செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 30 June 2018

பயில்வோம்!

பயிலும் வரை எதுவும் கடினமே வாழ்வில்!
முயன்றுபார் வெற்றியை முத்தமிடுவாய்!


மூழ்கும் சூழலிலும் தண்ணீரை அழுத்த தானாக மேலே வருவோம்!
சூழ்நிலைகள் காரணமல்ல,
நம் மனமே காரணம்!

துயிலும் வரை சோம்பல் கடினம்!
பயிலும் வரை கல்வி கடினம்!
பேசும் வரை பாஷை கடினம்!
உடம்பு வளையும் வரை உடற்பயிற்சி கடினம்!
எழுந்து நிற்கும் வரை வெற்றி கடினம்!

எத்தனை முறை வேண்டுமானாலும் வீழ்க!
அத்தனை முறையும் எழுக!
மனமே மார்க்கம்! எண்ணமே வெற்றி!


விழு! எழு! விருட்சமாகுக!

-செல்வா





Friday, 29 June 2018

நாடோடி முதல் நாகரீகம் வரை!

நாடோடி மனித குலத்தோன்றலின் முதன்மை முயிற்சி!
ஓர் இடம் விட்டு இடம் பெயரும் வயிற்றிர்க்கான ஓட்டம்!
நாகரீகம் வளர்ந்தது! வேளாண்மை பிறந்தது!
மனிதன் வசிக்களானான்!

பயிர் வளர்ந்தது!
வயிறு நிறைந்தது!
கற்காலம் பிறந்தது!
கல் ஆயுதங்கள் பிறந்தது!
கல்லை உரச பொறி பிறந்தது!
நாகரீகம் மேன் மேலும் வளர்ந்தது!

பொறியின் பயன் நெருப்பாயின!
நெருப்பின் பயன் சுட்ட உணவாயின!
நெருப்பின் உபயோகம் வளர்ந்து பயனாகின!
மனிதனுக்கு உலோகம் பெரும் உதவியாகின!

உலோகக் காலம் மலர்ந்தன!
பித்தளை முதல் மற்றவை என!
ஒன்றுக்கிரண்டாய் உலோகம் பெருகின!
தனிமனிதன் கூட்டமாகினான்!
குழு,கூட்டம் சமுதாயமாகின!

சமுதாயம் இனமாகின!
இனம் சிலவாகின!
சில பலவையாக பெருகின!
பலவைக்கிடையில் போராகின!
போரில் வீரமும் தீரமும் உறுதியாகின!
சேர,சோழ, பாண்டியர் என ஓங்கி வளர்ந்தனர்!

அன்று வாழ்ந்தவர்களிலும் வளர்ந்தவைகளிலும்!
இன்றும் உயிர்ப்புடன் இருப்பதோ!
நம்தமிழும் அதன் பண்பாடுமே!


வேற்றுமைகள் பல இருப்பினும்!
நாம் ஒற்றுமையாய் இருக்க இதுபோதும்!
காலம் கடந்து நிற்பதற்கு நம்மொழி சாட்சி!

நாடோடியோ நாட்டுவாசியானான்!
நாடெங்கும் கமழட்டும் தமிழ் வாசனை!

உலகின் முதல் நாகரீகத்தின் அடையாளம் தமிழ்!
உலகின் முதல் குடி தமிழ்!
உலகின் மூத்த குடி தமிழ்!


வாழ்க தமிழ்! வாழ்க பாரதம்!

-செல்வா





Thursday, 28 June 2018

நடுத்தர வர்க்கம்,
மேலும் இல்லை,
கீழும் இல்லை!
நடுவில் தொங்கும்!
விழவும்,ஏறவும்,
முடியாமல் தவிக்கும்,
சராசரி மக்களின்,
தாகக் குரலின்,
சத்தம் நிசப்தம்!

கணக்கு பார்த்து,
பகுத்து, வகுத்து,
பார்த்து பார்த்து,
செலவு செய்து,
காத்து சேமித்து,
மிச்சம் பிடித்து,
நாட்களை நடத்து!

