செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 19 December 2020

 எழுந்து வா!


மீண்டும் ஒரு கனவை சுமக்கிறது இம்மனது!

மீண்டு எழ துணை போகிறது இக்கனவு!


மாண்டு மண்தனில் விழுந்த போதிலும் 

மாந்தர் சூழ்ச்சிதனில் வீழ்ந்த போதிலும்! 

புறமுதுகினை காட்டாத தனித்துவம் எனது!


தோற்றாலும் நேர்மையின் கண் தோற்பேன்!

வென்றாலும் வாய்மையின் கண் வெல்வேன்!


இது என் அறம் தமிழ் தந்த வரம்!

இது என் நடை தமிழ் தந்த கொடை!


மீண்டும் ஓர் புதிய கனவு புதிய தொடக்கத்திற்கான அரிய நிகழ்வு!


எழுந்து வா!


விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா!



Saturday, 28 November 2020

 எண்ணங்கள்!


எண்ணங்களில் வண்ணம் சேருங்கள் வாழ்க்கை வண்ணமாகும்!


எண்ணங்களில் ஒளியேற்றுக

வாழ்க்கை ஒளிபெரும்!


எண்ணங்களில் நம்பிக்கை விதையுங்கள் வாழ்க்கை விருட்சமாகும்! 


எண்ணங்களே வாழ்வை விதைக்கும்!

எண்ணங்களே வாழ்வை வளர்க்கும்!

எண்ணங்களை வாழ்வை தீர்மானிக்கும்!


இனி ஏன் தாமதம் வா நல்லதை நினைப்போம்!


-செல்வா!








Sunday, 22 November 2020

 பெண்ணே!


தூரம் உன்னை என்ன செய்யும் பெண்ணே?

துவளாத இரு கால்கள் இருக்கும் வரை! 


பாரம் உன்னை என்ன செய்யும் பெண்ணே?

தாங்கி நிற்க வலுவான தோள் இருக்க!


நேரம் உன்னை என்ன செய்யும் பெண்ணே?

யாருக்கும் பணியாத நேர்மை இருக்க!


வீரம் உரைத்த பல பெண்கள் உண்டு!

வெற்றி படைத்த பல பெண்கள் உண்டு!


வரலாற்றில் உனக்கும் ஓர் இடமுண்டு!

அதை நீயே எழுதிட செயலால் விரைந்திடு! 


-செல்வா!



Saturday, 21 November 2020

 உயரே பறந்திடு! 


ஏறித்தீர இன்னும் எத்தனை படிகள்!

ஏறாமல் தடுக்க எத்தனை தடைகள்!


ஒவ்வொன்றாக ஏறி இலக்கடைய 

எத்தனை சீரிய நோக்கம் வேண்டும்!


ஒவ்வொன்றாக தடைகள் களைய

எத்தனை உறுதியான மனம் வேண்டும்! 


இலக்கு ஒன்றை தீர்மானித்தேன்!

அடையும் வரை உறங்கமாட்டேன்!


விடியும் வரை விண்மீன் தெரியும்!

உறங்கிக்கிடந்தால் எப்படி தெரியும்!


விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா!



Monday, 19 October 2020

ஆறாய் ஓடும் வாழ்வு!


ஆறாய் ஓடும் வாழ்வினிலே!

பாதை நெடுக பாறை வரினும்,

பள்ளங்கள் பல கடக்க நேரிடுனும்!

நீரோட்டத்துடன் நிற்காமல் செல்கிறது நம் வாழ்வு!


இருளான நேரத்தில் கிடைக்கும் அருளும்!

இடரான நேரத்தில் கிடைக்கும் பொருளும்!


நம் நம்பிக்கைக்கு ஊற்று நீரே!


எவ்விடத்திலும் தங்காத நீர் கெடுவதில்லை,

மாறாக எல்லையில்லா முடிவிலியாகிறது!


அதுபோலவே சில பல இடர்களில் தங்கிடாதே!

பெரிய பரிசுகள் இவ்வுலகில் முயற்சிப்பவர்க்கே  சாத்தியம்!


-செல்வா!


Friday, 16 October 2020

 நேரமின்மை!


நேரத்தை இரவல் வாங்குங்கள்!

வாழ்க்கை இனிமையாகும்!


பேசும் நேரத்தை துறந்தால் மேதை யாகலாம்! 

ஓய்வு நேரத்தை துறந்தால் அறிஞன் ஆகலாம்!

தூங்கும் நேரத்தை துறந்தால் ஞானி ஆகலாம்!


மொத்தத்தில் மனிதனாக ஆக,

என்ன கடன் வாங்க வேண்டும்!


