செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 26 April 2018

அறைகள் சிறியாதாக இருந்தது நம் மனமில்லை!
நாட்கள் குறைவாக இருந்தன நம் நட்பல்ல!

வேற்றுமைகள் லேசாக இருந்தன நம் ஒற்றுமையல்ல!
கவலைகள் கண்டதில்லை நாம்!
களிப்பை மட்டுமே கண்டோம்! 

மிகுந்த நல்அக்கரை கொண்டோம்! 
ஒருவரை ஒருவர் நன்றாக பயின்றோம்!

காலத்தை பிடித்து வைக்கமுடியவில்லை!
நல்நினைவுகளாக சேமித்து வைத்துள்ளோம்!

பின்பு எப்பொழுது நினைத்தாலும் வருடிக்கொள்ள!!!
மறக்கமாட்டோம்! மறுபடியும் சந்திப்போம் வாழ்க்கை ஒரு வட்டமே!

வாழ்க்கை வழங்கும் அனைத்து வாய்ப்புகளையும் களையாமல் பயன்படுத்துக! நல்மனம் சேர்ப்போம்!
தினம் தினம் புத்துயிர் பெறுவோம்!!!

-செல்வா

Tuesday, 24 April 2018

காற்றில்லாமல் நான் வாழ்வேன்,
ஆனால் உன் வாசமில்லை எனின் என்செய்வேன் காதலி?

வெளிச்சமில்லாமல் நான் வாழ்வேன், 
ஆனால் உன் முகம் பார்க்க முடியவில்லை எனில் என்செய்வேன் காதலி?

செவிடனாய் நான் வாழ்வேன்,
ஆனால் உன் குரல் கேட்காதெனின் என்செய்வேன் காதலி?

நினைவின்றி நான் வாழ்வேன்,
ஆனால் உன் எண்ணமில்லை எனில் என் செய்வேன் காதலி?

நீயின்றி நான் வாழ்வேன் எனின் அது உன் நினைவேடு தான், 
இங்கும் அங்கும் எங்குமாய், 
என் நினைவில், கனவில் நிறைந்திருக்கிறாய், உறையவைக்கிறாய்... 

நீயில்லாத வாழ்வு வெறுமையே! 
அதுவே உன் விருப்பமெனில்,
நிலா இல்லாத இருட்டு வானமாக என் வாழ்க்கை நகரட்டும்!!!
நட்சத்திரங்களுடன் நடைபயில கற்றுக்கொள்கிறேன்!!!

-செல்வா

Sunday, 22 April 2018

ஓடுகின்ற நதியிலிருந்து பிரிந்து சென்று தேங்கிய குட்டை,
நதியை பார்த்து ஏளனமாக கேட்டது, ஓடுவதில் என்ன சுகம் என்று?

அப்பொழுது அலட்டாமல் நதி கூறியது.
நாம் ஓடாமல் என்று தேங்குகிறோமோ,
அன்றே அழுக்கடைய துவங்குகிறோம்,
ஓடினால் ஓடுகின்ற பாதை நம்மை செம்மைபடுத்தி தூய்மையாக்கிவிடும்.

அதுபோலவே வாழ்க்கையும். உழைப்பவனுக்கே மதிப்பு அதிகம்!!!

சோம்பித்திரிபவன் சமுதாயத்தில் சங்கடப்படுகிறான்,
கடமையை செய்பவன் களிப்படைகிறான்...

வாழும் வரை ஓயாதே,
அப்பொழுதுதான் வளர முடியும்!!!

விழி.எழு.விருட்சமாகு!

-செல்வா








Friday, 20 April 2018

ஈன்றாள் எனை என்அன்னை,
வளர்த்தாளாக்கினார் எந்தந்தை,
எத்தனை புன்னியம் செய்தேனோ, 

இப்பிறவியை இவ்விருவரால் பெற,
இவ்விருவரும் கொண்ட நோக்கம் ஒன்றே,
தான் நோகினும் எத்துன்பமும் எனை அனுகா,
அனுகினும் அனைத்தையும், களைந்தும் எனை காத்தனர்,

இவ்விருவரும் வேண்டிய வேண்டுதல்கள் பாதி எந்நலத்திற்கே,

இறைவா என் வேண்டுதல்களும் அவ்வண்ணமே,
எனை பெற்றவர்களும்,உற்றவர்களும்,
அகமகிழ்ந்து அனுதினமும் திளைத்திட வரம் தருவாயாக!!!

-செல்வா


Wednesday, 18 April 2018

நடப்பது நமது கையில் உள்ளதெனில் யோசிப்போமாக,
நமது கையில் இல்லையெனில் அந்த இறைவனை உளமாற யாசிப்போமாக, 
நல்லன நடைபெற...

இறைவன் நமக்கானவர்களை சரியான நேரத்தில் அனுப்பி,
நம்மை தோற்றுவிக்கிறான், தேற்றுவிக்கிறான், பயிற்றுவிக்கிறான்.
ஆனால் மிகச்சரியாக நாம் கற்றபின்பு,
நம்மை தனியாக நடைபயிலச் செய்கிறான்!!! 

