தொடர் ஓட்டம்!
காலங்கள் கடக்கின்றன,
மாயங்கள் நடக்கின்றன!
தொடர் ஓட்டத்தில்
தொடர்ந்து ஓடினால்
இலக்கை அடைந்திடலாம்
ஆனால் எத்தனை முறை
தொடர்ந்தோம் கேள்விக்குறி?
சில சமயம் ஏன் ?
பல சமயங்களில்
எல்லையின் தூரம்
கண்களை அச்சுறுத்தும்
கால்களை பலவீனமாக்கும்
ஆனால் மனதின் பலத்தால்
சாதித்தவை பல உண்டு!
நம் வாழ்விலும் உண்டு!
நம்பிக்கை வைத்து ஓட,
தூரமும் பாரமும் குறையும்!
காலங்கள் கடந்து செல்ல
மாயங்கள் நிகழ்ந்து விடும்!
விழி.எழு.விருட்சமாகுக!
-செல்வா

No comments:
Post a Comment