நேரம்!
இல்லை என்றால்
என்றுமே இல்லை!
இருக்கிறது என்றால்
அளவிலாமல் இருகிறது!
மனம் என்னும் மாயாவி
சுகம் என்னும் சூட்சமத்தை
விட முடியாமல் உழல்கிறான்!
நேரத்தை இல்லை என்று மனதை தேற்றாமல்!
நேரம் இருக்கு என்று மனதில் நினைத்துப்பார்!
மறைந்திருந்த நேரமெல்லாம்!
மடை திறந்த வெள்ளமாய் வரும்!
காலம் உன்வசம் கனவும் உன்வசம்
உழைப்பு உன்வசம் வெற்றியும் உன்வசம்!
விழி! எழு! விருட்சமாகுக!
-செல்வா!

Superb
ReplyDelete