செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 14 December 2017

தாமிரபரணி


#SAVETHAMIRABARANI  #தாமிரபரணி!!!

என் நெல்லை சீமையிலே பிறந்து மற்றவர்களுக்கு
கிட்ட அரிதாகிதால் என்னவோ உன்னை அவ்வளவு பிடிக்கிறது,
கொஞ்சமா நீ கொடுப்பது,
தாமிரத்தை வருணி வருதலால் தாமிரபரணி என்றழைத்தோம்,
பொதிகை மலையில் உதித்து புன்னக்காயலில் சங்கமமானாய்,
உன்னால் தான் அல்வாவிற்கு உரித்தானது தனிச்சுவை,
உன்போல் கருணை யாரிடமும் கண்டதில்லை இவ்வுலகம்,
சலசலவென சப்தமிட்டு காடு, மலை கடந்து, வயல்வெளியில் முத்துமணிகளுக்கு நீரிட்டு,
உற்ற தாகம் தணித்து, நீராவியாகி குளிர்ந்து மழையாய் மீண்டும் எந்நிலத்தை முத்தமிடுவாய்,
பாபநாசத்தில் பளிங்கிபோல் இருக்கும் உன்னை கார்நிற கழிவாக சில மையில் தூரத்தில் சிதிலமடைத்துவிடுகிறார்கள்,
வரும் வழியில் பல ஆலைகழிவு பின்பு மாநகராட்சியின் மக்கள் கழிவு, அதன் மக்கா தன்மையால் தான் என்னவோ! நீ நிலைகுலைந்து போகிறாய்,
அதோடு முடிந்ததா இல்லை உறிஞ்சி,உறிஞ்சி வற்றாத ஜீவநதீயை வறண்ட மண் படலமாக மாற்றினர்,
நீ தாமிரத்தை வருடி தருவதால் இயல்பிலே யாம் சினம் கொண்டோரானோம்,
ஆனால் நீ ஊட்டுவித்த சினம் உன்னை காக்க பயன்படும் என ஒருபொழுதும் யாம் அறியோம்,
நீரை சீரழிக்காமல் காக்க சூளுரைப்போம்,
வெற்றி நமதே என வீரமுழக்கமிடுவோம்!!!

-செல்வா...

No comments:

Post a Comment