செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 29 March 2018

நட்பே! நண்பனே!

அகங்காரமில்லாமல்,
ஆசை ஆசையாய்,
இன்புற்று,
ஈட்டியது இந்நட்பு,
உவகைத்தோம்,
ஊக்குவித்தோம்,
எண்குணன் வழி,
ஏற்றம் கண்டோம்,
ஐயமில்லை இனி,
ஒற்றுமையே,
ஓட்டுநர் நாமே,
ஔடதாமாகிய நட்பை,
அஃதே கரைசேர்ப்போம்!!!

வாழ்த்துக்கள் நட்பே! 
துளிர்விட்டு வளர்க, காடாக செழிக்க!
மழை மேகந்தனை ஈர்க்க!
நிழல் தருக! கனி, காய் தருக! 
வளர்க விண்முட்டும் விருட்சமாகுக!

-செல்வா

Saturday, 24 March 2018

ஓய்வு!!!

ஓய்வு என்பது போர்வீரனுக்கு வாள் கூர்மைபடுத்தவும்,

அறிவாளிக்கு புத்தியை தீட்டவும்  பயன்படுகிறது.

இன்றைய தினம் உங்கள் கையில்.

-செல்வா...


பழைய நினைவுகள் மயில் இறகால் வருடப்பட்டது!

துள்ளி துயில் எழுந்து,
பள்ளியில் பயில நடை கொண்டு,
உண்டு விளையாண்டு,
களித்து களைப்படைந்து,
விடுமுறை சலுகைகளில், 
உவகைத்து உன்னதமாய்,
உலாவிய காலம் கனா காணும் காலமானதேனோ!

இறைவா இப்பிறவியின் பயன் பலனாக,
நான் எனை மறந்த காலத்தை வரம் தருவாயாக!!!
     
-செல்வா...





 தோசை!!!

வாழ்க்கை நம்மை பலமுறை புரட்டிபோடுகிறது, 

அது நம்மை உள்ளும், புறமும் ஒருசேர பக்குவப்படுத்தவே.

நல்ல தோசைக்கு விலை அதிகம் அதுபோலே நாமும்!!! 

-செல்வா...


காதலித்து பார் இதுவரை நீ உணர்ந்தவை எல்லாவற்றையும் தலை கீழாய் உணர்வாய்!!!

பகல் இருளாக, இரவு பகலாக,
தனிமை இனிமையாக, 
ஆதவன் மங்களாக, 
நிலா பிரகாசமாக உணர்வாய்!!!

காலை, மாலை எந்நேரமும் அவள் நினைவே ஊற்று,
ஊணாகினாள் எங்கனமும் அவள் நினைவின்றி நிசப்தமே!!!

-செல்வா


Friday, 23 March 2018

அன்புசெய் இந்த தேசம் அழகாக தெரியும்!
அதில் உள்ள உள்ளத்தின் வாசம் நன்றாக புரியும்!

அன்புசெய் இந்த மண்ணின் மகத்துவம் தெரியும்!
அதில் உள்ள கலாச்சாரத்தின் சாராம்சம் புரியும்!!!

அன்புசெய் இந்த உலக மானுடபிறப்பின் மகிமை தெரியும்!
அகிம்சையால் விளையும் நற்கதி புரியும்!

அன்புசெய் உன்னில், பிறனில்!
மனிதனுக்கு பன்முகமாகினும் இம்முகமே அழகு!!!

அன்புசெய் ஏனெனில் அனைத்து மதங்களும் போதிக்கும் உயர்ந்த மாண்பு  அன்புசெய்!!!

பணத்தின் பின் ஓடுகின்ற ஓட்டத்தில்,
மனிதனின் பண்பில் புகைபடிந்திட்டது,
பார்வை மங்களாகிவிட்டது, படையெடுங்கள்,
துடைத்தெறிவோம் புகையை!
தூரிகை கொண்டு வர்ணம் பூசுவோம்!!!
புன்னகையாய் வாசம் வீசுவோம்!!!

அனைவருக்கும் தெரியும் இன்றைய நவநாகரிக வாழ்க்கையில்
அன்புசெய்பவனே ஏமாளியாய், கோமாளியாய் தெரிகிறான்!
பிறர் நினைப்பதை எண்ணி பார்த்தால் இன்று எதுவும் சாத்தியமில்லை,
அன்புசெய்வான் எதிலும் தோற்கலாம் மனநிறைவில் இல்லை,
நிம்மதியில் என்றும் தோற்பானில்லை!!!

-செல்வா



Wednesday, 21 March 2018

உலகின் மகத்தான இனம் தமிழினம்,
எக்காலத்திலும் மொழியைவிடாத இனம்!!!

அகங்காரமில்லா அகிம்சையான இனம், அதன் மொழியை போல்,
பல அடக்குமுறை, ஆட்சி, சமுதாய மாற்றம் கண்டு தழைக்கும் ஒப்பற்ற இனம்!!!

வள்ளுவன், பாரதி, கம்பனை கவியாக பெற்ற மானிட இனம்!
அறவாழ்வே அமுதம், அதனிலே ஆக்கம் உயர்வு என்றுரைக்கும் இனம்!!!
காலத்தின் வடிகட்டுதலில், சமுதாய கட்டமைப்பில் புதைந்து கிடந்த மரபுகளுக்கு அர்த்தம் கண்டோம்!!! வியந்தோம்!!!
அறிவில், அறிவியலில், மருத்துவத்தில், மானுடத்தில் சிறந்த இனம் நாமே என்பதை உணர்ந்தோம்!!!

மொழிதனை உயிரென பாவித்து,
அதன் இயல், இசை, நாடகத்தில் திளைத்த இனம்!
அழிக்கமுடியாத சுவடுகளை கொண்ட இனம்!
ஏனோ தரிகட்ட மனிதர்களின் கபடநாடகத்தில் சிக்கித்தவிக்கும் இனம்!!!

காலம் ஒரு கருவி அதனில் கடத்து நம்மொழியை,
 சாதி கடந்து, மதம் கடந்து மொழியை பற்றுவோம்!!! இறுக்க பற்றுவோம்!!! நாளை நமதாக வேண்டுமேனில் இன்றைய பிடி விடாபிடியாக இருக்க வேண்டும்!!!

விதை விதைப்போம், களை எடுப்போம், பயிர் காண்போம், நாளை நமதே!!! 

-செல்வா

Saturday, 3 March 2018

மாற்றம் ஒன்றே மாறாதது இவ்வுலகில், 
மாற்றம் நல்லவை நோக்கி அமைய பெற வேண்டும் அவ்வளவு தான்!!!

நாளையை நினைத்து இன்று குழம்பினால், 
இன்றைய நாளை நாம் கோட்டை விட்டு விடுவோம்!!!

மகிழ்ச்சியான நினைவுகளை மட்டும் மீண்டும், மீண்டும் நினைவில் கொள்வோம், அது நம்வாழ்வை என்றென்றும் புதுபித்து உயிர்பிக்கும்!!

எங்கு சென்றாலும் உன் தனித்தன்மையை விட்டுவிடாதே!
அது மட்டுமே மற்றவர்கள் மனதில் உன்னை பதியவைக்கும்!!! 
வாழ்த்துக்கள்!!!

-செல்வா



மறைக்கப்பட்டவை என்றும் தூய்மையானவை!
மறைக்கப்படும் உண்மை நெறியற்றவர்களை காக்கிறது,
மறைக்கப்படும் வரலாறு கயவர்களை காக்கிறது,
மறைக்கப்படும் புதையல் களவானிகளை காக்கிறது,
மறைக்கப்படும் தத்துவம் கொள்கையற்றவரை காக்கிறது,
மறைக்கப்படும் பணம் நியாயமற்ற எஜமானனை காக்கிறது,
மறைக்கப்படுபவைகளுக்கு காலமே திறவுகோல்!!!
முத்து அதன் சிற்பிக்குள் எவ்வளவு மறைவாக பாதுகாக்கப்படுகிறதோ அவ்வளவு தூய்மையாக பிரகாசிக்கிறது, அதனால் அச்சம் கொள்ளாதே மனிதா மறைக்கப்படும் உன் வரலாறு வெளிப்படும் பொழுது உன்னை யார் என நீ புரிந்து கொள்வாய்!!
!
சிந்தனை கொள் மனமே! மதிமயக்க இத்தனை, இவ்வுலகில் எனை யான் என மறக்க இத்தனை,

உனக்கானதை நீயே அகழ்ந்து அறி, 
அதுவே அறிவொளி!!!! அகவிருள் அகற்று!!!
அறிவொளி வீசிடுக!!!!
வாய்மையே வெல்லும்!!!
-செல்வா


ஒரு நல்லமனிதனுக்கும் மாற்றானுக்கும் உள்ள வித்தியசம்,
மனம்தடுமாறிய நிலையில் ஒன்றும் செய்யாததே!
சினம் பகைவனை எங்கனம் கொள்கிறதோ,
அதே வேகத்தில் கொண்டவனையும் அழிக்கிறது!
பொறுமை கொள், காலம் போல் சிறந்த மருந்து இவ்வுலகில் இல்லை! இவ்வுலக ஜீவராசிகளின் அருமருந்து அதுவே!

-செல்வா

சொல்லப்படாதவை என்றும் சுகமே!
சொல்லாத காதலை கனவு காண சுகம்!
சொல்லாத ரகசியத்தை காத்தல் சுகம்!
சொல்லாத உழைப்பிற்கான அங்கீகாரம் சுகம்!
சொல்லாத வழியை உருவாக்குவதில் சுகம்!
உள்ளும்! புறமும் ஒருசேர மகிழ்வது தேடலில்தான்!
தேடித் திளைத்திடுவோம்! 
விடையென்னும் விண்மீன் காண!!!

-செல்வா