவும்
தகுதி அற்றவையே!
எனை கடந்து செல்லும் யாவும்
பாடம் கற்றுத்தந்தவையே!
எனை படர்ந்து செல்லும் யாவும்
உணர்வாளன் என உணர்த்தியவையே!
எனை இகழ்ந்து செல்லும் யாவும்
நானாக இருந்ததை காட்டியவையே!
எனை புகழ்ந்து செல்லும் யாவும்
கடமை இருக்கென சொல்லியவையே!
எத்தனே மனிதர் உலகில் அத்தனை புதுமை அதிலில்
ஒன்றாக படைத்திருந்தால்
படைப்பின் அருமை விளங்க
வாய்பில்லை அதனாலே
ஒன்றாய் படைத்து மனதை
பரிசாய் கொடுத்தான்!
பரிசோ நம்கையில்
பயன்பாடும் நம்கையில்!
விழி.எழு.விருட்சமாகுக!
-செல்வா!
Saturday, 15 May 2021
தனித்தன்மை!
தனித்திரு தனியாக எழு,
பிறரின் எதிரொலியாகாதே,
உனக்கான குரலாய் நீயே இரு!
பிறரை நகலெடுக்காதே,
தனக்கான சாயலாக நீயே,
வடிவமைத்துக்கொள்வாயாக!
இறைவன் படைப்பில் யாவரும் ஒன்றில்லை,
ஒரே மாதிரி படைக்கப்படவுமில்லை,
ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்!
தன்னகத்தை திறமை புதைந்து வைத்திருப்பவர்!
இதை கண்டறிந்தவர் வெல்வார்!
முதலில் நமது திறமையை கண்டறிவோம்,
பின்பு அதனை நன்றாக வளர்ப்போம்!
இறுதிவரை அதன் பலன் நிழல் போல் நமக்குத்தரும்!
விழி.எழு.விருட்சமாகுக!
-செல்வா!
Sunday, 9 May 2021
Thursday, 6 May 2021
நல்ல நேரம்!
இல்லாத நேரத்தை
எங்கு போய் தேடுவது
என பிதற்றுவோறே கேளீர்!
பொல்லாத நேரமாம் பேணாதோர்க்கு!
இல்லான நேரமாம் எண்ணாதோர்க்கு!
வீணான நேரமாம்
கழித்தோர்க்கு!
விரையமான நேரமாம் இகழ்ந்தோர்க்கு!
பயனான நேரம் யாருக்கு?
நேரத்தை தங்கம் போல
செலவழிப்பார்க்கு!
நேரத்தை உழைப்பில்
முதலீடு செய்வோர்க்கு!
காலம் தன் அரிய பரிசை அளித்திடும் காலம் வருமே!
விழி.எழு.விருட்சமாகுக!
-செல்வா
Wednesday, 5 May 2021
வேண்டுதல் பலிக்கட்டும்!
உலகம் சரியாகனும்
இயல்பு நிலை திரும்பனும்
இது எல்லோர் வேண்டுதல்கள்
நல்லோர் சிலர் செய்த
புண்ணியம் பலிக்கட்டும்!
அல்லல், நோய், இன்னல் இடர் அகலட்டும்
சூழ்நிலை மாறட்டும் கடவுள் உலகை காக்கட்டும்!
நிலையற்ற வாழ்வு என்பதை படித்த நாட்கள்,
இன்று கண்முன்னே கற்பனைக்கு மேலாக தெரிகிறது!
மேலும் தாங்க சக்தி யில்லாத எழைக்கு இறங்கிடுவாய்,
இறைவா மனித சக்திக்கு மேலானது உனதென அற்புதம் புரிந்திடுவாய்!
இறைவா ஏழைக்கு அருள்வாய்!
-செல்வா!
Friday, 30 April 2021
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!
உழைப்பாலே உயர்வு,
உழைப்பாலே வாழ்வு,
உழைப்பில்லையேல்,
உயர்வில்லை இங்கு!
ஊழின் வழி உயர்வு,
ஊழின் வழி வாழ்வு,
ஊழ் இல்லை யேல்,
உயர்வில்லை இங்கு!
உழவர் கை மடங்க உணவில்லை,
தொழிலாளர் கை மடங்க எதுமில்லை!
உழைக்கும் வர்கத்திற்கு கர்வம் உண்டு!
உழைப்பாலே உயர்ந்தோர் பலர் உண்டு!
உலகம் உழைப்பாளர்களை போற்றட்டும்!
உழைப்பின் பயனை முழுதாய் காணட்டும்!
இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!
Wednesday, 28 April 2021
தேர்வு!
எது வேணாமோ தவிர்த்திடு!
அதை பார்க்கவும் வேணாம்,
அதை பேசவும் வேணாம்!
அதை கேட்கவும் வேணாம்,
அதை பகிரவும் வேணாம்,
வேண்டாததை தவிர்க்க
வேண்டுவன பேசுவோம்
வேண்டுவன கேட்போம்
வேண்டுவன பார்ப்போம்
வேண்டுவன பகிர்வோம்!
அது நலமாக இருக்கலாம்
அது நல்லனவாக இருக்கலாம்
அது உதவியாக இருக்கலாம்
அது உற்சாகமாக இருக்கலாம்!
நம்பிக்கை விதைத்து நம்பி அறுவடை செய்வோம்!
எனில் நம்பி முயல்வோர்க்கு இப்பூவி ஏன் அப்பேர் பட்ட இறைவனும் உதவிட ஓடோடி வருவான்!
-செல்வா!
Sunday, 18 April 2021
வாழ்க்கை இனியதே!
வாழ்க்கை இன்னும் அழகானதே!
ஒப்பனைக்கு எட்டாத எழிலானதே!
எத்தனை காரணங்கள் இருப்பினும்
இனிதான வாழ்க்கையை மறுக்க இயலா!
நம் கண் கொண்டு காணும் புதினம் இது!
நம் புலன் கொண்டு உணரும் புத்துயிர் இது!
சலனமற்ற ஓடையில் மீன் நீந்திப்பழகாது!
அஃதே வாழ்வென்னும் சலனத்தில் நீச்சல் பழகு!
அதன் ஆழ அகலங்களையும் அலை உயரத்தையும்,
இயன்று பயின்று முயன்று இலக்கை அடைந்திடு!
நேரம் கிட்டும் போதெல்லாம்
அதன் எழிலினை ரசிக்க மறவாதே!
செடிக்கு நாள் ஒரு மேனி நீர் போல,
நம் நற்பார்வையே எந்நாளையும் புதிதாக்கும்!
மகிழ்ந்திரு, இன்று இல்லையேல் என்று?
-செல்வா!
Thursday, 8 April 2021
வானமே எல்லை!
வானமே எல்லை வாழும் வரை!
வானமே எல்லை வெல்லும் வரை!
விதி கொண்டோர் மட்டும் வென்றதில்லை!
மதி கொண்டோர் எட்டும் வென்றனர்!
நல்ல பழக்கம் வாழ்வை உயர்த்தும்!
நம்பிக்கை வெற்றி ஈட்ட உதவும்!
தண்ணீரில் முதலையின் வெற்றி உறுதி!
தரையில் புலியின் வெற்றி உறுதி!
தனக்கான இடத்தை தெரிவு செய்து கொள்!
தகுதியினை சலிப்பின்றி வளர்த்துக்கொள்!
வானம் என்ன, அண்டம் கூட கையில் எட்டும்!
விட்டுவிடாதே! எட்டும் தொலைவே கனவு!
-செல்வா!
Tuesday, 6 April 2021
சிட்டுக்குருவி!
சின்னதாய் சிறகடித்து!
சிலாகித்து வானில் பறந்து!
அங்கும் இங்கும் சீராய் சத்தமிட்டு!
கொஞ்சி கொக்கரித்து வட்டமிட்டு!
பறந்து திரித்து வானில் வலம் வந்து!
இடம் புறம் சிறிய இறகால் அளந்து!
மனிதனிடம் சிக்காமலும் பழகாமலும்!
தள்ளி நின்று வேடிக்கை காட்டும் உன் கூட்டுக்குள்!
ஒரே ஒரு நாள் மட்டும் விருந்தாளியாக வர ஆசை!
பட பட என இயங்கும் உலகை விட்டு!
உன்னுடன் ஒரு நாள் மட்டும் பறக்க ஆசை!
நிறைவேறா ஆசை எனினும்
கனவிலாவது நிறைவேற ஆசை!
-செல்வா!
Friday, 2 April 2021
செவிடு!
சிலநேரம் செவிடனாய் இருந்தால் என்ன?
தன்னை பற்றி புறம் பேசுபவர்கள் மத்தியில்?
தன்னை பற்றி புகழ்ந்து பேசுபவர்கள் மத்தியில்!
ஒத்துப்போகாமல் சண்டையிடும் வேளையில்!
குற்றம் கூறி குறை கூறி தட்டிக்கழிக்கும் வேளையில்!
சுற்றம் கூடி தகராறு புரிகையில்!
ஆசைச்சொற்கள் ஆளை விழுங்குகையில்!
அரசியல்வாதி வாக்குறுதி புரிகையில்!
கொஞ்ச நேரம் கேட்காமல் இருந்தால் என்ன?
எத்தனை இடர்களை தள்ளி நிற்கலாம்!
இடரெல்லாம் இடம் போகட்டும்!
நல்வாழ்வு வலம் வரட்டும்!
நல்லது நடக்க நல்லன கேட்டு!
நல்லது நடக்க நல்லன செய்வோம்!
விழித்திருப்போம்!
-செல்வா!
Saturday, 27 March 2021
அறுந்த வால்!
அறுந்து போன வால ஒட்ட முடியாது!
அதுபோல கடந்துபோன காலத்தை
நினைத்து பலன் கிடையாது!
சிலநேரம் எண்ணிப்பார்க்கலாம்,
சிலநேரம் வருந்தியும் பார்க்கலாம்!
ஏன் சில நேரம் கண்ணீர் கூட விடலாம்!
இறுதியில் கடந்த காலம் கடந்ததே!
முடிந்ததை எண்ணி எண்ணி
இயன்றதை விடாதே!
கடந்ததை எண்ணி எண்ணி
கனத்து விடாதே!