மனிதனாக ஆக கடன் வாங்கனால் இயலாது,

வரம் தான் வாங்கி வர வேண்டும் மனிதனாக!


மனிதம் உணர்வோம் தினமும் மகிழ்வோம்!


-செல்வா!


Thursday, 15 October 2020

எ.பி.ஜே.அப்துல்கலாம்!


கனவு நாயகரே வாழ்நாள் சாதனையாளரே!

பல இளைஞர் உள்ளத்தில் எதிர்கால

கனவை விதைத்தவரே!


அறிவியலும் ஆன்மீகமும் வேறில்லை 

ஒன்றில் மற்றொன்றை ஆழ்ந்து உணரலாம்

என்று உரைத்து உணர்த்தியவரே!


நீங்கள் தூவிய விதை ஒருபோதும் உறங்காது!

வளர வேண்டுமானால் சிறிது நேரம் எடுக்காலம்!

இவ்விதை ஓங்கி உயர மரமாக வளரும் ஓர்நாள்!


அதன் பயனே உமக்கும் எமக்கும் வெற்றியாகும்!


-செல்வா!



Thursday, 8 October 2020

 நேரம்!


இல்லை என்றால் 

என்றுமே இல்லை!

இருக்கிறது என்றால்

அளவிலாமல் இருகிறது!


மனம் என்னும் மாயாவி 

சுகம் என்னும் சூட்சமத்தை

விட முடியாமல் உழல்கிறான்!


நேரத்தை இல்லை என்று மனதை தேற்றாமல்!

நேரம் இருக்கு என்று மனதில்  நினைத்துப்பார்! 


மறைந்திருந்த நேரமெல்லாம்!

மடை திறந்த வெள்ளமாய் வரும்! 


காலம் உன்வசம் கனவும் உன்வசம்

உழைப்பு உன்வசம் வெற்றியும் உன்வசம்!


விழி! எழு! விருட்சமாகுக!


-செல்வா!


Sunday, 4 October 2020

 சிந்தனை!


சிந்திக்க பழகிடு மனிதா,

சிகரம் பல அடைவாய் நீ மனிதா!


சிந்தனையை அகலமாக்கு மனிதா,

சிறந்த படைப்புகள் நீ படைத்திடுவாய் மனிதா!


சிந்தனையை விரித்திடு மனிதா,

சீரான வாழ்வு வசப்படும் ஓ மனிதா!


சிந்திக்கத் தெரிந்தவனை அடக்கமுடியாது!

சிந்திக்கத் தெரிந்தவனை ஒடுக்க முடியாது!


சிந்தை அது வலிமையான விந்தை,

வாழ்வை மாற்றிடும் அரிய செய்கை!


விழித்திடு, உன் வாழ்வும் 

தாழ்வும் உனது கைகளிலே!


-செல்வா!




Sunday, 27 September 2020

சாதனை!


ஓடும் நீரில் நீந்த பயந்தால் 

மீன் ஒருபோதும் நீச்சல் பழகாது!

எதிர் காற்றில் பறக்க பயந்தால் 

பறவை ஒருபோதும் பறக்காது!


இடர்கள் என்ன? இன்னல்கள் என்ன?

சுடராய் ஒளிர்ந்திடு, மின்னல்கள் தந்திடு...


இருந்த இடத்தில் இடர்களை கண்டு 

பயந்திடின் சாதனை படைப்பது எப்போது! 


இன்று செயல்பட்டால்,நாளை உனதாகும்!


-செல்வா










Tuesday, 1 September 2020

 போர்க்களம்!

கொட்டித்தீர்க்க ஒரு கடல் வேண்டும்!
கத்தித்தீர்க்க எதிரொலி இல்லா அறை வேண்டும்!

திட்டித்தீர்க்க எதிரில் சுவர் வேண்டும்!
தட்டித்தீர்க்க இரும்பு மார் வேண்டும்!

மானுடம் மறந்த மனிதர்கள் மத்தியில்,
குறை மட்டுமே நிறைவாய் தெரியும்!
குறை தவிர மற்றவை மறைந்தா போகும்?

மனமே பொறுமை கொள்!
உனக்கான களம் இதுவே!
களமாடி விளையாடு!
உனக்கான களமதை 
நீயே உருவாக்கிடு!

-செல்வா!



Saturday, 29 August 2020

 ஏறு முன்னேறு!

 கடந்த காலங்களை நினைவில் கொள்...

 

உனது  விடாமுயறச்சியால் இத்தனை தூரம் நடந்தாய்,

கடந்தாய்நிலைபெற்றாய்!

 

யாரும் உன்னை தடுக்கவில்லை!

எதுவும் உன்னை ஏற்றிவிடவில்லை!

