செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 4 January 2020

நேர்கொண்ட பார்வை!

நேர்கொண்ட பார்வை!

நேராக சிந்தித்தாலே போதும்,
நேராக பார்த்தாலே போதும்,
பாதி வழி வந்தடைவோம்!

வழியில்லா வீதிகளில்லை!
கரையில்லா கடலில்லை!
தீர்வில்லா இன்னலில்லை!

இல்லை என்றாலோ எங்குமில்லை!
எதிலுமில்லை எதிரிலுமில்லை!

உண்டு என்றாலோ எங்குமுண்டு!
எதிலுமுண்டு புதிரிலுமுண்டு!

ஒரு சிறு பொறியின் நம்பிக்கை!
ஒரு சிறு ஒளியின் வழிகாட்டுதல்!
ஒரு சிறு சொல்லின் ஊக்குவிப்பு!

எங்கும் உண்டு, கண்கள் திறக்கவேண்டும்!
என்ன என்று பார்க்க வேண்டும்!

வெல்வோம், நாமின்றி இப்புவியில் யார் வெல்வர்?

-செல்வா!

No comments:

Post a Comment