இன்றும் இன்றைய கணமும் நிச்சயம்!
ஏதேனும் செய்ய மீதம் இருந்தால் செய்திடு!
இல்லையேல் புதிதாய் பிறந்தோம் என நினைத்திடு!
வரும் நாள் வசந்தமாகட்டும்!
வாழ்க்கை இன்பமாகட்டும்!
-செல்வா!
Friday, 19 February 2021
வீரா!
சென்று வா வீரா!
வென்று வா வீரா!
வாழ்க்கை ஓர் போர்களமோ,
வாழ்க்கை ஓர் பூக்களமோ!
உன் எண்ணத்தின் கண் முன் நிற்கிறது!
போர்க்களமும் பூக்களமே மனமிருந்தால்,
பூக்களமும் போர்க்களமே முள்ளை மட்டும் பார்த்தால்!
வலியவனும் மெலியவனே எண்ணாவிடில்!
மெலியவனும் வலியவனே தீர எண்ணிவிடில்!
விடியல் உண்டு விழித்துக்கொள்!
விழி.எழு.விருட்சமாகுக!
Thursday, 4 February 2021
கர்மா!
கடவுளை ஏன் கேட்கிறாய்!
சிந்தை செய்து பார் மனமே,
ஒரு முறை கூட மனதிடம் கேளாயோ?
விதைத்த விதை என்றும் உறங்காதே,
அது போலே நினைத்த நினைவும் என்றும் உறங்காதே!
கருத்தினை கனவில் கொண்டு!
நினைப்பினை மனதில் கொண்டு!
செய்கையை கையில் கொண்டு!
உண்மையை கண்டுகொண்டு!
மெய்மையை உணர்வோம்!
வாழ்வினில் உயர்வோம்!
கடவுளிடம் முறையிட நேரமில்லை!
நன்றி பட்டியல் முடிவதற்குள்!
-செல்வா!
Wednesday, 3 February 2021
தேடல்!
தேடினால் தானே புதையல் கிடைக்கும்?
தேடாமல் தேவதை கிடைத்தாலும்!
தேடாமல் தேவாமிருதம் கிடைத்தாலும்!
பவுசும் மவுசும் ஒருபோதும் கிடைத்ததில்லை!
தேடி அடைவதே வாழ்வின் பயணம்!
தேடி தொலைவதே வாழ்வின் பயணம்!
தேடல் கிடைத்தாலும் வாழ்க்கையில் வெற்றி!
தேடல் கிடைக்காவிடில் அனுபவத்தில் வெற்றி!
தேடித்தொலைந்திடுவோம்!
தொல்லைகளே தெரியாத களமிது!
தயாரா...தகுதி பெற...தயாரா!
-செல்வா
Wednesday, 27 January 2021
உழைப்பு!
உழைப்பு!
நாளை மாற்றத்திற்காக இன்று உழைப்போம்!
நாளை நன்றாக மலர இன்று உழைப்போம்!
சில வேலைகளில் அயர்ந்தாலும்!
சில வேளைகளில் சோர்ந்தாலும்!
தாளாமல் தளராமல்
உழைப்பால் உயர்வோம்
தன்னிகர் அடைவோம்!
நமக்கான முத்திரையை
நாமே பதிக்க வேண்டும்!
உயர்ந்தோர் எல்லாம்
ஓர் நாளில் வளரவில்லை!
அதுபோல உழைத்தோர் வீண்போனதாக சரித்திரமில்லை!
உழைப்பால் உலகை வெல்வோம்!
இவ்வுலகமும் காத்திருக்கிறது உனக்காக!
விழி.எழு.விருட்சமாகுக!
-செல்வா!🦋
Tuesday, 26 January 2021
என் தேசம்!
என்தேசம் வலிமையானது!
என் தேசம் இளமையானது!
மாறி வரும் சூழலுக்கேற்ப
தன்னை தகவமைக்கும்
வடிவம் கொண்டது!
வேற்றுமை பலபல இருக்க
ஒற்றைமை குறையாத தேசமிது!
புதுமை பலபல கண்டு
கால் பதித்திடா துறை
இல்லா வண்ணம்
ஏற்றம் வரட்டும்!
இந்த குடியரசு தின
நன்னாளில் குடிமை
மலரட்டும்!
இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!
-செல்வா!
Monday, 18 January 2021
திருவள்ளுவர்!
நெடுந்தமிழின் பொற்கலைஞனே!
உன் பாக்களால் தமிழெங்கும் பூவாசம்!
கற்போர் கற்கும் விதம்!
காண்போர் வியக்கும் விதம்!
வாழ்வில் பயில்வோர் மகிழும் விதம்!
ஈரடியில் இணையில்லாமல் சொன்னாய்!
கற்றல், கேட்டல், நட்பு, அரண், பகை
உளவு, ஈதல், அறம், பொருள், இன்பம்!
அனைத்தும் அமிழ்தம் போல் தந்தாய்!
நீர் வாழி நின் குறள் வாழி
தமிழ் வாழி வாழ்வாங்கு வாழி!
-செல்வா!


















