 

உனக்கான நாள் வரும்,

உனதாற்றல் புலப்படும்!

அது வரை பொறுமை கொள்!

 

விழி உள்ளவனுக்கோ ஆயிரம் வழி!

விழி அற்றவனுக்கோ எல்லாம் குழி!

 

வழியும் குழியும் ஒருங்கே வந்தாலும்,

விழித்திருப்பவம் தப்பிவிடுவான்!

 

இனிமேல் எல்லாம் உன்வசம்!

 

விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா!




Friday, 14 August 2020

 எனது இந்தியா!

எனது இந்தியா நான் கண்ட கனவிலே நிற்கிறது!
எனது இந்தியா நான் படித்த புத்தகத்திலே தங்கியது!

தேங்கிக்கிடக்கும் வேற்றுமைகள் களையப்படுவது எப்போது?
சிதறிக்கிடக்கும் ஒற்றுமைகள் சேர்வது எப்போது? 

புதிய இந்தியா அவ்வப்போது பிறந்ததாக அறிந்தேன்!
ஆனால் ஒரு போதும் அது வளர்ந்ததாக அறியவில்லை!

நாம் படித்த வேற்றுமையில் ஒற்றுமை என்று நிறைவேறும்?
நாம் நேசிக்கும் வேற்றுமையில் ஒற்றுமை என்று நிறைவேறும்! 

பல பல தலைவர்கள் கண்ட கனவும்,
பல பல இளைஞர்கள் உழைப்பும் ஒருசேரவும்!
தன்னிறைவான தேசம் தன்னிலே மலரட்டும்!

இந்த சுதந்திர திருநாளில் மலரட்டும் நல்இந்தியா! 

வாழ்க பாரதம்.வளர்க பாரதம்!

-செல்வா!

Thursday, 13 August 2020

 முயல்!

பனி படர்ந்த சாலை ஓரம்,
வழிகாட்டும் தளிர் மலரே! 
தளர்வரியாத உன் முகம் 
காண ஓடிவரும் வண்டு நான்!

மணம் கமழ்ந்து நீ வீற்றிருக்க,
மதி மயங்காமல் என்னவாகும்!
மலை அழகோ மதி அழகோ 
மனம் வியக்கும் நீ அழகோ!

அயல் அல்லாத கயல் நீ,
புயல் அல்லாத அலை நீ,
மயல் அல்லாத இயல் நீ,
பயல் அல்லாத முயல் நீ!

நானோ முயன்றேன்,
நானே முயல்கின்றேன்!
அடையாமல் தீராது இந்த 
முயல் ஆமை பந்தயம்!

-செல்வா!

#முயல் #தமிழ்கவிதை #கவிதை #இன்பம் #குழந்தை #இனியதமிழ்செல்வா 
#Kavidai #iniyatamilselva #child #alwayshappy #Behappt


Monday, 27 July 2020

அம்மா!
அழகான ஓவியம் நீ!
எத்தனை கவிதைகள் 
வரைந்தாலும் போதாது 
அம்மா உன் பெருமைக்கு 
அது ஈடாகாது இணையாகாது!

எனை சுமந்த உனக்கு 
மறுகை என்ன செய்வேன்
எத்தனை செய்தாலும்
சிறு கையில் ஊட்டிய
கூழ் போல சிறியனவே!

எத்தனை பிறவி எடுத்தாலும் 
உன் மடியில் நான் தவழ்ந்திட 
வரம் தருவாய்  நீ எனக்கு
தாயே அச்சொல்லின்
பொருள் உணர்ந்தேன் 
உன் செழுத்த அன்பிலே!
தேர்ந்த நற்பண்பிலே!

உன் போல் யாராலும் 
தர இயலாது அவ்வன்பு
என்றும் மாறாத அன்பு! 

வாழி நீர் வாழி...

-செல்வா!





























































































































Tuesday, 14 July 2020

இயற்கை எழினி!

தூரத்து நிலவும் பக்கம் தெரிகிறது!
என் பாரமெல்லாம் பஞ்சாய் மாறுகிறது!

வானத்து தேவதையே,
முகில் என்ன உன் உறவோ,
மின்னல் என்ன உன் தூதரோ,
இடி என்ன உன்  தோழியோ,
தூரல் என்ன உன் கோபமோ!

ஏதேதோ வந்து செல்கிறது,
உனது வருகையை சொல்ல!
எதேதோ நின்று செல்கிறது,
உனது அருகாமையை சொல்ல!

கனவுலக ராணியே!
நினைவுலக தேனீயே!
பாதை மறவாதே!

-செல்வா!

Monday, 13 July 2020

பஞ்சம்!

கவிஞனுக்கு உவமை பஞ்சமில்லை!
குழந்தைக்கு தூக்கம் பஞ்சமில்லை!

