செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 27 September 2022

நம்பிக்கை!

பிரச்சனைகள் எல்லாம் 

தீர்ந்து போகும் தன்னாலே

நம்பிக்கை நிறைந்த மனிதன்

வாழ்வில் எப்போதும் வீழ்வதில்லை!

படகு கவிழ்ந்த போதிலும் 

துடுப்பை பற்றி கரை சேரலாம்!

துடுப்பு உடைந்த போதிலும்

வெள்ளப்போக்கில் கரை சேரலாம்!

கலக்கம் இருக்க தெளிவு ஏது!

விளக்கம் பிறக்க தடை ஏது!

நம்பிக்கை வைத்திடு 

நாளை நம்வசம்!

-செல்வா!

#tamil #iniyatamilselva #tamilquotes #tamilpoem #motivation #selfmotivation #selfhelp #kavita  #yourquote #quote #stories #qotd #quoteoftheday #wordporn #quotestagram #wordswag #wordsofwisdom #inspirationalquotes #writeaway #thoughts #poetry #instawriters #writersofinstagram #writersofig #writersofindia #igwriters #igwritersclub

Friday, 19 August 2022

முடிவு!

வாழ்வில் முடி 

வெடுக்கும் திறனை 

வளர்த்துக்கொள்ளுங்கள்!

வாழ்வில் இல்லையேல்

பிறர் முடிவை ஏற்றுக்கொண்டு நடக்க கற்றுக்கொள்ளுங்கள்!

இரண்டிற்கும் நடுவில் 

இருத்தல் எங்ஙனம் தகும்!

மனமும் உழலும் நாளும் புறளும்!

ஏற்றுக்கொண்ட முடிவிற்கு 

சூழ்நிலைகளை பலிபோடாதீர்கள்!

கடக்க நினைப்பவனுக்கும் வெள்ளமும்

அடைய நினைப்பவனுக்கு சிகரமும் 

கடினமாக ஒருபோதும் தோன்றியதில்லை!

-செல்வா!

#quotes #quotesforlife #quotestagram #motivation #tamil #tamilquotes #tamilkavithai #tamilpoem 

Read my thoughts on @YourQuoteApp #yourquote #quote #stories #qotd #quoteoftheday #wordporn #quotestagram #wordswag #wordsofwisdom #inspirationalquotes #writeaway #thoughts #poetry #instawriters #writersofinstagram #writersofig #writersofindia #igwriters #igwritersclub

Sunday, 14 August 2022

இனிய சுதந்திரதிருநாள் 

நல்வாழ்த்துக்கள்!

பார் முழுவதும் பறை ஒலிக்க

ஊர் முழுவதும் குதுகளிக்க

பெற்ற சுதந்திரமே அதை 

பேணிக்காப்போமே! 

முன்னோர்கள் செய்த தியாகம்

முன்னோர்கள் இட்ட உழைப்பு 

அதை நினைவில் கொள்வோமே!

இந்திய தேசத்தை முன்னோடி ஆக்குவோமே!

இந்திய தேசத்தை முதலாவதாக ஆக்குவோமே!

இதை உறுதி ஏற்று இத்திருநாளை கொண்டாடி பெருமை சேர்ப்போமே!

-செல்வா!

#india #indipendence #indian #indipendenceday #tamil #quote  #kavita #iniyatamilselva 

Read my thoughts on @YourQuoteApp #yourquote #quote #stories #qotd #quoteoftheday #wordporn #quotestagram #wordswag #wordsofwisdom #inspirationalquotes #writeaway #thoughts #poetry #instawriters #writersofinstagram #writersofig #writersofindia #igwriters #igwritersclub❤❤ 

Monday, 1 August 2022

 வெற்றித்தோல்வி!

வெற்றியும் தோல்வியும்

வாழ்வின் அங்கமே!

தோல்விகள் எல்லாம் 

வெற்றியின் படிகளே!

தொடர்ந்து ஓடுபவன் 

எல்லையை அடைகிறான்

இடையில் நின்றவன் 

அங்கேயே தங்குகிறான்!

எதிர்மறை கருத்தை 

எவரும் சொல்லலாம் 

உழைப்பை எள்ளலாம் 

இளக்காரம் செய்யலாம்!

இவைகளை சட்டை செய்யாமல்

பாதை மீது பார்வை வைத்து ஓடு

அடைவது இலக்கே தொடுவது வெற்றியே!

பார்வை இலக்காகட்டும் 

அடைவது வெற்றியாகடும்!

-செல்வா!

#tamil #tamilquotes #iniyatamilselva #motivation #quotes #quotestagram #kavidai #kavita 

Read my thoughts on @YourQuoteApp #yourquote #quote #stories #qotd #quoteoftheday #wordporn #quotestagram #wordswag #wordsofwisdom #inspirationalquotes #writeaway #thoughts #poetry #instawriters #writersofinstagram #writersofig #writersofindia #igwriters #igwritersclub❤❤ 

Sunday, 31 July 2022

 வாழ்நாள் சாதனையாளர்!

