ஆறாய் ஓடும் வாழ்வு!
ஆறாய் ஓடும் வாழ்வினிலே!
பாதை நெடுக பாறை வரினும்,
பள்ளங்கள் பல கடக்க நேரிடுனும்!
நீரோட்டத்துடன் நிற்காமல் செல்கிறது நம் வாழ்வு!
இருளான நேரத்தில் கிடைக்கும் அருளும்!
இடரான நேரத்தில் கிடைக்கும் பொருளும்!
நம் நம்பிக்கைக்கு ஊற்று நீரே!
எவ்விடத்திலும் தங்காத நீர் கெடுவதில்லை,
மாறாக எல்லையில்லா முடிவிலியாகிறது!
அதுபோலவே சில பல இடர்களில் தங்கிடாதே!
பெரிய பரிசுகள் இவ்வுலகில் முயற்சிப்பவர்க்கே சாத்தியம்!
-செல்வா!

No comments:
Post a Comment