செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 26 June 2018

மழை!!!

 மழை!!!

நீர் என்ற பெண் கொண்ட கருநிற ஆடை மழைமேகம்!
அது காற்றுடன் கொஞ்சிப் பேசி சிரிக்கையில்,
உதிர்க்கும் புன்னகை மழை!!!

சுத்தமானவை எரிக்கும் குணமுடையவை!
ஆனால் நீ மட்டுமே, தாயன்பு கொண்டு குளிர்விக்கிறாய்!


உன் திருமேனி தீண்ட எவர்கும் ஆசையே!
குழந்தை முதல் குமரி வரை!
கன்று முதல் களிறு வரை!
விதை முதல் மரம் வரை!
உன்னை தீண்ட யாருக்கும் இன்பமே!

சாதி, மத வேறுபாட்டால் தீண்டாத இவ்வுலகில்!
பாகுபாடின்றி அனைவரையும் தீண்டும் ஓரே அழகி நீயே!
உன் அழகை கண்டு ரசிக்க விதை முளைக்கிறது!
தூங்கும் இலைகள் கண்விழித்து துலங்குகிறது!
வேருக்கும் ஆசை தான் உன்னுடன் பேச!
ஆனால் வெளியில் தெரியாததால்,
மண்ணிடம் நலம் விசாரித்துக்கொள்கிறது!

உன் கொள்ளை அழகால் இவ்வுலகம் உயிர்க்கட்டும்!
பருவம் தவறாமல் வந்து எங்களை பார்த்துவிட்டு செல்!
உன் வாசத்தால் ஒளிரட்டும் எங்கள் மண்ணும், எங்கள் வாழ்வும்!


உன்னை தீண்ட துடிக்கும் குழந்தையில் நானும் ஒருவன்!
உன்னை கண்டு களிக்கும் விதைகளில் நானும் ஒருவன்!
உன்னை பிரதிபலிக்க நினைக்கும் புற்களில் நானும் ஒருவன்!
உன்னை காண காத்துக்கிடக்கும் கவிஞரில் நானும் ஒருவன்!

-செல்வா...


No comments:

Post a Comment