தேடல்!
தேடல் தரும் தீரா போதை
யாதும் தர வல்லதோ!
தேடல் தரும் தீரா மயக்கம்
யாதும் தர வல்லதோ!
தேடல் வாழ்வின் நீண்ட பயணத்தின்
விடை தேடி ஒடிடும் பொழுதின் பொருள்!
தேடல் தொடர ஆர்வம் தொடரும்
ஆர்வம் தொடர ஆசை தொடரும்
ஆசை தொடர முயற்சி தொடரும்
முயற்சி தொடர வெற்றி மலரும்!
தேடி அடைவீர், அதன் போதை உணர்வீர்!
-Iniyatamilselva.blogspot.com
(இனிய தமிழ் செல்வா)

No comments:
Post a Comment