நிலவுக்கு வானம் பஞ்சமில்லை!
மழைக்கு நிலம் பஞ்சமில்லை!

எனக்கு மட்டும் நினைவுப்பஞ்சம்!
கொஞ்சம் நஞ்சம் இல்லா அதீதபஞ்சம்!

தீயாய் பரவும் பசியாய்!
ஆறாய் விரியும் நீர் திமிலாய்!

நீளும் உந்தன் நினைவுப்பஞ்சம்! 
தாளாதோ இப்பஞ்சம் காணாத நாள் வரை!

-செல்வா!


Wednesday, 1 July 2020

மழை முகில்!

மழையினில் முகம் புதைத்தாய்
முகிலென மனதில் வட்டமடித்தாய்!

எங்கோ உள்ள சந்திரன் இன்று,
என் அறை சன்னல் அருகில் வந்தது,
தூது ஒன்று தந்து சென்றது!

நான் காண மறந்த அந்த எழிலினை!
நான் காண வேண்டி ஒரு கடிதம் தந்தது!

நிலவின் அழகிற்கு நிகரானவளே!
நின் அழகில் இப்புவியும் மறந்து சுழல்கிறது!

நிற்கச்சொல்லி நிதம் வேண்டுகிறேன்!
ஒரு போதும் காதில் விழவில்லை ஏனோ!

-செல்வா!
வாராயோ தோழா!

வாசல் வரை வந்து நின்றேன்
நீ வருவதாக தெரியவில்லை!

வீதி எங்கும் தேடி அலைந்தேன்
நீ வருவதாக தெரியவில்லை!

ஊர் எங்கும் தேடித்திரிந்தேன்
நீ இருப்பதாக தெரியவில்லை!

சன்னல் ஓரம் தயங்கி நிற்கிறேன்
சாலையில் கடந்து செல்லும் 
வாகனத்தில் எதாவது ஒன்றில் 
உன்னை கண்டடைவேன் என!

வாராயோ தோழா வாராயோ!

-செல்வா!

Wednesday, 24 June 2020

தீர்வு!

வலிமிகு காலங்களில் கூட வழி உண்டு!
இரு விழி உடன் நேர்க்கொண்டு நோக்க!

புலி மிகு காட்டில் கூட புகலிடம் உண்டு!
புத்தி கொண்டு தெளிவாய் நோக்க!

அல்லதை நாளும் மனதில் வளர்ப்பவன்,
ஊடு பயிர் போல் காற்றடிக்க சாய்ந்திடுவான்!

நல்லதை நாளும் மனதில் வளர்ப்பவன்,
நெடு மரம் போல் காற்றடிக்க நிலைத்திடுவான்!

நம் கையில் இருப்பது மூலதனம்,
நல்ல வித்து வளர்ந்து நன்மரமாகும்,
நல்லெண்ணம் நல்ல வெற்றியாகும்! 

கனவு கலைவதும் விளைவதும் நம் கையிலே!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!

Attachments area

Monday, 22 June 2020

சிக்கல்!

சிக்கலுக்கு மத்தியில்,
சிக்கித் தவிக்கும் இளைஞா!
நல்சிந்தனை  ஒன்றை போதும்,
நிந்தனை செய்து வைத்துக்கொள்!

சித்தம் தெளிவாய் இருக்க,
சிறப்புக்கும் சிறப்பு சேரும்!
சித்தம் குழப்பமாய் இருக்க,
சிறுகல்லும் கால் தடுக்கும்! 

சிக்கல்கள் பல பல வந்தாலும் 
சிலந்தியாய் நீ மாறிடுவாய்!
தடங்கல் பல பல வந்தாலும்
மைல் கல்லாய் நீ மாற்றிடுவாய்!

மாற்றம் ஒன்றே மாறாதது இவ்வுலகில்!
நல்மாற்றம் நற்சிந்தனையிலே ஆரம்பம்!

எண்ணங்களை மாற்றுவோம்,
நல்ல எதிர்காலம் ஆக்குவோம்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!




Sunday, 14 June 2020

காற்றாடி!

என் ஆசைகளை காற்றில் பறக்கவிட்டேன்!
என்றாவது ஓர் நாள் என்னை வந்தடையும் என!

என் கனவுகளை காற்றில் பறக்கவிட்டேன்!
என்றாவது ஓர் நாள் எனது கைகூடும் என!

என் சுவாசத்தை காற்றில் பறக்க விட்டேன்!
என்றாவது நறுமணம் வீசும் என! 

என் கோபத்தை காற்றில் பறக்க விட்டேன்!
என்றாவது நடுத்தர வாழ்வு மாறும் என!

