செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 23 June 2018

வேறென்ன வேண்டும் எனக்கு!!!

வேறென்ன வேண்டும் எனக்கு!

உண்பதற்கு உணவு கொண்டேன்!
உடுப்பதற்கு உடை கொண்டேன்!
உறக்கத்திற்கு வீடு கொண்டேன்!
காண்பதற்கு கண்கள் கொண்டேன்!
செயலாற்றும் ஐம்பொறிகள் கொண்டேன்!

உலக மூத்த குடி தமிழ் குடியில் பிறவி கொண்டேன்!
முத்தமிழ் படிக்கும் பேறு கொண்டேன்!
எக்காலமும் இயங்கும் நல்தமிழ் இளமையைக் கண்டேன்!

வளர்வதற்கு நல்பெற்றோர் அருளால் கொண்டேன்!
விளையாடுவதற்கு நல்நண்பர் கொண்டேன்!
பகிர்வதற்கு சிறந்த உற்றார்  கொண்டேன்!
பழகுவதற்கு சிறந்த சுற்றம் கொண்டேன்!
கற்றுக்கொடுக்க நல்ஆசிரியர் கொண்டேன்!

மகிழ்வதற்கு நல்செயல்கள் கொண்டேன்!
நினைவிற்கு நல்காரியம் கொண்டேன்!
வரவிற்கு நல்வேலை கொண்டேன்!
செலவிற்கு நல்லன பலவாங்கிக் கொண்டேன்!

இத்தனை நல்லன இருந்தும்,
சில நேரம் இன்னல்கள் வரக்கண்டேன்!
அவை அத்தனையும் உன்அருளால் களைந்து,
நிறைவு பெறக்கண்டேன்! 

கொண்டவை அனைத்தையும் நினைத்துப்பார்த்தால்!
உன் கிருபைக்கு நிகர் இங்ஙனம் தர யாருமில்லை எனக்கண்டேன்!

இறைவா உனக்கு நன்றிகள் பல!!! 
இயங்கும் விதம் என்னை படைத்தமைக்கும்,
இத்தனை நல்லவைகளை கொடுத்தமைக்கும்!

இன்னபல உதவிசெய்து,
நித்தம் துணைபுரிந்து,
நிம்மதி தனை தந்து!

தத்தம் காலத்தில் காரியங்கள் நிகழச்செய்து!
பயிற்றுவித்து, தேற்றி, ஊக்கமூட்டி!
என்னை காத்தருள்பவனே!
உனக்கு கோடான கோடி நன்றிகள்!!!

-செல்வா

No comments:

Post a Comment