வாழ்க்கை இனியதே!
வாழ்க்கை இன்னும் அழகானதே!
ஒப்பனைக்கு எட்டாத எழிலானதே!
எத்தனை காரணங்கள் இருப்பினும்
இனிதான வாழ்க்கையை மறுக்க இயலா!
நம் கண் கொண்டு காணும் புதினம் இது!
நம் புலன் கொண்டு உணரும் புத்துயிர் இது!
சலனமற்ற ஓடையில் மீன் நீந்திப்பழகாது!
அஃதே வாழ்வென்னும் சலனத்தில் நீச்சல் பழகு!
அதன் ஆழ அகலங்களையும் அலை உயரத்தையும்,
இயன்று பயின்று முயன்று இலக்கை அடைந்திடு!
நேரம் கிட்டும் போதெல்லாம்
அதன் எழிலினை ரசிக்க மறவாதே!
செடிக்கு நாள் ஒரு மேனி நீர் போல,
நம் நற்பார்வையே எந்நாளையும் புதிதாக்கும்!
மகிழ்ந்திரு, இன்று இல்லையேல் என்று?
-செல்வா!

No comments:
Post a Comment