இனி எதை காற்றில் பறக்க விட,
நான் நானாக உணர்வேன்?

தேடியே தொலைகிறேன்,
தேடலில் தொலைகிறேன்!

-செல்வா!

Wednesday, 10 June 2020

போராட்டம்!

வாழ்க்கை உங்களை புரட்டிப் போடும்!
ஒரு போதும் துவண்டு விடாதீர்கள்!
துணிச்சலோடு எதிர்கொள்ளுங்கள்!

மனதில் உறுதி உள்ளோர்க்கே,
வெல்லும் துணிவு இருக்கும்! 

மனதில் தெளிவு உள்ளோர்க்கே,
வெல்லும் திறன் இருக்கும்! 

மனமே ஊன்றி நில்,
மனமே பெருமை கொள்,
மனமே பொறுமை கொள்,
மனமே வெற்றி நமதே!
இன்று உறுதியாக நிற்பின்! 

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!

Sunday, 31 May 2020

ஒப்பனை!

ஒப்பனையும் ஒப்பீடும்
வாழ்வின் இருபெரும் தவறுகள்!

இரண்டும் இருப்பதை கண்டும் காணாது,
இல்லாததை பிடித்து ஒருபோதும் விடாது!

ஒப்பனை நிகழ்காலத்தை மறக்கடிக்கும்!
ஒப்பீடு நிகழ்காலத்தை இருட்டடிக்கும்!

இருப்பதில் பெருமை கொள்வோம்!
முயற்சி கொண்டு முன்னேறுவோம்!
முடியாததை நமக்கானதில்லை
என விட்டொழிப்போம்!

இல்லாத ஒன்றிற்காக இருக்கும்
தொண்ணூற்று ஒன்பதை மறவாதீர்!
வெறும் கல்லும் சிலையாகும்
சிறந்த சிற்பியின் கை படின்!

உன்னை உருவாக்கும் சிற்பி நீயே!
நினைவில் கொள்வாயாக!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!

Monday, 25 May 2020

அமிலம்!

ஒரு விதத்தில் சொல்லப்போனால்,
உணர்வுகள் மனதை அரிக்கும் அமிலம் போலும்!

தேங்கி நிற்க நிற்க மனதை அரித்துவிடும்,
வழிந்து ஓட படும் இடமெல்லாம் சுட்டு விடும்!

மனதில் உள்ள அமிலத்தை
மதி கொண்டு சிறுக சிறுக
நீர்த்துப்போக செய்யாவிடில்,
மெல்ல மெல்ல சிதைத்துவிடும்
மனக் குடுவையை!

கண்ணாடியாய் மனதை மாற்றினால்,
எந்த வித அமிலத்திற்கும் தாக்குப்பிடிக்கும்!
எத்தனை காலத்திற்கும் மாறாமலிருக்கும்!

உணர்வுகளுக்கும் உயிர் உண்டு,
அதனை பாதுகாப்புடன் கையாளுவீர்!

-செல்வா!

Sunday, 17 May 2020

தீர்வு!

தீர்வு கிட்டும்
தீர்க்கம் நீயெனில்!

வழி கிட்டும்
விழி நீ திறந்திடில்

வாழ்வு சிறக்கும்
வாழ நினைத்திடில்

எல்லாம் மாறும்
மனதை மாற்றினால்!

இலக்கு எதுவானாலும்
ஆரம்பம் மனதிலே!

மனதை பழக்கு
மனதை அடக்கு

மதிலும் தாண்டலாம்
மகுடம் சூடலாம்!

எல்லாம் உன்கையில்!

-செல்வா!

Saturday, 16 May 2020

இசைமழை!

இனிமை பொங்கும், 
இன்னிசை மாமழை!

மனதில் தூறும் ஓர் அலை,
மகிழ்வு தரும் பேரலை!

இசை அளப்பறியா கொடை,
இசை மனதை ஈர்க்கும் மழை!

இசையில் நனையாத இதயம் காணீரோ,
இளமை தளிரும் தருணம் மீண்டும் கண்டீரோ!

இசையின் தொண்டு இனிதாகும்,
இளமை கூட்டும் பண்பாகும்! 

இசை மழையிலே நாம் நனைவோம்,
இளமையினை நான் உணர்வோம்!

நாளும் புதிதாகும் இசையாலே,
இன்றும் என்றும் என்றென்றும்!


-செல்வா!

Monday, 11 May 2020

வெண்மேகம்!

வான் கொண்ட மலை மேலே,
வெள்ளை பூப்பூவாய் மேகங்கள்!

மான் கொண்ட புள்ளி போலே
வெள்ளை மேகக்கோலங்கள்!

கண் கொண்டு காணும் காட்சி,
கனவிலும் தோன்ற இயலுமோ!

கண் கொண்டு காணும் காட்சி,
நினைவிலும் பிடிக்க இயலுமோ!

இயற்கையின் எழில் முன் 
மனித கற்பனைகள் தோற்குதே! 
கவிதை வரைய மனமும் ஈர்க்குதே! 
அழகினை புகழ சொற்பஞ்சமாகுதே! 

இயற்கை எழிலே எழில்!


-செல்வா

Sunday, 10 May 2020

மாற்றம்!

எங்கு மாற்றமோ,
எப்போது மாற்றமோ!

நல்ல மாற்றமோ!
நற்கதியான மாற்றமோ!

நிலையாத இவ்வுலகில்
நிலைபெற்ற ஒன்று உண்டெனில்!
அஃது மாற்றம் என்றால் மிகையாகாது!

மாறா பொழுதுகளை கண்டு
ஏங்கித் தவித்த நாட்களுமுண்டு!
மாற விளையும் நிகழ்வுகளை
இறுக்கி பிடிக்க நினைத்த நாட்களுமுண்டு!

உலகம் உருண்டை வடிவமானதாலோ!
இத்தனை ஆட்டம் இத்தனை மாற்றம்!
மாறாக உலகம் தட்டையெனில்
என்பாடு நற்கதி தானே!

மாற்றத்தை தவிர்த்திட இயலாத மானிடன்!

-செல்வா

Wednesday, 22 April 2020

பறவை மொழி!

பறவைகளின் மொழி பாசமொழி!
அடைபடாத சொற்களில்லா ஓசை மொழி!

போட்டியில்லா பொறாமையில்லா!
பறந்த உலகின் விரிந்த விண்ணின் ஈடில்லா!
இயற்கையின் கொடையை இறகால் அளக்கும் மொழி!

பறந்து பறந்து இலகானது இறக்கை மட்டுமல்ல!
பறந்து பறந்து மனதும் இலகானது!

இன்னல் புரிவோர் மத்தியிலும் இயல்பாய் இயங்கும் மொழி!
பறவை மொழி  புரிந்தோர் நிற்க வாய்பில்லை பறந்துகொண்டிருப்பர்!

வா உலகம் சுற்றி வருவோம்!
இறக்கை விரி உயர பறப்போம்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!

Saturday, 18 April 2020

யதார்த்தம்!

காலம் இனிதாகும்
நம் கால்கள் நடக்கும் வரை!

நேரம் இனிதாகும்
நாம் உழைக்கும் வரை!

யோகம் இனிதாகும்
நாம் முயற்சியை விடாத வரை!

சகுனம் இனிதாகும்
சுறுசுறுப்பாய் இருக்கும் வரை!

உண்மை இனிதாகும்
நேர்மையானவர்கள் சொல்லும் வரை!

வாழ்வு இனிதாகும்
பிறருக்கு கொடுக்கும் வரை!

எல்லாம் இனியதாகும்
நம் பார்வை தெளிவாய் இருக்கும் வரை!

கவனமாக பார்ப்போம்,
களிப்புடன் வாழ்வோம்!

-செல்வா


Friday, 10 April 2020

உடன் பிறப்பு தினவாழ்த்து!

இப்போது போல எப்போதும்
இருக்க வேண்டும்!
காலங்கள் கடந்தாலும்
கொண்ட பந்தங்கள்
நிலைக்க வேண்டும்!

கலங்கரை விளக்கம் போல
உதவியாய் வேண்டும்!
கடல் அலை போல ஓயாத
அன்பு ஒலிக்க வேண்டும்!

இன்னும் ஒரு பிறவி எடுப்பினும்!
உன்னுடனே பிறக்கும் வரம் வேண்டும்!

இனிய உடன்பிறப்பு 
தினநல்வாழ்த்துக்கள் சகோ!

இன்றும் என்றும்
என்றென்றும்
அன்புடன்!

-செல்வா

Wednesday, 8 April 2020

நிலவு!

வெட்ட வெளியில்
வட்ட நிலவு
வெள்ளை நிறத்தில்
கொள்ளை அழகு!

கார் இரவின்
திருஷ்டி பொட்டு
பால் வெளியின்
பளிங்கி தட்டு!

மாலை நேர
வண்ண சிட்டு
தேய்ந்து வளரும்
பருவ மொட்டு!

ஔவை உணவும்
காதல் கனவும்
சமைத்த நிலவே
நீ உறங்காமல்
விழித்திருப்பது
யார் வரவிற்கோ?


-செல்வா

Tuesday, 7 April 2020

சேவகர்கள்!

