செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 16 April 2018

ஏன் பிறந்தேன் பெண்ணாய்?


ஆணினம் இது விலங்கை விட கொடியதோ?
அச்சம்! அச்சம்! எங்கும் அச்சம்!
சுதந்திர திருநாட்டில் மகளிர்க்கு  பாதுகாப்பில்லை!
சாலையில், பயணத்தில், பணியிடத்தில், போராட்ட களத்தில்,
எங்கும் மலிந்துகிடக்கும் பாலியல் கொடுமைகள்!

எங்கே போனது தனிமனித ஒழுக்கம்?
எங்கே போனது சகோதரத்துவம்?
மனிதப்பிறவியில் பெண்ணாய் பிறப்பது இங்கு பாவமோ?

நாகரிக உலகில், வளர்ந்த நாடுகளும் வாஞ்சை கொள்வது!
நம் பண்பாடும், கலாச்சாரமும், சமுதாய ஒழுக்கமும் தான்!!!
பிறர் பார்த்து மெச்சு கொட்டும் பண்பாட்டிற்கு,
இன்று மூக்கை பொத்திக்கொள்ளும் நெடி இழுக்கு!
நமது நாட்டின் பெயரில் படிந்தது இந்த அழுக்கு!

உலக தொழில்நுட்ப வளர்ச்சியால்,
எங்கும் மிகுந்துவிட்டது தூசு,
நம்மை படுத்திவிட்டது மாசு!
கணினியில், கைப்பேசியில், தொலைக்காட்சியில்,
சினிமாவில் இங்கும், அங்கும், எங்குமாய் படிந்திட்டது!!!

இன்றைய நவீன தலைமுறைக்கான பெரிய கடமை இது!
எந்நிலையிலும், எக்காலத்திலும்  நம் சகோதரிகளும்,
நாம் காணும் மகளிரும் என்றும் அச்சுறுத்தலுக்கு ஆளாகா!!!

அதுதான் நவீன இந்தியா!

அதுவே நம் பாரதி நினைந்த சுதந்திர பாரத நாடு!!!

விழி! எழு! காத்திடு!

-செல்வா

 #Justice_For _Asifa






2 comments: