செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 18 June 2018

தகப்பன் சாமி!!!

நிழலில் அல்லாமல் நிஜத்தில் ஓவ்வொருவரும் பார்த்த கதாநாயகன் அப்பா!
ஆண்மகனாய் பிறந்ததால் அன்பை வெளிப்படுத்த தெரியாத நாயகன்!

அவரின் ஆசைகள் அந்த குடும்பமும் அதன் மகிழ்ச்சியுமே!

தான் பட்டினி கிடந்தாலும் தனது உற்றவர் ஒருநாளும் அப்படி இரார்!
இவ்வுலகில் தன்னலம் துறத்தலை பயிற்றுவிக்கும் முதல் ஆசான் அப்பா!

எத்தனை கடினமான காலமானாலும்,
அசாத்திய முயற்சியால் வென்றெடுக்கும் மாவீரன்!
ஓடி, ஓடி, அயராது உழைக்கும் கடிகாரம் போன்றவர்,
பல காலம் கடிகாரமும் தோற்றுவிடும் அவரிடம்!

குழந்தைகளின் கடந்தகால உறுதுணை!
நிகழ்கால நண்பணும் தோழனுமாவார்!
எதிர்கால வழிகாட்டி அவர்!

நான் இருக்கிறேன், பார்த்துக்கொள்வேன் என்ற வார்த்தை போதும் சாதிப்பதற்கு!
நான் நாளும் பார்த்து வியக்கும் எனது கதாநாயகன்!
அன்பான பண்பான இல்லாளன்! என் தகப்பனே!

நீங்கள் செய்த நன்றிக்கு,
கைமாறு செய்யும் காலம் தேடி தவமிருக்கிறேன்!
உங்கள் பெயரும் புகழும் எத்திசையும் மணக்கச்செய்வதே,
இந்த மகன்/மகள் தந்தைக்காற்றும் உதவியாகும்...


அன்புடன்

செ.செல்வா



No comments:

Post a Comment