இடியோ மின்னல் மழையோ
கடுங்குளிரோ சுடும்வெயிலோ
எங்களுக்கு விலக்கில்லை!

பிணியோ தொற்றோ சளியோ
எங்களுக்கு விடுப்பில்லை!

உறவோ நலனோ பற்றோ
எங்களுக்கு மாற்றில்லை!

அதனால் தான் என்னவோ,
எங்கள் பெயர் சேவகர்கள்!

தன்னலம் மறந்து
இம்மாநில மக்களின்,
நன்நலம் போற்றும் நீர் வாழி!

இடைவெளி இன்றி நெருக்கடிகளிலும்
பணியாற்றும் சேவகர்களுக்கு சமர்பணம்!

-செல்வா!

Sunday, 5 April 2020

விழிகள்!

இறைவன் படைத்த அரிய படைப்பு விழிகள்!
விசும்பிய விழிகளால் உலகம் அச்சமுறும்!

விழி பேசிடாத மொழியில்லை!
அன்பு முதல் கருணை வரை!
கோபம் முதல் தாபம் வரை!
ஆசை முதல் ஓசை வரை!
வலையில்லாமல் சிக்க வைக்கும்
கலை தெரியும் விழிக்கு!


வழி தெரியாதவன்!
விழி யற்றவனாவான்!
விழி திறந்த எல்லோருக்கும்
வழியுண்டு நதி ஓடும் பாதை போலே!

விழி திறக்க, வழி பிறக்கும்!
சாதிக்க பிறந்தோர்க்கு,
சாதனை தூரமில்லை!


-செல்வா!

Saturday, 4 April 2020

பட்டம்!

பட்டம் போல உயர பறக்கனும் எண்ணம்!
விண்ணில் வட்டமிட்டு ஆகாயத்தை தொடனும்!

சிறிய குணத்தோர் தொடா வண்ணம் பறக்கனும்!
பெரிய குணத்தோர் தேடும் வண்ணம் பறக்கனும்!

உலகை ஒரு முறை வட்டமிட்டு வரனும்!
உலகை ஒரு முறை உயரிய எண்ணங்களில் தொடனும்!

எண்ணத்திற்கு வலிமை உண்டு என்பதை!
உயரே பறந்து வட்டமிட்டு உலகிற்கு காட்டனும்!

வானமும் வசப்படும்,
கடலும் அகப்படும்,
புவியும் இசை படும்!
பட்டம் போல உயர்ந்த
எண்ணம் கொண்டால்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!

Thursday, 2 April 2020

இரவு!

வெள்ளை இரவு!
வெளிர் நிற நிலவு!
வெளிச்சமான கனவு!
வெளிப்படும் உணர்வு!

அழகு நிலவு!
அழகில் இரவு!
அழகான கனவு!
அழகுமிகு உணர்வு!

கைசேரும் கனவு!
கைகளில் உணர்வு!
கை கோர்த்த நிலவு!
கை தேர்ந்த இரவு!

எது சேர்ந்தாலும்,
எது சேராவிடிலும்!
நம்பிக்கை இருப்பின்,
தன்னம்பிக்கை இருப்பின்!
நாளை விடியும் பொழுது நமது!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!

Sunday, 8 March 2020

மகளிர் தின வாழ்த்துமடல்!

இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

அன்பெனும் மழை பொழிந்து,
அரவணைப்பில் எனை ஆழ்த்தி,

இன்முகமாய் இணையான தோழியாய், அன்னையாய், சகோதரியாய் உடனிருந்தாய்!

சருக்கல்களில் கைதந்து,
கிறுக்கல்களுக்கு வடிவம்தந்து,
என்னில் என்னை காண வழி தந்து,
ஒளி தந்த கலங்கரை விளக்கானாய்!

உன் ஒப்பற்ற சேவை போற்ற இணைச்சொற்களில்லை!
அதை  சொற்களில் சுருக்கி
வஞ்சகம் செய்ய மனமில்லை!

உனது ஒவ்வொரு நாட்களும் ,
என் வேண்டுதல்களின் அருளால்,
நிரம்பட்டும் இன்றும் இனி என்றும்!

இனிய மகளிர் தினநல்வாழ்த்துக்கள்!

-செல்வா!

Thursday, 27 February 2020

பிரிவு!

திங்கள் பத்து உதிரத்திலிருந்து,
அனுதினமும் அணுவாய் வளர்ந்து!
உதிர்ந்தேன் உன் மடியிலிருந்து!
உலகம் கண்டேன் முதல் பிரிவானது !
எனினும் உந்தன் மடியில் தவழும் பாக்கியம் சுகமே! 

