மண்ணையும், மக்களையும் ஓய்வெடுத்த திண்ணையையும் மறந்திங்கு வந்தோம் எங்களுக்கு பெயர் வெளிநாட்டு வாழ்இந்தியர்!!!
பிழைப்புதான் தேடி வந்தோம் பின்புதான் புரிந்தது உடல் மட்டுமிங்கே உள்ளமனைத்தும் அங்கேயே நிற்கிறது என்று!!!
இங்கு உழைப்பே முதலீடு, கைகளே மூலதனம், ஊரில் பலர் கூறுவார் பாக்கியவானப்பா, வெளிநாட்டில் வாழ்கிறானப்பா!!!
இங்கு பண்டிகைகள் ஏதுமில்லை, பகட்டான ஆடையுண்டு,
பங்காளிகள் யாருமில்லை பலம் சேர்க்க!!!
மகிழ்சியான நாட்கள் மனதிலே கறைகிறது!!!
காணி நிலம் கொள்ள,உற்றதை கரை சேர்க்க,
கடன் தீர்க்க இங்கு வந்தோம் இதில் பகட்டில்லை,
பசி உண்டு, பந்தா இல்லை, பாசமுண்டு!!!
பணயக் குதிரை நாங்கள், கைகள் கட்டுண்டு நீந்துகிறோம்
கரைசேர்வோம் எனும் நம்பிக்கையில்!!!
இறைவா நான் உன்னை வேண்டுகிறேன் இவ்வாழ்கை
என் குடும்பத்தில் பிறர்கிளைக்காதே என்று!!!
நான் கண்ட சொப்பனங்கள் என்னோடு முடியட்டும்!!!
-செல்வா

No comments:
Post a Comment