செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 19 June 2018

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

குழந்தை பருவத்தில் அம்பாரி ஏற்றி குதூகலித்தவர்!
வயது வளரும் பருவத்தில் இடையூறாக தெரிகிறார்!


இங்கு இருவரும் தோழரில்லை என்பதே காரணம்!
இவரும் பயில்வதில்லை அவரும் முயல்வதில்லை!


அப்பா பலருக்கு பணம் காய்க்கும் எந்திரம்!
அறிவுரைகள் நிறைந்த நடமாடும் கிராமபோன்!
முட்டுக்கட்டைகள் போடும் எதிர்தர வாதி!
அவரும் நம்வழி வயது முதிர்ந்தவர் என்பது நமக்கு ஏன் புரிவதில்லை?

ஓடி, ஓடி உழைத்தவர் சற்று தள்ளாடும் நேரமிது!
பாடு பட்டு களைத்தவருக்கு இளைப்பாறும் நேரமிது!

நம்மவருக்கு தோள் மீது அம்பாரி தேவையில்லை!
தடுமாறும் பொழுது உங்கள் கைத்தாங்கல் போதும்!
மனம் பட்டுப்போகையில் உங்கள் கனிவான பேச்சு போதும்!

ஆளுமையான மனிதனை உங்கள் அன்பினால் கட்டிப்போடுங்கள்!
உங்களுக்குப் பிடித்ததை தேடித்தேடி தந்தவருக்கு,
நேரத்திற்கு உணவளியுங்கள்!
இன்முகத்தோடு உரையாடுங்கள்!

அவர் படும் பாட்டை உணர,
நாம் அம்பாரி சுமக்கும் நேரம் வரை காத்திருக்க வேண்டாம்!
இன்றே துவங்குவோம்! இயம்புவோம் இருப்பது ஓர்வாழ்வு!
இளமையின் செழுமையை அவர்களிடமும் அள்ளித்தெளிப்போம்!
இளந்தளிரின் வாசம் அவர்களிடமும் மணக்கட்டும்!

இன்று அல்ல என்றும் நம் தந்தை சொல் மிக்க ஓர் மந்திரமில்லை!

-செல்வா

No comments:

Post a Comment