செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 15 December 2017

சிறுமை கண்டு பொங்குக!!!














சிறுமை கண்டு பொங்குக!!!

சீர்கெட்ட அரசியல்வாதியின் செயல் கண்டு பொங்குக!
சீழ்பிடித்த சாதிவெறி அரக்கர்களை கண்டு பொங்குக!
சிறார்க்கு  இழைக்கப்படும்  வன்புணர்ச்சி கண்டு பொங்குக!

கடமையாற்ற கையூட்டு வாங்குபவர்களை கண்டு பொங்குக!
கறைபடிந்த கல்விநிலையங்களை கண்டு பொங்குக!

தீண்டாமையெனும் கொடிய விலங்கு கண்டு பொங்குக!
திருடப்படுகின்ற வளம்காக்க கயவர்களுக்கெதிராய் பொங்குக!

வறுமை என்ற கொடிய நோய் முற்றிலும் அகல பொங்குக!
சுரண்டப்படும் உரிமயை மீட்க உரத்த குரலோடு பொங்குக!

ஆண்,பெண், சாதி,மதமாய் பிரிந்து கிடந்தால் பிளவு நம்முள்ளே, மரம் ஊன்றி நிற்பது பல வேரின்  பிணைப்பே, அதைப்போல ஒர் இனமாக, தமிழினமாக எழுச்சி கொண்டு பொங்குக!

உரிமை கிடைக்கும் வரை!
எந்நில வளம் காக்கப்படும் வரை!
வறுமை ஒழியும் வரை!
உண்மை ஓங்கும்வரை ஓயாதே!

விழித்திரு!விழைபடு!நாளை நமதே!!!

-செல்வா...

1 comment: