செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Wednesday, 5 September 2018

வாழ்வின் நிஜங்கள்!

வாழ்வின் நிஜங்கள்!

வாழ்வின் நிஜங்கள் அபரிமிதமானவை!
நம் கையில் இல்லா பிறப்பும், இறப்பும்!
இடையில் வாழப்பயிலும் சிறப்பும்!
பயில பயில குறையா படிப்பும்!
பக்குவம் தனை அடையும் குறிப்பும்!
நிகழும் வரை எல்லாம் வாழ்வின் நிஜங்கள்!

தினம் தினம் புதிய பொருளின் மீது வரும் ஈர்ப்பும்!
ஈர்ப்பினை அடைய மனதின் தீராத தவிப்பும்!
தவிப்பின் வழி உந்திய சீரான உழைப்பும்!
அடையா பொருளை அடைய கொதிக்கும் வனப்பும்!
ஒருகாறும் தீராமல் தாவித்தாவி சென்றிடும்
என்பது வாழ்வின் நிஜங்கள்!

இல்லாததின் மேல் தவிக்கும் மனமும்!
இருப்பதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் குணமும்!
இன்றும்,என்றும் மாறாத வாழ்க்கையில் நிஜம்தான்!

இருப்பதில் பெருமை கொள்வோம்!
இருப்பதில் இன்பமிகுவோம்!
நம்வாழ்வு வளப்படும் அதுவே வாழ்வின் நிஜம்!

-செல்வா





No comments:

Post a Comment