செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 5 June 2018

தவிர்ப்போம் நெகிழி (பிளாஸ்டிக்)!!!

பிளாஸ்டிக் இதை நெகிழி என்றழைப்பர் தமிழில்!

நெகிழி இல்லாத வாழ்வு இன்று அரிதில் அரிது!
அப்படிப்பட்ட வாழ்வின் கனவு விரிகிறது!

பஞ்சு மெத்தையிலிருந்து துயில் எழுந்து!
பித்தளை நல்லி திறந்து முகம் கழுவி!
வேம்பு, ஆலம் குச்சியால் பல்துலக்கி!
இரும்பு வாளியில் நிறைந்த நீரால் குளித்து!
கீழ் அமர்ந்து சம்மணமிட்டு உலோகத்தட்டில் உண்டு!

பொது போக்குவரத்தில் அலுவலகம் சென்று!
நடந்து திரிந்து அன்றாட வேலைகளை பார்த்து!
தேவை என அறிந்து மட்டும் நகல் எடுத்து!
மை பேனாவால் கையொப்பமிட்டு!
தரவுகளையும், கோப்புகளையும், மேற்பார்வையிட்டு!
மீண்டும் வீடு வந்து தொடர்வதே அன்றாடமாகும் !
இது காணக்கிடைக்காதது!வாஞ்சையான வாழ்வது! 

நெகிழி உபயோகிக்காத நாள் சாத்தியமா?
இப்படி வசித்திட முடியுமா ? வாழமுடியுமா?
என்று எண்ணக்கூட நேரமில்லை நகரத்தார்க்கு!

நெரிசலில் மட்டும் பிதுங்கவில்லை நகரம்!
மக்களின் மக்காத கழிவுகளாலும் பிதுங்குகிறது!

 கழிவுகளை நிரப்பி நிரப்பி நிலத்திடி நீர் கீழே போகவில்லை!
புகை மாசுக்களால், பசுமை வாயுக்கள் நிரம்பி நீராவி மேலே செல்லவில்லை!


தார் சாலைகளும், கான்கிரீட்களும் மரத்திற்கு மாற்றாகுமா?
மனிதன் ஓடிய ஓட்டத்தில் இயற்கையில் இருந்து,
வெகுதூரம் சென்றுவிட்டான்!
விழித்துக்கொள்க! வெகு தூரமில்லை!

முழுவதும் மாறாவிட்டாலும்!
முடிந்தவரை நெகிழி உபயோகிப்பதை குறைத்தால் மாற்றம் வரும்!

நமது நாளை நலமாக இருக்கும்!
மாற்றத்தின் வித்து நாமாக இருப்போம்!
மாற்றம் நம்மிடமிருந்தே ஆரம்பமாகட்டும்!

கை கோர்ப்போம்! சுற்றுச்சூழல் காப்போம்! நெகிழியை தவிர்ப்போம்!

-செல்வா


No comments:

Post a Comment