அம்மா தமிழின் ஆகச்சிறந்த வார்த்தை!
கருவிற்கு உன் உயிர்கொடுத்து ஈன்றெடுத்தாய்!சேட்டைகள் பல புரினும் எனை அள்ளி அனைத்து தேற்றினாய்!
தாய் மொழியாம் தமிழை தீத்திப்பாய் ஊட்டினாய்!
அல்லல் பலவரினும் அதை சமாளித்து காத்தாய்!
சமைத்து பிறர் உண்ண நீ கண்டு அகமகிழ்ந்து பின் உண்டாய்!
எங்களுக்கு குறைவில்லாமல் பார்த்து அதில் ஆனந்தமுற்றாய்!
யாரிடத்திலும் ஒருபோதும் எனை விட்டுக்கொடுக்காமல்,
என்மீது பூரண நம்பிக்கை கொண்டவளே!
எத்தனை இடர் வந்தாலும் உன் அன்பின் சுடர் ஒருபோதும் மங்கவில்லை!
நீ கண்ட கனாவும், கடவுளிடம் கொண்ட வினாவும் எமது உயர்வுக்கே!
நானும் உன்னை பெருமிதம் கொள்ள வைப்பேன் தாயே,
அதுவே எனது இலட்சியம், ஓர் சான்றோனாக உருபெற்று உன்னை மகிழ்விப்பது!
வாழ்க! நீர் வாழ்க!
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்!!!
-செல்வா

No comments:
Post a Comment