பள்ளி கண்டு, கல்வி கொண்டு, 
பருவம் கண்டு, வேலை கொண்டு,
உழைப்பின் காரணமாய்!
உண்மையின் தோரணமாய்!
வெளிநாடு வந்தேன்!
இரண்டாம் பிரிவு!

தூர நின்றாலும் துரத்தும் அன்பது!
பாரமென்றாலும் சுமக்கும் அன்பது! 

இன்றும் என்றும் வேண்டும் உன்மடி
என் தலை சாய்க்க ஏதுவாய்! 

-செல்வா!

Monday, 3 February 2020

வாய்ப்பு!

வாய்ப்புக்கள் வாசலிலே கொட்டிக்கிடக்கு,
சிறப்புக்கள் சீமையிலை கொட்டிக்கிடக்கு!
சீர் தூக்க ஆளில்ல, சிந்திக்க வழியில்ல,

நாள் தோறும் பேசி என்ன பயன்?
நாள் தோறும் பார்த்து என்ன பயன்?
நாள் தோறும் கேட்டு என்ன பயன்?

முந்திக்க பாரு முன்னேறலாம், முயன்றா மட்டுமே விண்ணை தொடலாம்!

முந்திக்க வழிபிறக்கும்,
சந்திக்க துணிவு பிறக்கும்!
உன்னை யார் தடுப்பா?
தடுப்பார் யாருமில்லை,
தடையோ பெரிதுமில்லை!

புத்தி கொண்டு எதை செய்தால்,
வெற்றி கிடைக்கும் என்று பாரு!
வெற்றி கொண்டு வந்தவன்,
புத்தியாளே எட்டினான்!
மற்றவரோ கைகட்டி நோக்கினார்!

பிழைத்தவன் பிழைத்தான்,
தன் முயற்சியாளே!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!

Monday, 6 January 2020

தோல்வி பாடம்!

நடப்பதெல்லாம் நன்மைக்கே,
இவ்வுலகில் அதிகம் வென்றது,
பொறுமையும் விடா முயற்சியுமே!

தோற்பது குற்றமில்லை தோல்வியிலிருந்து, கல்லாதது குற்றமே!
தோற்பது குற்றமில்லை தோற்றபின்பு, முயலாதது குற்றமே!

தோல்விக்கு பிடித்தவனை, வெற்றிக்கு பிடிக்காமலில்லை!
திறமையது கூடினால் வெற்றி தங்கிவிடும் கைவிடுவதில்லை!

காலமது தேயும், நேயமது தேயும்,
பாரமது கூடும், நாணமது கூடும்!
நம்பிக்கை மட்டும் விட்டிடாதே,
தன்னம்பிக்கை சுடர்விட்டால்,
நாளை அரசாளும் அதிபன்
நாமின்றி வேறாறோ?

-செல்வா




Saturday, 4 January 2020

நேர்கொண்ட பார்வை!

நேராக சிந்தித்தாலே போதும்,
நேராக பார்த்தாலே போதும்,
பாதி வழி வந்தடைவோம்!

வழியில்லா வீதிகளில்லை!
கரையில்லா கடலில்லை!
தீர்வில்லா இன்னலில்லை!

இல்லை என்றாலோ எங்குமில்லை!
எதிலுமில்லை எதிரிலுமில்லை!

உண்டு என்றாலோ எங்குமுண்டு!
எதிலுமுண்டு புதிரிலுமுண்டு!

ஒரு சிறு பொறியின் நம்பிக்கை!
ஒரு சிறு ஒளியின் வழிகாட்டுதல்!
ஒரு சிறு சொல்லின் ஊக்குவிப்பு!

எங்கும் உண்டு, கண்கள் திறக்கவேண்டும்!
என்ன என்று பார்க்க வேண்டும்!

வெல்வோம், நாமின்றி இப்புவியில் யார் வெல்வர்?

-செல்வா!

Wednesday, 1 January 2020

வாழ்வின் தேடல்!

வாழ்க்கையின் தூரமும்
வந்து செல்லும் பாதையும்
ஒவ்வொருவருக்கும் வேறு வேறே!

போதும் போதும் என்பது வரை,
சிரித்து, மகிழ்ந்து, உணர்ந்து வாழ்வோம்!
ஏனெனில் வாழும் வாழ்க்கை ஒன்றே!
நம் கையில் இறுக இருப்பது இன்றே!

இன்றை தீர்ப்போம் உற்சாகமாய்!
நாளை பிறக்கட்டும் இரட்டிப்பாய்!

வாழ்க எல்லை தீர வாழ்க!
வாழ்க எல்லை தீண்டி வாழ்க!
மகிழ்க எல்லை தாண்டி மகிழ்க!

வாழ்க வளமுடன், எஞ்ஞான்றும் மகிழ்வுடன்!


-செல்வா!