சிலர் முன்செல்வார்

சிலர் பின்செல்வார்

எவர் முன்வந்தாலும் 

எவர் பின்சென்றாலும்

நமக்கென்ன அதனால்

எனது பாதை வேறு 

எனது பயணம் வேறு 

எனது வெற்றியும் வேறு!

பிறருடன் ஒப்பிடுவதும் 

பிறருடன் மோதுவதும் 

அல்ல வாழ்க்கை 

தன்னை வெல்பவனே

வாழ்நாள் சாதனையாளன்!

-செல்வா!

#motivation #motivationalquotes #quote #quotestitchers #instawriters #instagram #iniyatamilselva #tamil 

Read my thoughts on @YourQuoteApp #yourquote #quote #stories #qotd #quoteoftheday #wordporn #quotestagram #wordswag #wordsofwisdom #inspirationalquotes #writeaway #thoughts #poetry #instawriters #writersofinstagram #writersofig #writersofindia #igwriters #igwritersclub

Friday, 22 July 2022

காற்று!

வாழ்வில் சிலநேரம் நமது பக்கம் காற்று வீசும் 

நடுக்கடலில் தத்தளித்திருந்த தனிப்படகிற்கு

கரை ஒதுங்க கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்தி 

எட்ட வேண்டிய இலக்கை அடைந்திடுவோம்! 

ஏன், சில நேரம் தொட முடியாத

இலக்கையும் தொட்டு மைல்கல்

நட்டிடுவோம் வெற்றியடைவோம்!

பட்டம் போல் வானில் பறப்போம்! 

வட்டம் போல் சுற்றாமல் பறந்திடுவோம்!

புதிய எல்லைகளை விரிவாக்குவோம்!

பற்பல வரலாற்றை உருவாக்குவோம்!

-செல்வா!

#motivation #motivationalquotes #quote #quoteoftheday #tamil #tamilquotes #tamilkavithai #iniyatamilselva  

Read my thoughts on @YourQuoteApp #yourquote #quote #stories #qotd #quoteoftheday #wordporn #quotestagram #wordswag #wordsofwisdom #inspirationalquotes #writeaway #thoughts #poetry #instawriters #writersofinstagram #writersofig #writersofindia #igwriters #igwritersclub

Sunday, 10 July 2022

மழை!

எந்தன் மாலை இத்தனை நறுமணம் வீசுகின்றது ஏனோ?

மழையே உந்தன் வருகைதான் காரணமா என்ன?

மண் குளிர்ந்து மணக்கின்றது!

புல் சிலிர்த்து நீர்த்துளி சுமக்கின்றது!

மரம் நனைந்து பசுமையாய் தளிர்க்கின்றது!

பூக்கள் பூத்தவண்ணம் சொரிகின்றது!

எந்தன் மாலை இத்தனை அழகானால்!

தினம் உன் வரவை எதிர்பார்ப்பேன்!

வந்து வண்ணங்கள் சேர்த்திடு மழையே!

-செல்வா!

#tamil #tamilquotes #tamilpoem #tamilkavithai #quote #quoteoftheday #iniyatamilselva #quotestagram  

Wednesday, 6 July 2022

 மனது!

மலை என்றாலும் 

மனது வைத்திட

நகர்த்திடலாம்!

துகள் என்றாலும்

மனது வலித்திட

நகர்த்த இயலா!

மனதின் வலிமை

எவ்வளவு உயர்வோ

வெற்றியின் வலிமையும்

அவ்வளவு உயர்வையடையும்!

மனதினால் நினைத்திட

முடியாதது யாது இவ்வுலகில்

மனதின்படி விடாது முயற்சிக்க!

-செல்வா!

#tamil #tamilkavithai #tamilpoem #tamilquotes #iniyatamilselva #quoteoftheday #quotestagram #quotesforlife 

Read my thoughts on @YourQuoteApp #yourquote #quote #stories #qotd #quoteoftheday #wordporn #quotestagram #wordswag #wordsofwisdom #inspirationalquotes #writeaway #thoughts #poetry #instawriters #writersofinstagram #writersofig #writersofindia #igwriters #igwritersclub

Thursday, 3 February 2022

அனுபவம்!

இதுவும் ஓர் அனுபவம்

எதுவும் கடந்து போகும்

கதவும் ஓர் வாய்ப்பாகும் 

அதிவும் முயன்றிட திறக்கும்!

வாழ்வில் நமக்கானது 

நம்மிடம் வந்து சேரும்

வாழ்வில் நமக்கானது

நம்மிடம் தங்கிப் போகும்!

விடாமல் துரத்திப்பிடி!

வாடமல் முயற்சி எடு!

வானம் வசப்படும்!

வாழ்க்கை நமதே!

-Iniyatamilselva.blogspot.com

இனிய தமிழ் செல்வா!