கைக்கும் வாய்க்கும்,
மட்டும் கிட்டும்,
சம்பளமும் வருவாயும்,
அவசர செலவும்,
திடீர் வரவும்,
அவ்வப்போது வரும்!

வசதி வாய்ப்பும்,
வாழ்வும் சுகமும்,
மலையென உயரம்,
ஏறும் வேகம்,
எறும்பின் வேகம்,
நம்பிக்கை மட்டும்,
நாட்களை நகர்த்தும்!

கனவு வாழ்வும்,
செழித்த நாளும்,
படித்தால் வரும்,
என்பதே நிஜம்,
நாடும் வீடும்,
படித்தால் முன்னேறும்!
உழைத்தால் முன்னேறும்!

சிறப்பாக படித்து,
நம்வீடும், நம்நாடும்,
முன்னேற முற்படுவோம்!

இல்லையெனில் அறிந்ததை,
சிறப்பாக செயல்படுத்தி,
சீராக முன்னேறுவோம்!

எல்லா வழிகளும்,
இலக்கை நோக்கி,
இருக்கட்டும்!
நெறி தவறிய வழி,
படு குழியாகும்!
அதுதவிர அத்தனையும்,
நல்வழியே!!!

நடையெடுப்போம்!
படையெடுப்போம்!
நாளை நமதே!


-செல்வா

Tuesday, 26 June 2018

 மழை!!!

நீர் என்ற பெண் கொண்ட கருநிற ஆடை மழைமேகம்!
அது காற்றுடன் கொஞ்சிப் பேசி சிரிக்கையில்,
உதிர்க்கும் புன்னகை மழை!!!

சுத்தமானவை எரிக்கும் குணமுடையவை!
ஆனால் நீ மட்டுமே, தாயன்பு கொண்டு குளிர்விக்கிறாய்!


உன் திருமேனி தீண்ட எவர்கும் ஆசையே!
குழந்தை முதல் குமரி வரை!
கன்று முதல் களிறு வரை!
விதை முதல் மரம் வரை!
உன்னை தீண்ட யாருக்கும் இன்பமே!

சாதி, மத வேறுபாட்டால் தீண்டாத இவ்வுலகில்!
பாகுபாடின்றி அனைவரையும் தீண்டும் ஓரே அழகி நீயே!
உன் அழகை கண்டு ரசிக்க விதை முளைக்கிறது!
தூங்கும் இலைகள் கண்விழித்து துலங்குகிறது!
வேருக்கும் ஆசை தான் உன்னுடன் பேச!
ஆனால் வெளியில் தெரியாததால்,
மண்ணிடம் நலம் விசாரித்துக்கொள்கிறது!

உன் கொள்ளை அழகால் இவ்வுலகம் உயிர்க்கட்டும்!
பருவம் தவறாமல் வந்து எங்களை பார்த்துவிட்டு செல்!
உன் வாசத்தால் ஒளிரட்டும் எங்கள் மண்ணும், எங்கள் வாழ்வும்!


உன்னை தீண்ட துடிக்கும் குழந்தையில் நானும் ஒருவன்!
உன்னை கண்டு களிக்கும் விதைகளில் நானும் ஒருவன்!
உன்னை பிரதிபலிக்க நினைக்கும் புற்களில் நானும் ஒருவன்!
உன்னை காண காத்துக்கிடக்கும் கவிஞரில் நானும் ஒருவன்!

-செல்வா...


Saturday, 23 June 2018

வேறென்ன வேண்டும் எனக்கு!

உண்பதற்கு உணவு கொண்டேன்!
உடுப்பதற்கு உடை கொண்டேன்!
உறக்கத்திற்கு வீடு கொண்டேன்!
காண்பதற்கு கண்கள் கொண்டேன்!
செயலாற்றும் ஐம்பொறிகள் கொண்டேன்!

உலக மூத்த குடி தமிழ் குடியில் பிறவி கொண்டேன்!
முத்தமிழ் படிக்கும் பேறு கொண்டேன்!
எக்காலமும் இயங்கும் நல்தமிழ் இளமையைக் கண்டேன்!

வளர்வதற்கு நல்பெற்றோர் அருளால் கொண்டேன்!
விளையாடுவதற்கு நல்நண்பர் கொண்டேன்!
பகிர்வதற்கு சிறந்த உற்றார்  கொண்டேன்!
பழகுவதற்கு சிறந்த சுற்றம் கொண்டேன்!
கற்றுக்கொடுக்க நல்ஆசிரியர் கொண்டேன்!

மகிழ்வதற்கு நல்செயல்கள் கொண்டேன்!
நினைவிற்கு நல்காரியம் கொண்டேன்!
வரவிற்கு நல்வேலை கொண்டேன்!
செலவிற்கு நல்லன பலவாங்கிக் கொண்டேன்!

இத்தனை நல்லன இருந்தும்,
சில நேரம் இன்னல்கள் வரக்கண்டேன்!
அவை அத்தனையும் உன்அருளால் களைந்து,
நிறைவு பெறக்கண்டேன்! 

கொண்டவை அனைத்தையும் நினைத்துப்பார்த்தால்!
உன் கிருபைக்கு நிகர் இங்ஙனம் தர யாருமில்லை எனக்கண்டேன்!

இறைவா உனக்கு நன்றிகள் பல!!! 
இயங்கும் விதம் என்னை படைத்தமைக்கும்,
இத்தனை நல்லவைகளை கொடுத்தமைக்கும்!

இன்னபல உதவிசெய்து,
நித்தம் துணைபுரிந்து,
நிம்மதி தனை தந்து!

தத்தம் காலத்தில் காரியங்கள் நிகழச்செய்து!
பயிற்றுவித்து, தேற்றி, ஊக்கமூட்டி!
என்னை காத்தருள்பவனே!
உனக்கு கோடான கோடி நன்றிகள்!!!

-செல்வா

Friday, 22 June 2018

இயற்கை வளம் காப்போம்!

நதி ஒருகாலத்தில் நீர் ஓடிய பள்ளம்!
இன்றோ மணல் அள்ளும் பள்ளம்!

மலை ஒரு காலத்தில் விலங்குகளின் வாழ்விடம்!
இன்றோ நாகரீக மனிதனின் வளர்ச்சி திட்டத்திற்கான இடம்!

குளம், கன்மாய், ஏரி ஒரு காலத்தில் பாசனத்திற்கான குட்டை!
இன்றோ மக்களின் கழிவு நீர் ஓடி தேங்கி நிற்கும் குட்டை!

கடல் ஒரு காலத்தில் முத்து,பவளம் மற்றும் மீன்களின் வாழ்விடம்!
இன்றோ நெகிழி மற்றும் ஆலைக்கழிவுகளின் உறைவிடம்!

வளர்ந்த நாடுகள் தங்களின் இயற்கையை கவனமுடன் பாதுகாக்கின்றன!
வளரும் நாடுகள் வளர்ச்சி என்னும் கவர்ச்சியில்,
இயற்கையை இழந்து தவிக்கும் நாளுக்கு தூரமில்லை!

உலக வெப்பம் ஒரு டிகிரி உயர்ந்தன!
பனி உருகி கடல் மட்டம் உயர்ந்தன!
நல்ல காற்றில் மாசுக்கள் கலந்தன!
மழை பொய்த்து வஞ்சிக்கின்றன!

நதி வறண்டு பாழாகின!
தண்ணீர் பஞ்சம் உயிர் வாட்டுகின்றன!

இன்னுமா புரியவில்லை  மனித இனம்,
இயற்கையிலிருந்து வெகு தூரம் சென்றமைக்கான விளக்கம்!

கலக்கம் வேண்டாம்!
வளர்ச்சி என்ற கவர்ச்சி வேண்டாம்!
இருப்பதையாவது காக்க வேண்டும்!
இயற்கை காக்க வேண்டும்!

மரம் வேண்டும், காடு தழைக்க!
காடு வேண்டும், மழை கிடைக்க!
மழை வேண்டும், விவசாயம் செழிக்க!
விவசாயம் வேண்டும், மனிதன் உயிர்க்க!
மனித
ன் உயிர் வாழ இவை எல்லாம் வேண்டும்!