சிலர் பாதையில் கல், முள் என கரடுமுரடாக இருக்கலாம்,
அவர்கள் பாதம் அதற்கு பழக்கப்பட்டிருக்கும்,
சிலர் பாதை மலர் தூவப்பட்டிருக்கும்,
ஆனால் அவர்கள் குருடராயிருப்பார்கள்!

நாம் வெளியிலிருந்து பார்ப்பது பலரின் அரைபிம்பமே,
முழுதும் நாம் அறியவில்லையே?

நமக்கு கிடைத்த பாதையில் நாம் பயணிப்போம்.
பிறர் பாதையை எண்ணிப்பாராமல் நமது இலக்கை அடைவோம்...

விழி! எழு! விருட்சமாகுக!

-செல்வா


Monday, 16 April 2018


ஆணினம் இது விலங்கை விட கொடியதோ?
அச்சம்! அச்சம்! எங்கும் அச்சம்!
சுதந்திர திருநாட்டில் மகளிர்க்கு  பாதுகாப்பில்லை!
சாலையில், பயணத்தில், பணியிடத்தில், போராட்ட களத்தில்,
எங்கும் மலிந்துகிடக்கும் பாலியல் கொடுமைகள்!

எங்கே போனது தனிமனித ஒழுக்கம்?
எங்கே போனது சகோதரத்துவம்?
மனிதப்பிறவியில் பெண்ணாய் பிறப்பது இங்கு பாவமோ?

நாகரிக உலகில், வளர்ந்த நாடுகளும் வாஞ்சை கொள்வது!
நம் பண்பாடும், கலாச்சாரமும், சமுதாய ஒழுக்கமும் தான்!!!
பிறர் பார்த்து மெச்சு கொட்டும் பண்பாட்டிற்கு,
இன்று மூக்கை பொத்திக்கொள்ளும் நெடி இழுக்கு!
நமது நாட்டின் பெயரில் படிந்தது இந்த அழுக்கு!

உலக தொழில்நுட்ப வளர்ச்சியால்,
எங்கும் மிகுந்துவிட்டது தூசு,
நம்மை படுத்திவிட்டது மாசு!
கணினியில், கைப்பேசியில், தொலைக்காட்சியில்,
சினிமாவில் இங்கும், அங்கும், எங்குமாய் படிந்திட்டது!!!

இன்றைய நவீன தலைமுறைக்கான பெரிய கடமை இது!
எந்நிலையிலும், எக்காலத்திலும்  நம் சகோதரிகளும்,
நாம் காணும் மகளிரும் என்றும் அச்சுறுத்தலுக்கு ஆளாகா!!!

அதுதான் நவீன இந்தியா!

அதுவே நம் பாரதி நினைந்த சுதந்திர பாரத நாடு!!!

விழி! எழு! காத்திடு!

-செல்வா

 #Justice_For _Asifa






Saturday, 14 April 2018


பிறந்தது புதுநல் ஆண்டு,
விளம்பியாகிய நல்லாண்டு!

கொட்டடும் கார்மேகம்!
வழிந்தோடட்டும் நதிநீர்!
விழையட்டும் முப்போகம்!
தழைக்கட்டும் விவசாயம்!
மறையட்டும் வேற்றுமை!
நிறையட்டும் ஒற்றுமை!
சிறக்கட்டும் தமிழகம்!

இவ்வவனியில் அனைவரும்
அன்புற்று,பண்புற்று,
இன்புற்று, ஆரோக்கியம் பெற்று,
மகிழ்வாக மகத்தாக வாழ,
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

வாழ்க செந்தமிழ் நாடு!
வளர்க பைந்தமிழர்!
வாழிய வாழியவே!!!

- செல்வா

Friday, 13 April 2018

சத்தத்தின் சலனத்தை, மௌனம் தருவதில்லை!
அமைதியின்  அகிம்சையை, சத்தம் தருவதில்லை!
இதுவே வாழ்வின் முரண்!

சூழ்நிலையே வாழ்வின் சூட்சமம்,
சந்தர்பங்களே வாழ்வின் திசை மாற்றி,

உத்தமனை சோதித்தும்,
கெட்டவனை கேடுகெட்டவனாகவும் திரிக்கிறது காலம்,
காலம் கனிதல் வரமே! காத்திருப்பது தவமே! 

உன்னை ஊக்குவிக்கும் ஒற்றை மனிதன் நீயே! பார்த்துகொள்!

- செல்வா...



Thursday, 12 April 2018

புதியயுகம் தான் இது, ஆனால் மிகவும் புதிதல்ல!
போராடும் குணம் இயல்பிலே தென்பட்டாதாலோ என்னவோ!
இன்றுவரை இடைவிடாமல் போராடிக்கொண்டிருக்கிறோம்!

அடிப்படை நலனை உருவிக்கொண்டு, வல்லரசுக்கான வளர்ச்சி பிம்பம் ஏன்?
இயற்கைக்கு முரணாக, அதன் அமைப்பை உருகுலைத்து, மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, மற்றும் ஸ்டெர்லைட் ஏன்? 
இவை அனைத்தும் ஒற்றை நேரத்தில் கற்றை கட்டி முடிக்க முனைப்பது ஏன்?

மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு மமதையில் இருக்காது!
மக்களின் ஐயத்தை போக்கும்!
மக்களின் விடயத்தை தீர்க்கும்!

அடுத்த தலைமுறைக்கு சுவாசிக்க நல்ல காற்றையும், 
உண்ண விசமற்ற உணவையும், 
குடிக்க நஞ்சற்ற நீரையும் கொடுப்பது நமது தலையாய கடமை! 

கடமை மறவீர்! காலம் கனியும்!
வாய்மையும், உண்மையும் நம்வாஞ்சியால் வெல்லும்!!!
வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!

வாழிய வாழியவே!!!

-செல்வா

 

Wednesday, 11 April 2018

வாழ்க்கையில் எதற்கும் தளர்ந்துவிடாதே!!!
கட்டித்தங்கத்திற்கு மதிப்பு அதிகம்,
மற்றவைக்கோ கழிவு அதிகம்!

தடைகள் மலையென இருந்தாலும்,
அவற்றை தாங்கிக்கொள்ளும் பூமி நாமாக இருப்போம்!
இறைவன் கொடுத்த கொடை நல்அறிவிருக்க! நல்ல அங்கமிருக்க!

ஊனம் நம் எண்ணத்தில் எதற்கு?
பொறாமை நம் குணத்தில் எதற்கு?
சோம்பல் நம் செயலில் எதற்கு?

களைப்படைந்தால் இளைப்பாறு,
இலக்கை விடாதே! நோக்கம் நல்வாழ்வு!
அதை நோக்கியே நம்பயணம் நடைபோடட்டும்!

விழி.எழு.விருட்சமாகு!!!

-செல்வா...

Monday, 9 April 2018

அல்லலின் ஆதிக்கம் அதிகமானாலும் கலங்காதே,
தன்நம்பிக்கையில் உன்தலை உயரே நோக்கட்டும்,
பிரச்சனைகளை ஒரு தாமரை போல் கையாளுக!
எத்தனை முறை கனமாக நீர் வந்து அமர்ந்தாலும், 
இலை நனைவதில்லை!!!

அல்லலின் ஆற்றலைவிட உன்மனவலிமை ஒருபோதும் குன்றா,
விதையாக விளைபடு சூழ்நிலை கடினமோ, 
அதனை உன்நம்பிக்கையால் பிளர்த்தெறி,
உன் நினைவில் வழி இருப்பின்,
அது நிஜத்தில் விழிக்கு எட்டும்,
விழிபிடித்த வழியில் தடம் பதித்து நடைகொள்க, 
தூரம் சிறிதே!!!

விழி.எழு.விருட்சமாகு!!!

-செல்வா


Sunday, 8 April 2018

 இலட்சியம்!!!

எரிவாயு எந்த நிலையிலும் தனது எரியும் தன்மையை இழப்பதில்லை, 

அதுபோல் நாமும் கொண்ட லட்சியத்தில் துளி கூட பிசகாமல் அடைய உழைக்கவேண்டும்!!!

-செல்வா


Tuesday, 3 April 2018

நம்முடைய பாதச்சுவடுகள் 
தூய்மையானதை விட்டுச்செல்ல வேண்டும் என்பதை,
ஏணி நினைவுபடுத்துகிறது மேலிருந்து கீழிறங்குகையில்,
கால் வைத்த இடத்தில் கை வைக்கப்படுவதால்!!!

-செல்வா


எதுவுமே இல்லை என்றாலும் மீண்டும் மீண்டும் தடவிப்பார்க்கிறேன்!!!
வந்து வந்து பார்த்தாலும் எதுவுமில்லை,
இதற்கு நீ செய்த வசியம் தான் என்ன???

புத்தகம் படிக்க குனிய வேண்டிய தலைகள்,
பொழுது போக்கிற்காக எந்நேரமும் குனிந்து கிடக்கிறது!!!

-செல்வா

 
வாழ்க்கை மிகதுரிதமான பயிற்சி,
அதில் நம்முயற்சியின் விளைவே வெற்றி,
பல சோதனைகளை புன்னகையுடன் கடந்து, 
வழிவிட்டு,பொறுமை தவராமல் சகித்துகொண்டு,
வளைந்து, நெளிந்து, முன்,பின், சென்றடைவதே இலக்கு,
சோதனைகள் பலவழிகளில் வரினும் அசராதே!
மனம் திடமேனின் மாசு ஏதுமில்லை!!!
எழுந்திரு,கடமை செய், ஏழ்மை எட்டா தூரம் செல்லும்...
துரத்திவிட்டு இளைப்பாருவோம், 
அதுவரை என் நினைவும்,கனவும்,ஊக்கமும் நீயே!!!

-செல்வா