Thursday, 27 January 2022

சுகவாசி!

இந்த உலகம் எத்தனை அழகானது

அதை ஓர் சன்னலின் வழியே 

காணும் போது தெரிகிறது!

அரக்க பறக்க ஓடும் மானிடர்களும்!

எங்கே? ஏன்? இப்படி அவசரம்

அக்கேள்விக்கு விடை உண்டோ?

எல்லோரும் புரிந்து கொண்டார்கள் போலும்,

கொரோனா காலம் எல்லோரையும் உலுக்கிவிட்டது!

இனி வாழும் காலம் யாரும் அறியவில்லை!

இருக்கும் காலத்தில் பறக்க பழகினர் போலும்!

எதை செய்தாலும் அதை அனுபவிக்க பழகியவன்

அதன் சுகத்தே அனுபவிக்கவும் தவறுவதில்லை!

சுகவாசியாய் இருப்பதும் வரமே!

-Iniyatamilselva.blogspot.com

இனியதமிழ்செல்வா

#tamilquotes #tamilpoem #tamilkavithai #lifequotes #motivation #philosophy #philosophyoflife #selfmotivation 

Read my thoughts on @YourQuoteApp #yourquote #quote #stories #qotd #quoteoftheday #wordporn #quotestagram #wordswag #wordsofwisdom #inspirationalquotes #writeaway #thoughts #poetry #instawriters #writersofinstagram #writersofig #writersofindia #igwriters #igwritersclub❤❤ 

Wednesday, 26 January 2022

 உதவி!

உதவி செய்யும் பொழுது 

கணக்குப்பார்த்துக்கொண்டே

உதவி செய்தால் ஓர்நாள் 

கனம்தாங்காமல் பொத் தென்று

அவ்வுறவு அறுந்து கீழே விழும்!

எதிர்பாராமல் இன்முகமாய் 

செய்வதே ஆகச்சிறந்த உதவி

அஃதே தமிழ் செப்பிய அறம்!

உதவியை எண்ணி எண்ணி செய்ய!

உதவுபவர் உண்டோ உறவை ஒட்டி வைக்க!

-Iniyatamilselva.blogspot.com

(இனிய தமிழ் செல்வா)

#tamilquotes #tamilphilosophy #tamilpoem #motivation #gratitude #journeyoflife #lifequotes #livelifetothefullest 

Read my thoughts on @YourQuoteApp #yourquote #quote #stories #qotd #quoteoftheday #wordporn #quotestagram #wordswag #wordsofwisdom #inspirationalquotes #writeaway #thoughts #poetry #instawriters #writersofinstagram #writersofig #writersofindia #igwriters #igwritersclub

Sunday, 23 January 2022

தேடல்!

தேடல் தரும் தீரா போதை 

யாதும் தர வல்லதோ!

தேடல் தரும் தீரா மயக்கம் 

யாதும் தர வல்லதோ!

தேடல் வாழ்வின் நீண்ட பயணத்தின்

விடை தேடி ஒடிடும் பொழுதின் பொருள்!

தேடல் தொடர ஆர்வம் தொடரும்

ஆர்வம் தொடர ஆசை தொடரும்

ஆசை தொடர முயற்சி தொடரும்

முயற்சி தொடர வெற்றி மலரும்!

தேடி அடைவீர், அதன் போதை உணர்வீர்!

-Iniyatamilselva.blogspot.com

(இனிய தமிழ் செல்வா)

Wednesday, 19 January 2022

துணிவு!

தெரியாததை சொல்லி  விளக்கி விட முடியும்!

தெரிந்ததை செயலில் பழக்கிக் கொள்ள வேண்டும்!

அறியாததை ஆராய்ந்து  அறிந்து கொள்ள முடியும்!

அறிந்ததை பயன்படுத்தி தேரிக்கொள்ள வேண்டும்!

இவ்வுலகில் பல நேரங்களில் நமக்கு சரியான முடிவுகள் 

தோன்றினாலும் ஏனோ எடுக்கத் தவறிவிடுகிறோம்!

தவறாமல் துணிக!

எண்ணினார் வெல்வர்!

துணிந்து செயலாற்றின்!

-செல்வா!

Sunday, 16 January 2022

ஒளி!

வாழ்வு ஒளி பெறும் நாள்

வாழ்வு மிளிரும் நாள்

வாழ்வு ஒளிரும் நாள்

வழிவிடு நல்லன வருவதற்கு

சன்னலை திறப்பதால் மட்டுமே

காற்றிற்கு வழிகிடைக்கும் வந்து

வீட்டை காற்று அலங்கரிக்கும்!

வாழ்வில் கழிய தக்கதை கழித்து

புது ஒளி நுழைய வழியமைப்போம்,

நம்வாழ்வை ஒளியாக்கும் பணி நமதே!

ஒளிரட்டும் வாழ்வு, மிளிரட்டும் வாழ்வு! 

-செல்வா!