செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Wednesday, 27 December 2017

யார் அவள்!!!

யார் அவள்! யார் அவள்!
பத்து மாதம் பாரம் சுமந்து,
ஈன்றெடுத்து,தலை கோதி,
அகம் மகிழ்ந்து அனுதினமும் களைப்படையாமல்,
என்னை ஊட்டுவித்து ஆளாக்கினாள் 
யார் அவள்! தாயாவாள் அவள்!

யார் அவள்! யார் அவள்!
முன் பின் பிறந்து உடன் வளர்ந்து,
அனேக நேரம் சண்டையிட்டு, 
அக்கறை குறையாமல் நேசம்காட்டி,
முதல் நண்பனாய் தெம்பூட்டி,
என் உடனிருப்பவள் யார் அவள்! 
சகோதரியாவாள் அவள்!

யார் அவள்! யார் அவள்!
அ முதல் அகிலம் வரை
வள்ளளார் முதல் வள்ளுவர் வரை
விஞ்ஞான உலகில் மெய்ஞானம் கொண்டு,
யோசித்து செயலாற்ற கற்றுத்தந்தவள்! 
யார் அவள்! ஆசிரியராவாள் அவள்!

யார் அவள்! யார் அவள்!
தெளிவாய் பல கதை கூறி,
அதில் அறன் வலியுறுத்தி,
கசப்பான மருந்தை இனிப்புடன் அளிப்பதுபோல்,
கடினமான நன்நெறி விளக்கத்தை,
கதையாய் திரித்து கசக்காமல் புகட்டினாள்!
யார் அவள்! பாட்டி அவள்!

யார் அவள்! யார் அவள்!
உற்ற வீட்டை துறவு பூண்டு,
நான் என்பது நாமாகவும்,
உன்னில் பாதி நான் என நாம் கொள்ளும் இல்லறத்தில் அல்லல், உவகை,வெற்றி அனைத்தும் பாதியாக்கி,கொண்டு அன்பால் மட்டும் பரிபூரணமாய் ஆக்கிரமித்தாள்! 
யார் அவள்! மனைவி அவள்!

யார் அவள்! யார் அவள்!
சில்லென்று சிரித்து! 
புன்னகை மொழி பேசி,
கொஞ்சி கொக்கரித்து,
காரியம் சாதித்து,
ஆளாய் உருபெற்று,
ராணிபோல் வாழ்ந்து!
வாழ்க்கை எனும் வட்டத்தில் வரும் கணவனிடம் என்னை தேடியவள்!
யார் அவள்! மகளாவாள்! 

யார் அவளாயினும் என் வாழ்வு அவளினில் பூர்த்தியாயிராதே!!!
-செல்வா... 

1 comment: