செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Sunday, 31 December 2017

மண்ணையும், மக்களையும் ஓய்வெடுத்த திண்ணையையும் மறந்திங்கு வந்தோம் எங்களுக்கு பெயர் வெளிநாட்டு வாழ்இந்தியர்!!!
பிழைப்புதான் தேடி வந்தோம் பின்புதான் புரிந்தது உடல் மட்டுமிங்கே உள்ளமனைத்தும் அங்கேயே நிற்கிறது என்று!!!
இங்கு உழைப்பே முதலீடு, கைகளே மூலதனம், ஊரில் பலர் கூறுவார் பாக்கியவானப்பா, வெளிநாட்டில் வாழ்கிறானப்பா!!!
இங்கு பண்டிகைகள் ஏதுமில்லை, பகட்டான ஆடையுண்டு,
பங்காளிகள் யாருமில்லை பலம் சேர்க்க!!!
மகிழ்சியான நாட்கள் மனதிலே கறைகிறது!!!
காணி நிலம் கொள்ள,உற்றதை கரை சேர்க்க, 
கடன் தீர்க்க இங்கு வந்தோம் இதில் பகட்டில்லை, 
பசி உண்டு, பந்தா இல்லை, பாசமுண்டு!!!
பணயக் குதிரை நாங்கள், கைகள் கட்டுண்டு நீந்துகிறோம் 
கரைசேர்வோம் எனும் நம்பிக்கையில்!!!
இறைவா நான் உன்னை வேண்டுகிறேன் இவ்வாழ்கை 
என் குடும்பத்தில் பிறர்கிளைக்காதே என்று!!! 
நான் கண்ட சொப்பனங்கள் என்னோடு முடியட்டும்!!! 

-செல்வா


முரட்டு முண்டாசு காரனும் மனிதன் ஆனான் மகளின் சிரிப்பை பார்த்து!!!
பொல்லாப்புகாரனும் பொறுமை கொண்டான் மகளின் முகம் பார்த்து!!!
தரிகெட்டு திரிந்தவனும் தனம் தேடலானான் நலன் பார்த்து!!!
கண்ணியமில்லாதவனும் கருணையுள்ளம் கொண்டான் மகளின் பிடிவாதம் பார்த்து!!!
எப்படியோ சுற்றித்திரிந்தவன் மனிதானாய் உருபெற்றான் மகளை பார்த்து!!!
வாழை தளைக்க நல்வரப்பு அதுபோல ஆண்மகன் வாழ்வு சிறக்க நன்மகள்!!!
இது ஓர் மனிதனின் சீர்திருத்தமில்லை உருமாற்றம் பின் ஒருபொழுதும் மாறாது!!!

- செல்வா


ஓர் மடியில் பிறவா சகோக்கள் நாம்,
ஆனால் உன் அன்னையும் எனதே எனதும் உனதே!
நாம் பகிர்ந்த விசயங்கள் பல பல!
நான் எனும் அகம் துறந்தது உன்னிடம் மட்டுமே!
காலங்கள் கடந்தாலும் நாம் கழித்த நேரங்கள் மறவாது,
வாழ்க்கை பயணத்தில் எனக்கு வழிகாட்டும் மைல் கல் நீயாவாய்,
கஷ்டங்களில் தோள் கொடுத்து வெற்றிகளில் புன்னகைத்து உடன் பயணிக்கிறாய்,
வாழ்வில் எந்நிலைவரினும் நான் உனக்கு உனது நானாகவும் நீ எனக்கு எனது நீயாகவும் தெரிவோமாக,
நான் யார் என்பது உனது நடத்தையில் உலகறியும் என்பார் இவ்வுலகில்,
நமது லட்சியம் உனது வெற்றியில் நானும் எனது வெற்றயில் நீயும் பெருமிதம் கொள்வதே!!!
-செல்வா

Wednesday, 27 December 2017

யார் அவள்! யார் அவள்!
பத்து மாதம் பாரம் சுமந்து,
ஈன்றெடுத்து,தலை கோதி,
அகம் மகிழ்ந்து அனுதினமும் களைப்படையாமல்,
என்னை ஊட்டுவித்து ஆளாக்கினாள் 
யார் அவள்! தாயாவாள் அவள்!

யார் அவள்! யார் அவள்!
முன் பின் பிறந்து உடன் வளர்ந்து,
அனேக நேரம் சண்டையிட்டு, 
அக்கறை குறையாமல் நேசம்காட்டி,
முதல் நண்பனாய் தெம்பூட்டி,
என் உடனிருப்பவள் யார் அவள்! 
சகோதரியாவாள் அவள்!

யார் அவள்! யார் அவள்!
அ முதல் அகிலம் வரை
வள்ளளார் முதல் வள்ளுவர் வரை
விஞ்ஞான உலகில் மெய்ஞானம் கொண்டு,
யோசித்து செயலாற்ற கற்றுத்தந்தவள்! 
யார் அவள்! ஆசிரியராவாள் அவள்!

யார் அவள்! யார் அவள்!
தெளிவாய் பல கதை கூறி,
அதில் அறன் வலியுறுத்தி,
கசப்பான மருந்தை இனிப்புடன் அளிப்பதுபோல்,
கடினமான நன்நெறி விளக்கத்தை,
கதையாய் திரித்து கசக்காமல் புகட்டினாள்!
யார் அவள்! பாட்டி அவள்!

யார் அவள்! யார் அவள்!
உற்ற வீட்டை துறவு பூண்டு,
நான் என்பது நாமாகவும்,
உன்னில் பாதி நான் என நாம் கொள்ளும் இல்லறத்தில் அல்லல், உவகை,வெற்றி அனைத்தும் பாதியாக்கி,கொண்டு அன்பால் மட்டும் பரிபூரணமாய் ஆக்கிரமித்தாள்! 
யார் அவள்! மனைவி அவள்!

யார் அவள்! யார் அவள்!
சில்லென்று சிரித்து! 
புன்னகை மொழி பேசி,
கொஞ்சி கொக்கரித்து,
காரியம் சாதித்து,
ஆளாய் உருபெற்று,
ராணிபோல் வாழ்ந்து!
வாழ்க்கை எனும் வட்டத்தில் வரும் கணவனிடம் என்னை தேடியவள்!
யார் அவள்! மகளாவாள்! 

யார் அவளாயினும் என் வாழ்வு அவளினில் பூர்த்தியாயிராதே!!!
-செல்வா... 

Friday, 15 December 2017




















நெருக்கடிகளின் மத்தியில் சிக்கித் தவிக்கும் சராசரி இளைஞன் நான்!
நெருக்கடியின் நெருடல்

நெருக்கடியின் நெருடல் மிகவும் அடர்த்தியாய் அழுத்துகிறது என்னை!

நெருடல்களினால் ஈரப்பதம் இழந்து காய்ந்த சருகானேன்! ஆனால்!!!

உரச! உரச! பற்றும் என்று ஒருபோதும் அறியேன்!

தன்னை தற்காக்க ஈரப்பசை ஒன்றே வழி அதனால் தான் ஏனோ விடாமல் கசிகிறது வியர்வை!

வழிகின்ற வியர்வை எல்லாம் விசும்பின் துளியே பக்குவமேனும் மரத்திற்கு நீராய்!!!

உளியின் அடியில் பாறை சிலையாகிறது! நெருக்கடியில் மனிதன் மாமனிதனாகிறான்!!!

நெருக்கடியுடன் நேரடியாக மோதுபவன் துணிந்தவன்!!!
துணிந்தவனுக்கே இவ்வுலகம் வசப்படும்!!!

விழித்திரு! விழைபடு!விண் முட்டும் விருட்சமாய் வளர்திடு!!!

-செல்வா...













சிறுமை கண்டு பொங்குக!!!

சீர்கெட்ட அரசியல்வாதியின் செயல் கண்டு பொங்குக!
சீழ்பிடித்த சாதிவெறி அரக்கர்களை கண்டு பொங்குக!
சிறார்க்கு  இழைக்கப்படும்  வன்புணர்ச்சி கண்டு பொங்குக!

கடமையாற்ற கையூட்டு வாங்குபவர்களை கண்டு பொங்குக!
கறைபடிந்த கல்விநிலையங்களை கண்டு பொங்குக!

தீண்டாமையெனும் கொடிய விலங்கு கண்டு பொங்குக!
திருடப்படுகின்ற வளம்காக்க கயவர்களுக்கெதிராய் பொங்குக!

வறுமை என்ற கொடிய நோய் முற்றிலும் அகல பொங்குக!
சுரண்டப்படும் உரிமயை மீட்க உரத்த குரலோடு பொங்குக!

ஆண்,பெண், சாதி,மதமாய் பிரிந்து கிடந்தால் பிளவு நம்முள்ளே, மரம் ஊன்றி நிற்பது பல வேரின்  பிணைப்பே, அதைப்போல ஒர் இனமாக, தமிழினமாக எழுச்சி கொண்டு பொங்குக!

உரிமை கிடைக்கும் வரை!
எந்நில வளம் காக்கப்படும் வரை!
வறுமை ஒழியும் வரை!
உண்மை ஓங்கும்வரை ஓயாதே!

விழித்திரு!விழைபடு!நாளை நமதே!!!

-செல்வா...

Thursday, 14 December 2017


#SAVETHAMIRABARANI  #தாமிரபரணி!!!

என் நெல்லை சீமையிலே பிறந்து மற்றவர்களுக்கு
கிட்ட அரிதாகிதால் என்னவோ உன்னை அவ்வளவு பிடிக்கிறது,
கொஞ்சமா நீ கொடுப்பது,
தாமிரத்தை வருணி வருதலால் தாமிரபரணி என்றழைத்தோம்,
பொதிகை மலையில் உதித்து புன்னக்காயலில் சங்கமமானாய்,
உன்னால் தான் அல்வாவிற்கு உரித்தானது தனிச்சுவை,
உன்போல் கருணை யாரிடமும் கண்டதில்லை இவ்வுலகம்,
சலசலவென சப்தமிட்டு காடு, மலை கடந்து, வயல்வெளியில் முத்துமணிகளுக்கு நீரிட்டு,
உற்ற தாகம் தணித்து, நீராவியாகி குளிர்ந்து மழையாய் மீண்டும் எந்நிலத்தை முத்தமிடுவாய்,
பாபநாசத்தில் பளிங்கிபோல் இருக்கும் உன்னை கார்நிற கழிவாக சில மையில் தூரத்தில் சிதிலமடைத்துவிடுகிறார்கள்,
வரும் வழியில் பல ஆலைகழிவு பின்பு மாநகராட்சியின் மக்கள் கழிவு, அதன் மக்கா தன்மையால் தான் என்னவோ! நீ நிலைகுலைந்து போகிறாய்,
அதோடு முடிந்ததா இல்லை உறிஞ்சி,உறிஞ்சி வற்றாத ஜீவநதீயை வறண்ட மண் படலமாக மாற்றினர்,
நீ தாமிரத்தை வருடி தருவதால் இயல்பிலே யாம் சினம் கொண்டோரானோம்,
ஆனால் நீ ஊட்டுவித்த சினம் உன்னை காக்க பயன்படும் என ஒருபொழுதும் யாம் அறியோம்,
நீரை சீரழிக்காமல் காக்க சூளுரைப்போம்,
வெற்றி நமதே என வீரமுழக்கமிடுவோம்!!!

-செல்வா...

மெரினா போராட்டம்!!!

நாம் காண்பது உரிமை என்னும் வயல் வெளியில்
நிமிர்த்து நிற்கும் நெருங்கமுடியா தீக்கதிர்கள்,
கனல் மணிகள் ஒன்றை உரச மற்றொன்று பற்றி கொள்கையில் உஷ்னமாய், செய்கையில் சாந்தமாய், சுதந்திரத்திற்கு பிறகு இப்படி ஒர் அகிம்சை யாம்கண்டதில்லை என பாரதம் புகழ,
தாயிற்கு சேயாய், தமக்கைக்கு தமயனாய், அரண்காத்து ஊர்மெச்ச செய்தது என்இனம்,
இங்கு சாதி,மத பேதமில்லை ஆண்,பெண் பாலில்லை, எற்றத்தாழ்வில்லை, ஆனால் உரிமை கண்டோம், உணர்வை கண்டோம் அதை அடையும் உத்வேகம் கண்டோம்,
தலைவரில்லா திரலில் எம்தலைமையோ தமிழ் நீதான் என முரசு கொட்ட,
இதைகண்ட யாவரும் துயிலுரித்த கோழி போல செய்வதரியாது திகைக்க,
உரிமையை உரித்தாக்க காயத்திற்க்கு மருந்து போல உருவாகிறது அவசரச்சட்டம்,
நாம் காண்கிற கனவு காளை விதிவிலக்கி, பீட்டாவை விரட்டி, ஜல்லிகட்டுக்கு மங்காத வரைவு,
எடுத்த இலக்கை அடையும் வரை அணையாது இத்தணல் கதிர்கள்...

புது சரித்திரம் எழுத புறப்பட்டது இப்புரட்சி...

-செல்வா

Wednesday, 13 December 2017



வார்த்தைகளுக்கு வலிமை உள்ளது, 
அதன் வல்லமை சொல்பவரை விட கேட்பவரை ஆட்டுவிக்கிறது!
அதனால் வார்த்தைகளில் வஞ்சனை தவிருங்கள்,
வார்த்தைகளில் வசைபாடாதீர்கள்,
வார்த்தைகளால் வாழ்த்துங்கள்,
வார்த்தைகளில் புன்னகை வாசம் செய்யுங்கள்,
முடியும் என்று ஊக்குவி,
அந்த பகைவனுக்கும் பிடித்துவிடும் உன்னிடம் தோல்விபெற!!!!

-செல்வா

Tuesday, 12 December 2017


வெற்றி விநாயகனே நிதம் உன்னை துதிப்பேன்,
கற்ற கல்வி, உற்ற உறவு, பெற்ற பேறு எல்லாம் நின்னருள்,
நித்தம் புதுவாழ்வு தந்து, நற்காரியம் பல செய்வித்து, பல்லுயிர் ஓம்பும் இப்பூவுலகில் எனக்கு வாழ்வளித்தாய்,
பாக்கியங்கள் பல பெறினும், வாக்கியத்தில் நின்பெருமை, செயல்களில் உன் உன்னதம், காண்பதில் நின்தாள்,
கேட்பதில் உன்மகிமை,
சிந்தனையில் நின்அருள்,
பெருகிட வல்லமை தாராய்!
என் கணபதியே! ஓம்! ஓம்! ஓம்!
-செல்வா