வளர்ச்சி வேண்டும்!
இயற்கையை அழிக்கா வண்ணம்!
இயற்கையை அழிக்காதீர்! இயற்கையை பழிக்காதீர்!

நாளைய தலைமுறைக்கு நல்லன விட்டுச்செல்வோம்!!!

வாரீர்!!! வாரீர் !!! வாரீர் !!! வாரீர் !!!

வாழ்க தமிழ்நாடு! வாழ்க பாரதம்!

-செல்வா


Tuesday, 19 June 2018

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

குழந்தை பருவத்தில் அம்பாரி ஏற்றி குதூகலித்தவர்!
வயது வளரும் பருவத்தில் இடையூறாக தெரிகிறார்!


இங்கு இருவரும் தோழரில்லை என்பதே காரணம்!
இவரும் பயில்வதில்லை அவரும் முயல்வதில்லை!


அப்பா பலருக்கு பணம் காய்க்கும் எந்திரம்!
அறிவுரைகள் நிறைந்த நடமாடும் கிராமபோன்!
முட்டுக்கட்டைகள் போடும் எதிர்தர வாதி!
அவரும் நம்வழி வயது முதிர்ந்தவர் என்பது நமக்கு ஏன் புரிவதில்லை?

ஓடி, ஓடி உழைத்தவர் சற்று தள்ளாடும் நேரமிது!
பாடு பட்டு களைத்தவருக்கு இளைப்பாறும் நேரமிது!

நம்மவருக்கு தோள் மீது அம்பாரி தேவையில்லை!
தடுமாறும் பொழுது உங்கள் கைத்தாங்கல் போதும்!
மனம் பட்டுப்போகையில் உங்கள் கனிவான பேச்சு போதும்!

ஆளுமையான மனிதனை உங்கள் அன்பினால் கட்டிப்போடுங்கள்!
உங்களுக்குப் பிடித்ததை தேடித்தேடி தந்தவருக்கு,
நேரத்திற்கு உணவளியுங்கள்!
இன்முகத்தோடு உரையாடுங்கள்!

அவர் படும் பாட்டை உணர,
நாம் அம்பாரி சுமக்கும் நேரம் வரை காத்திருக்க வேண்டாம்!
இன்றே துவங்குவோம்! இயம்புவோம் இருப்பது ஓர்வாழ்வு!
இளமையின் செழுமையை அவர்களிடமும் அள்ளித்தெளிப்போம்!
இளந்தளிரின் வாசம் அவர்களிடமும் மணக்கட்டும்!

இன்று அல்ல என்றும் நம் தந்தை சொல் மிக்க ஓர் மந்திரமில்லை!

-செல்வா

Monday, 18 June 2018

நிழலில் அல்லாமல் நிஜத்தில் ஓவ்வொருவரும் பார்த்த கதாநாயகன் அப்பா!
ஆண்மகனாய் பிறந்ததால் அன்பை வெளிப்படுத்த தெரியாத நாயகன்!

அவரின் ஆசைகள் அந்த குடும்பமும் அதன் மகிழ்ச்சியுமே!

தான் பட்டினி கிடந்தாலும் தனது உற்றவர் ஒருநாளும் அப்படி இரார்!
இவ்வுலகில் தன்னலம் துறத்தலை பயிற்றுவிக்கும் முதல் ஆசான் அப்பா!

எத்தனை கடினமான காலமானாலும்,
அசாத்திய முயற்சியால் வென்றெடுக்கும் மாவீரன்!
ஓடி, ஓடி, அயராது உழைக்கும் கடிகாரம் போன்றவர்,
பல காலம் கடிகாரமும் தோற்றுவிடும் அவரிடம்!

குழந்தைகளின் கடந்தகால உறுதுணை!
நிகழ்கால நண்பணும் தோழனுமாவார்!
எதிர்கால வழிகாட்டி அவர்!

நான் இருக்கிறேன், பார்த்துக்கொள்வேன் என்ற வார்த்தை போதும் சாதிப்பதற்கு!
நான் நாளும் பார்த்து வியக்கும் எனது கதாநாயகன்!
அன்பான பண்பான இல்லாளன்! என் தகப்பனே!

நீங்கள் செய்த நன்றிக்கு,
கைமாறு செய்யும் காலம் தேடி தவமிருக்கிறேன்!
உங்கள் பெயரும் புகழும் எத்திசையும் மணக்கச்செய்வதே,
இந்த மகன்/மகள் தந்தைக்காற்றும் உதவியாகும்...


அன்புடன்

செ.செல்வா



Saturday, 16 June 2018

தூக்கம் சிறிது நேர மரணம்!
நினைவில்லா தருணம்!
புலன்கள் அடங்கிய கணம்!
சிந்திக்காமல் பொய்த்திருக்கும் மனம்!


தூக்கம் என்பது இல்லை எனில்,
ஓடும் மனிதற்கு ஓய்வு ஏது?

மனிதன் தன் வாழ்நாளின் பாதியை உறங்கிக் கழிக்கிறான்!
ஆனால் உலகில் பலர் நல்உறக்கமின்றி தவிக்கிறார்!

தூக்கம் தரும் நிம்மதி!
தூக்கம் தரும் உற்சாகம்!
தூக்கம் தரும் புத்துணர்வு!
தூக்கம் தரும் அமைதி!
தூக்கம் தரும் போதை!
எங்குமில்லை!வேறு எதிலுமில்லை!

பிள்ளை குணம் கொண்டவனுக்கும்!
கொடூர மனம் கொண்டவனுக்கும்!
நல்ல தனம் கொண்டவனுக்கும்!
கொள்ளை பணம் கொண்டவனுக்கும்!
யாராக இருப்பினும் தூக்கம் இன்றியமையாதது!

தூக்கமில்லை எனில் துலங்காது  மனிதஇனம்! 
தூக்கமே நல்வரம்!!!

-செல்வா


Wednesday, 13 June 2018

பக்குவம்!!!

இருப்பதில் திருப்தி கொண்டு மகிழ்ச்சியாய் இருப்போம்!
இல்லாததை எண்ணி எண்ணி ஒருபோதும் புலம்போம்!


இன்னல்கள் பல வரினும்!
இடும்பைகள் பல தொடரினும்!
தாளாமல், தளராமல், தள்ளாடாமல்,
நிலையாக இருப்போமாக!

தாழ்வதோ தங்கிவிட அல்ல கடல் நீருக்கு!
பேரலையாய் பொங்கிடவே!

பின்சென்றது நின்று விடுவதற்கல்ல அம்பிற்கு!
சீரிப்பாய்ந்து இலக்கை துளைப்பதற்கே!

பச்சை மண்ணிற்கு பக்குவமில்லை!
மழையில் கரைந்துவிடும்!
சுடு மண்ணிற்கோ பக்குவமதிகம்!
மழை என்ன? மண்ணில் புதைத்தாலும் மங்காது!


வாழ்வை ஓர் வைரத்தைப்போல் சந்திப்போம் நாளும்!
ஒவ்வொரு சூழ்நிலைகளையும் உட்கொண்டு கடினமாவோம்!
அனுபவத்தில் ஊறி பலநாள் கெடாத பண்டமாவோம்!

நம்மிடம் உள்ளதை கொண்டாடுவோம்!
இல்லாதவைக்கு பயிற்சி செய்வோம்!

வாழ்க்கை நம்மை பலமுறை புரட்டிப்போடும்!
பனியாரத்தைப்போல் நன்றாக உப்பி தின்ன தின்ன தித்திப்போம்!


பண்பிலே சிறந்த பண்பு பக்குவம்!
ஆசிரியரிலே சிறந்த ஆசிரியர் அனுபவம்!
நாளும் பயில்வோம்!
அனுதினமும் உயர்வோம்!

விழு! எழு! விருட்சமாகுக!

-செல்வா


Monday, 11 June 2018

தமிழ் படி தமிழா, நீ தமிழ் படி!

தமிழின் இலக்கணம் படி!
காவியம் படி! இலக்கியம் படி!
நிறை குறைகளை படி! நிறைய படி!
குற்றமில்லாததை படி! ஐவகை நிலம் பற்றி படி!
தமிழை ஒன்றி படி! ஒழுக்கமான தமிழினத்தைப் பற்றி படி!

எல்லாவற்றையும் படி!
எல்லையில்லாமல் படி!
கொள்ளை ஆசையாய் படி!
கசடு இல்லாமல் படி!
உயரிய தமிழை படி!
அதன் வீரிய செழுமை படி!

நீ படித்து! தமிழின் பெருமையை உலகறிய உரக்கச்சொல்!
சான்றோனாக உயர்க! வல்லறிவனாகுக!
நல்ல தமிழை இனிதே தோள் கடத்துக!
பேணிப்பாதுகாக்க! போற்றி வளர்க்க!

தமிழ் தான் இவ்வுலகினில்!
நினைக்க! வாசிக்க! யோசிக்க!
யாசிக்க! பூஜிக்க! கொடுக்க!
கொண்டாட! இன்புற! வாழ்த்த!
எழுத! வரைய! புனைய!
மதுரத்தினினும் தித்திப்பானது!
பல்கி பெருகும் தொழில்நுட்பத்தில்,
தகர்க்க மற்றும் தவிர்க்க முடியாத உயரத்திற்கு,
நம்தாய் தமிழை உயர்திடுவோம்!

விழி.எழு.விருட்சமாகுக!

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!

-செல்வா



Friday, 8 June 2018

உங்களுடைய நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்!

பெரியவர்களின் ஆசீர்வாதங்களோடும்,
சிறியவர்களின் பிரார்த்தனைகளோடும்!

இந்தியா மட்டும் வேற்றுமையில் ஒற்றுமைக்கு,
எடுத்துக்காட்டில்லை, நல்இல்லறமும் தான்!

இங்கு மதம், இனம், சுற்றம் ஒன்றாக இருக்கலாம்,
விருப்பங்கள் வேறாகவும், வெறுப்புகள் வேறாகவும் இருக்கலாம்!
மதிப்பளியுங்கள் தனி மனிதருக்கு!

விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதும்,
கெட்டுப்போனவர்கள் விட்டுக்கொடுத்ததில்லை என்பதும்,
பழமொழியும், எடுத்துக்காட்டும்!

நாட்டிற்கான நல்ல குடிமகன், வீட்டிற்கான நல்ல தலைமகன்!
பிறப்பது உங்களிடம் தான்! நல்இல்லறத்தில் தான்!
வளர்வது உங்களுடைய பண்புகளினால் தான்!

ஒவ்வொரு திருமணமும் இந்நாட்டின் இறையாண்மையை மீண்டும் உறுதி செய்கிறது!
நற்குடிமகன்கள் பிறந்து நாட்டை, வளமாக வழி நடத்துவார்கள் எனும் நம்பிக்கையில்!

மனதிற்க்கான இடைவெளி குறைந்து!
மன்னிப்பிற்கான மனவெளி மிகுந்து!
புன்னகையின் இலக்கணமாய்!
நல்ல பூந்தோட்டமாய் உங்கள் வாழ்வும், 

அதன் நலனும், சிறந்த பலனுமாய்,
பல்கி பெருகிட நல்வாழ்த்துக்கள்...

இருமனம் இணைந்த இன்பமான நாளாய்,
எந்நாளும் அமைய எங்கள் வாழ்த்துக்கள்!

-செல்வா


Tuesday, 5 June 2018

பிளாஸ்டிக் இதை நெகிழி என்றழைப்பர் தமிழில்!

நெகிழி இல்லாத வாழ்வு இன்று அரிதில் அரிது!
அப்படிப்பட்ட வாழ்வின் கனவு விரிகிறது!

பஞ்சு மெத்தையிலிருந்து துயில் எழுந்து!
பித்தளை நல்லி திறந்து முகம் கழுவி!
வேம்பு, ஆலம் குச்சியால் பல்துலக்கி!
இரும்பு வாளியில் நிறைந்த நீரால் குளித்து!
கீழ் அமர்ந்து சம்மணமிட்டு உலோகத்தட்டில் உண்டு!

பொது போக்குவரத்தில் அலுவலகம் சென்று!
நடந்து திரிந்து அன்றாட வேலைகளை பார்த்து!
தேவை என அறிந்து மட்டும் நகல் எடுத்து!
மை பேனாவால் கையொப்பமிட்டு!
தரவுகளையும், கோப்புகளையும், மேற்பார்வையிட்டு!
மீண்டும் வீடு வந்து தொடர்வதே அன்றாடமாகும் !
இது காணக்கிடைக்காதது!வாஞ்சையான வாழ்வது! 

நெகிழி உபயோகிக்காத நாள் சாத்தியமா?
இப்படி வசித்திட முடியுமா ? வாழமுடியுமா?
என்று எண்ணக்கூட நேரமில்லை நகரத்தார்க்கு!

நெரிசலில் மட்டும் பிதுங்கவில்லை நகரம்!
மக்களின் மக்காத கழிவுகளாலும் பிதுங்குகிறது!

 கழிவுகளை நிரப்பி நிரப்பி நிலத்திடி நீர் கீழே போகவில்லை!
புகை மாசுக்களால், பசுமை வாயுக்கள் நிரம்பி நீராவி மேலே செல்லவில்லை!


தார் சாலைகளும், கான்கிரீட்களும் மரத்திற்கு மாற்றாகுமா?
மனிதன் ஓடிய ஓட்டத்தில் இயற்கையில் இருந்து,
வெகுதூரம் சென்றுவிட்டான்!
விழித்துக்கொள்க! வெகு தூரமில்லை!

முழுவதும் மாறாவிட்டாலும்!
முடிந்தவரை நெகிழி உபயோகிப்பதை குறைத்தால் மாற்றம் வரும்!

நமது நாளை நலமாக இருக்கும்!
மாற்றத்தின் வித்து நாமாக இருப்போம்!
மாற்றம் நம்மிடமிருந்தே ஆரம்பமாகட்டும்!

கை கோர்ப்போம்! சுற்றுச்சூழல் காப்போம்! நெகிழியை தவிர்ப்போம்!

-செல்வா


Monday, 4 June 2018

வாழ்வில் நன்றாக பயணிக்க பல்லக்கு தேவையில்லை!
நம் இன்பத்தை இரட்டிப்பாக்கவும், துன்பத்தை பங்கிடவும்,

உற்றவர்கள் இருந்தால் போதுமடா...

சிறிய வீட்டில் வசித்த மகிழ்ச்சியை பளிங்கு மாளிகை தருவதில்லை!
அறைகள் அதிகமாவதால் மனதின் தூரமும் அதிகமாகிவிடுகிறது!
பழைய சோற்றின் சுவை மற்றும் சத்தை, பிட்சா ஒருபோதும் தரமுடியாது!

அப்பா, அம்மாவின் உழைப்பையும், கஷ்டத்தையும்,
பார்த்து வளர்பவர்களுக்கு செலவு கம்மிதான்!
அத்தியாவசியத்திற்கும், அனாவசியத்திற்கும்
இடையில் இருக்கிறது சேமிப்பு!

சேமிப்பு என்பது எதிர்காலத்தை நோக்கிய அச்சமில்லை, உபாயம்!
அது ஓட்டத்தின் இடையில் களைப்பை போக்க உதவும் தெம்பு பானம்!

பூச்சியத்திலிருந்து ஒன்றாய் உருவாகிவிட்டால், பத்து, நூறு,
ஆயிரம், இலட்சம், கோடியாய் பெருகும் காலம் தூரமில்லை!

எல்லோருக்கும், எல்லோரின் உயர்விற்கும் ஒன்றே,
முழுமூலக்காரணம் அது உழைப்பே!
உறுதியாய் உழைப்போம்!
வானம் தூரமில்லை!


விழி! எழு! விருட்சமாகுக!!!

-செல்வா