செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Sunday, 17 December 2017

குழந்தையின் பேறு!!!




குழந்தை அலாதி இன்பம்!!!

பார்த்தால் அதன் குறும்பை ரசிக்க இன்பம்!
பேசினால் அதன் மழலை குரல் இன்பம்!
விளையாண்டால் அதனிடம் தோற்றல் இன்பம்!
கோபித்தால் அதன் பிடிவாதமின்பம்!
அழவைத்தால் அதனை சமாதானப்படுத்தலின்பம்!
அதனுடன் இருக்கையில் உலகத்தை மறத்தலின்பம்!
கோடி கோடியாக கொடுத்தாலும் மீண்டும் அடையமுடியாத பேரின்பம்!!!
எத்துணை பேறு பெரினும் நற்பேறு இதுவே!!!
-செல்வா...

1 comment: