செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Sunday, 30 September 2018

ஆணிற்கு வேண்டிய மனம்!

களம் புக காத்திருக்கும் தோள்!
கயவர்களை வீழ்த்த இருக்கும் தோள்!
ஒரு போதும் பாரத்தினால் ஓயாத தோள்!
இடுக்கன் தாங்கி நிற்கும் தோள்!

சினம் கொண்டவன் சீரி வந்திடினும்,
பகை கொண்டவன் கடலாய் வந்திடினும்,
தகர்க்க முடியாத பாறை இவன்!
அடக்க முடியாத காளை இவன்!
எதிர்க்க முடியா வீரன் இவன்!
எவன் அவன் தன்னை அறிந்தவன்!

உனது சக்தி நீ அறிந்திருந்தால்!
அது பல்கி பெருக பயின்றிருந்தால்!
எதிரில் பார் வரின் அஞ்ச வேண்டாம்!
உனது பலம் நீ அறிந்திருந்தால்!
எதிரில் புயலே வரினும் அச்சம் வேண்டாம்!

நிலம் தன்னில் கால் ஊன்றி நில்!
மனம் தன்னில் நம்பிக்கையுடன் நில்!
களம் தன்னில் உயரிய யுக்தியுடன் நில்!
முடிவினில் வெற்றியுடன் நில்!

-செல்வா



Thursday, 27 September 2018

பாதியில் முறிந்த பயணம்!

பாதையறியா பயணங்கள் கூட முடிவுறும்!
மனிதன் மாண்பு தவறிய பயணம் பாதியிலே முறியும்!

உணர்வறியா உறவினால் காதல் முறியும்!
மதிப்பறியா மனதினால் உறவு முறியும்!
கேடுகெட்ட மதியினால் நட்பு முறியும்!
சூட்சம புத்தியினால் சுற்றம் முறியும்!

வழியறியா பயணம் பல உண்டு வாழ்வில்!
அதை கடந்து சென்றால் வெற்றி!
தடுக்கி நின்றால் அனுபவம்!
சிலிர்த்து நின்றால் ஆர்வம்!
சோர்ந்து தங்கினால் தோல்வி!
முறிந்து போகும் பயணம் முற்றிடுவதில்லை!

சினம் காத்து, நாவடக்கி திட்பம் சரியாக அமைவின் எப்பயணமும் நில்லா!
அப்படியேனும் நிற்பின் அதற்கான விடை காலத்திடம் உண்டு!
கனியும் காலத்திடம் கணக்கும் உண்டு!

விடை நோக்கி காத்திருப்போம்!

-செல்வா

Sunday, 23 September 2018

காதல் கண்ணே!

இழப்பதற்கு ஒன்றுமில்லை இனி கண்ணே!
என்னை உன்னில் தொலைத்திட்டேன் கண்ணே!

கிரகணம் வந்ததுபோல் மறைந்திட்டாய் கண்ணே!
உன் மனதில் ஒளிந்திருக்க ஆசையே கண்ணே!

இளமை உன்னை கண்டு வியந்தது நிற்கிறது கண்ணே!
முதுமை வரை இணைந்து வாழ்வோம் வா கண்ணே!

பழம் கனிய நாள் பிடிக்கும் என அறிவேன்!
மனம் கனிய நாள் பிடிக்கும் என இன்று அறிவேன்!

உந்தன் நினைவுகளால் அனுதினமும் நோயுற்றவன் ஆகிறேன்!
மழைத்துளி மண்ணை முத்தமிட்டு வளப்படுத்துவதைப்போல், என் காதல் நோயை உன் முத்தத்தால் தீர்தகற்று!

மருத்துவ முத்தத்தால் என் துயர் துடை கண்ணே!
செவிலிய கரத்தால் என் இடர் களை கண்ணே!
உயிரும் உணர்வும் நீ காற்றிரைப்பாய் என காத்திருக்கிறது!
சுவாசம் தா, இருவரும் சுவாசிப்போம்!

-செல்வா


Thursday, 20 September 2018

தமிழ்!

எழுத்துக்களின் அழகிய பிணைப்பே!
மொழியின் உண்மையான உயிர்ப்பே!
சொற்கள் தான் அதன் சொற்கள் தான்!

ஓர் அணுவின்றி எவ்வுயிரும் இயங்கா!
எழுத்தின்றி எச்சொற்களும் பிறவா!
சொல்லின்றி மொழி தனித்து நிற்கா!

மகத்தான தமிழின் சிறப்பே,
கொட்டிக்கிடக்கும் சொற்களே!
எதை தேடினாலும் அதற்கான விடை தமிழினுள்ளே!

இத்தனை சீரிய தமிழை சீர்பட பேசுவோம்!
சிந்தனையில், பேச்சில், எழுத்தில் தமிழ் செய்வோம்!
ஆழமான தமிழை ஆராய்ந்து முத்தெடுக்காவிடினும்!
குளித்து,களித்து இன்புறுவோம்!
நம் தமிழ் கடலில் நீந்திப்பழகுவோம்!

வாழ்க தமிழ்!
வளர்க தமிழர்!
வாழிய செந்தமிழ்நாடு!

-செல்வா

Tuesday, 18 September 2018

சொற்கள்!

சொற்கள் குலைவாய் இருப்பின் அன்பை கூட்டும்!
சொற்கள் நெகிழ்வாய் இருப்பின் மதிப்பை பெருக்கும்!
சொற்கள் கனிவாய் இருப்பின் உள்ளத்தினை சேரும்!
சொற்கள் கடினமாக இருப்பின் உறவை உடைக்கும்!
சொற்கள் கோபமாக இருப்பின் நட்பை சிதைக்கும்!
சொற்கள் சாந்தமாக இருப்பின் அமைதியை தரும்!
சொற்கள் இதமாக இருப்பின் ஆறுதல் தரும்!
சொற்கள் இனிமையாய் இருப்பின் வெற்றி வரும்!
சொற்கள் தமிழாக இருப்பின் தமிழுக்கு அணிசேரும்!

நாளும் உதடு உதிர்க்கும் சொல்லே,
நமது எதிரியையும், நண்பரையும் தேடித்தரும்!
எதற்கும் சல்லடை இல்லை எனில் தொல்லையில்லை!
சொற்களை சல்லடையில் சலித்து பேசுக!
வாய்மொழி சிறப்பின் வையகம் நமதே!

-செல்வா

Saturday, 15 September 2018

நெருக்கடி நிலை!

வாழ்க்கை நெரிசலில் நெருங்கும் பொழுது,
நமக்கானவர்களின் தேடல் மிகஅதிகமாவது இயல்பே!

துணையில்லா கன்றிற்கு துணையாக யார் வருவார்!
இணையில்லா இளைஞர்க்கு இணையாக யார் வருவார்!
இணையும் துணையும் பிறப்பதில்லை மனதில் உடன் இருப்பதே!
நம்பிக்கை என்னும் உறுதுணையே!

சுழலின் மத்தியில் சிக்கியவன் போல் எவ்வளவு எழினும் உதவிக்கு ஓர் கரம் வேண்டும்!
அந்த கரம் நம்பிக்கையாய் எல்லோருக்கும் அமைய வேண்டும் தன்னம்பிக்கையாய்!

தேனீயைவிட நாம் கூடுதலாக முயற்சி செய்ய வேண்டும்!
எறும்பை விட சுறுசுறுப்பாக ஓர் வழி அடைபடின் மற்றோர் வழி தேட வேண்டும்!
காற்றைவிட வேகமாக வீசி நல்ல எண்ணம் மனதில் பரப்ப வேண்டும்!

நதியின் பாய்சல் கடலை நோக்கியே அதுபோல் உனது பாய்ச்சல் இலக்கை நோக்க வேண்டும்
நாம் காணும் இடரான வழியை சீராக்கினால் பயணம் துரிதப்படும்!
விவேகமாய் விரைவாய் பயணிப்போம்,
சீரான வேகம் கொள்வோம் இலக்கு ஒன்றே குறியாகும் தடைகளல்ல!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா

Wednesday, 12 September 2018

முடியும்!

முடியும் என்பதற்கு உதாரணமாய் இரு!
இயலும் வரை முயன்று கொண்டிரு!
தவழும் குழந்தைக்கு நடை வெற்றி!
துவழும் மானிற்க்கு ஓட்டம் வெற்றி!
பயிலும் வித்தைக்கு போட்டி வெற்றி!

முதல்முறை ஜனித்தோம் இப்புவியில் வெற்றி!
ஒவ்வொரு முறையும் முயன்றோம் இவ்வாழ்விற்கு வெற்றி!
நம் பிறப்பிற்கான பலனே யாரும் நம்மை,
நம்பாத வேளையில் நம்கால்களில் தானே நிற்பதே!
இருக்கும் நாட்களில் உதாரணமாய் வாழ்வோம்!
நம்புவோம் இவ்உலகம் நம்வசம்!
முடியும் என்றால் இன்றும், என்றும் நமதே!

விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா

Saturday, 8 September 2018

அன்பின் வழியது!

அன்பின் வழியது யாது எனில்?
அமைதியாய் ஆரவாரமற்றது,
இனியதாய் இதமானது,
இயலாதவருக்கு ஈவது,
வாழும் வாழ்க்கையில் மனிதன் முயலும்,
ஓர் குணமாக இதுஒவ்வொரு நாளும் அமைய வேண்டும்!

காந்தி தன் வாழ்வில் காண்பித்தது,
அன்னை தெரசா வாழ்வாக வாழ்ந்தது,
இன்னும் பலரின் வழியது அன்பு!

அன்னையின் கருணை,
தந்தையின் உழைப்பு,
சகோதரியின் பாசம்,
உற்றாரின் அக்கறை,
நண்பனின் நேசம்,
முகம்தெரியாதவரின் நேயம்,
இதன்வழி அன்பு பாய்கிறது!

அகந்தையைவிட்டால் கண்ணில் தெரியும்!
தற்பெருமை குறைந்தால் காதில் ஒலிக்கும்!
அடுத்தவர் இடத்தில் அமர்ந்தால் மனம் உணரும்! 
இப்புவியின் உயர்ந்த அறம்தனை பயில்வோம்!
நிறைவாய் வாழ்ந்து மகிழ்வாய் இருப்போம்! 

இனிய தமிழ் செல்வா, ஓமன் 

Wednesday, 5 September 2018

வாழ்வின் நிஜங்கள்!

வாழ்வின் நிஜங்கள் அபரிமிதமானவை!
நம் கையில் இல்லா பிறப்பும், இறப்பும்!
இடையில் வாழப்பயிலும் சிறப்பும்!
பயில பயில குறையா படிப்பும்!
பக்குவம் தனை அடையும் குறிப்பும்!
நிகழும் வரை எல்லாம் வாழ்வின் நிஜங்கள்!

தினம் தினம் புதிய பொருளின் மீது வரும் ஈர்ப்பும்!
ஈர்ப்பினை அடைய மனதின் தீராத தவிப்பும்!
தவிப்பின் வழி உந்திய சீரான உழைப்பும்!
அடையா பொருளை அடைய கொதிக்கும் வனப்பும்!
ஒருகாறும் தீராமல் தாவித்தாவி சென்றிடும்
என்பது வாழ்வின் நிஜங்கள்!

இல்லாததின் மேல் தவிக்கும் மனமும்!
இருப்பதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் குணமும்!
இன்றும்,என்றும் மாறாத வாழ்க்கையில் நிஜம்தான்!

இருப்பதில் பெருமை கொள்வோம்!
இருப்பதில் இன்பமிகுவோம்!
நம்வாழ்வு வளப்படும் அதுவே வாழ்வின் நிஜம்!

-செல்வா





Monday, 3 September 2018

இயற்கை காதல்!

கார்மேகமே கடந்து செல்லாதே,
மேகம் உடைத்து பசுமை செய்!

நதி நீரே வேகமாய் பாயாதே,
வரப்புகளில் புகுந்து பாசனம் செய்!

தென்றல் காற்றே வீசிச் செல்லாதே!
பூவின் மகரந்தம் கடத்தி
சேர்க்கை செய்!

அயராத பறவைகளே பறந்து செல்லாதே!
வழிநெடுக எச்சமிட்டு மரம் இடச்செய்!

மண்புழுக்களே சும்மா இருக்காதே,
நிலம் தழைக்கும் உரம் கிடைக்கச்செய்!

செழித்த மரங்களே தூங்கி நிற்காதே,
உன்னில் தஞ்சம் புகுவோர்க்கு இடம் செய்!

மண்ணே மயங்கி இருக்காதே,
உழுபவனின் ஆசைப்படி பயிர் செய்!

ஆசையின் அளவில்லாத பற்றினால், வழிமாறிப்போன மனித இனம்!
மனம் மாறிவிடும் மீண்டும் ஒருமுறை இயற்கையை பார்த்தால்!

-செல்வா



Saturday, 1 September 2018

பத்ம வியூகம்!

பாரதம் படித்தோர் அறிவர் பத்மவியூகம்!
பலம் குன்றினும், படைகுன்றினும்,
வியூகம் சிறப்பாக அமைவின் வெற்றி நமதே!

எல்லா வியூகத்திலும் வல்லவன் பார்த்தான்!
வியூகத்தை உடைப்பதிலும், உட்செல்வதிலும், வெல்வதிலும் வல்லான்!
பக்திக்கும், புத்திக்கும் வெற்றி என கண்ணன் அவன் புறம் நின்றான்!
உடல் நுணுக்கம் மட்டும் போதா, மதி நுணுக்கம் மிக்கவன் வல்லான்!
என ஒவ்வொரு முறையும் நிறுபித்தான் பார்த்தான்!

தாமரை மலர் போல சூழும் வியூகம் தனை!
தனதாக்கி வென்று முடித்தான் பார்த்தான்!
மதியின் வழி சென்று உடல் வாகுடன் போரிட்டான்!
மாற்றான் எவனாகினும் அஞ்சான் ஆனான்!
மதியின் கண் செயல் புரிந்தாகினான்! 
வெற்றி சூளுறை அவனிடம் நணுகியதே! 

-செல்வா