செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 22 June 2018

இயற்கை வளம் காப்போம்!

இயற்கை வளம் காப்போம்!

நதி ஒருகாலத்தில் நீர் ஓடிய பள்ளம்!
இன்றோ மணல் அள்ளும் பள்ளம்!

மலை ஒரு காலத்தில் விலங்குகளின் வாழ்விடம்!
இன்றோ நாகரீக மனிதனின் வளர்ச்சி திட்டத்திற்கான இடம்!

குளம், கன்மாய், ஏரி ஒரு காலத்தில் பாசனத்திற்கான குட்டை!
இன்றோ மக்களின் கழிவு நீர் ஓடி தேங்கி நிற்கும் குட்டை!

கடல் ஒரு காலத்தில் முத்து,பவளம் மற்றும் மீன்களின் வாழ்விடம்!
இன்றோ நெகிழி மற்றும் ஆலைக்கழிவுகளின் உறைவிடம்!

வளர்ந்த நாடுகள் தங்களின் இயற்கையை கவனமுடன் பாதுகாக்கின்றன!
வளரும் நாடுகள் வளர்ச்சி என்னும் கவர்ச்சியில்,
இயற்கையை இழந்து தவிக்கும் நாளுக்கு தூரமில்லை!

உலக வெப்பம் ஒரு டிகிரி உயர்ந்தன!
பனி உருகி கடல் மட்டம் உயர்ந்தன!
நல்ல காற்றில் மாசுக்கள் கலந்தன!
மழை பொய்த்து வஞ்சிக்கின்றன!

நதி வறண்டு பாழாகின!
தண்ணீர் பஞ்சம் உயிர் வாட்டுகின்றன!

இன்னுமா புரியவில்லை  மனித இனம்,
இயற்கையிலிருந்து வெகு தூரம் சென்றமைக்கான விளக்கம்!

கலக்கம் வேண்டாம்!
வளர்ச்சி என்ற கவர்ச்சி வேண்டாம்!
இருப்பதையாவது காக்க வேண்டும்!
இயற்கை காக்க வேண்டும்!

மரம் வேண்டும், காடு தழைக்க!
காடு வேண்டும், மழை கிடைக்க!
மழை வேண்டும், விவசாயம் செழிக்க!
விவசாயம் வேண்டும், மனிதன் உயிர்க்க!
மனித
ன் உயிர் வாழ இவை எல்லாம் வேண்டும்!

வளர்ச்சி வேண்டும்!
இயற்கையை அழிக்கா வண்ணம்!
இயற்கையை அழிக்காதீர்! இயற்கையை பழிக்காதீர்!

நாளைய தலைமுறைக்கு நல்லன விட்டுச்செல்வோம்!!!

வாரீர்!!! வாரீர் !!! வாரீர் !!! வாரீர் !!!

வாழ்க தமிழ்நாடு! வாழ்க பாரதம்!

-செல்வா


No comments:

Post a Comment