செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 29 October 2018

நட்புத்தோழி!

கனா ஒன்று கண்டேன் தோழி, அதில் நீ உலா வரக்கண்டேன் தோழி!

காலை முதல் இரவு வரை உடனிருந்தும்,
பொழுது பற்றாமல் கனாவிலும் வந்தாயே தோழி!

நீ உடனிருக்கும் பொழுதிற்கு தனி அர்த்தங்கள் பிறக்கின்றன!
என் உடன் பயணிக்கும் பொழுதிற்கு புது வரையறைகள் பிறக்கின்றன!

என் வளர்ச்சியில் உனக்கேன் அவ்வளவு அக்கறை தோழி!
வழி தெரியா பாதையில் சென்றேன் தோழி!
அதை விளக்க தக்க மனிதரில்லை தோழி!
சொன்னவர்களுக்கோ அனுபவம் அதிகம் தோழி!
ஆனால் சொல்லும் முறை முழுவதும் பிழையே தோழி!

வந்த நாளிலே என்னை புரிந்து கொண்டாய் நீயே!
இந்த நாளிலே உன்னை அறிந்து கொண்டேன் நானே!
இப்படி ஓர் நட்பு கிட்ட அந்த மூவேந்தரும் யாசிப்பர்!

நட்பென்னும் நன்நிலத்தில் தெளித்த விதை எல்லாம் விருட்சமே! 
உன் போல் ஓர் தோழி தினமும் தோள் கொடுப்பின்! 
சாத்தியமில்லா காரியமும் சாத்தியமே! 

வாழி என் தோழி. நீ வாழி!

-செல்வா

Saturday, 27 October 2018

நட்சத்திர இரவு!

நீல வானமே நீண்டு கொண்டே போகிறாயே!
மைதெளித்த மேகக் கூட்டமே பரந்து கிடக்கிறாயே!

மெய் ஒளி வீசும் நட்சத்திரமே தூரம் நிற்கிறாயே!
பால் ஒளி வீசும் வெள்ளி நிலவே சுற்றித் திரிகிறாயே!

வருடிச் செல்லும் தென்றல் காற்றே எங்கேயோ செல்கிறாயே!
இரவில் மஞ்சம் கொண்டேனே உங்கள் அழகில் மயங்கி சொக்கவே!

மாற்று உலகிலும் கிடைக்காத பாக்கியம் இது!
மனதை திருடும் இரவு என்றும் கண்ணில் தெரியட்டும்!

-செல்வா

Wednesday, 24 October 2018

மன்னிப்பாயா?

நட்பென்னும் பந்தலில் விரிசல் விட்டு நீர் சொட்டக் கண்டேன்! 
கசியும் நீர் தெருவெல்லாம் வழிந்தோடக்கண்டேன்!
நேற்றுவரை சிரித்து மகிழ்ந்த நெஞ்சம் வாடக்கண்டேன்!

கொடி படர்ந்த பந்தலிலே விச பாம்பினால் விரிசல் வந்ததோ?
இல்லை வழிபோக்கு காகமிட்ட முள்ளினால் விரிசல் வந்ததோ?

பார்த்த விசயங்கள் கண்களுக்கு அப்பாலே!
கேட்ட விசயங்கள் காதுகளுக்கு அப்பாலே!
என விவரம் அறிந்து பேசமால், ஆத்திரத்தில் வந்த கோபம் வாகை சூடிக்கொண்டதே!

நாளோடு மெருகும் நட்பு நடைமிதியாய் போனது! 
போனது திரும்பாது, இன்றோ நான் உணர்கிறேன் பிழையை! 
திருந்த ஓர் வாய்ப்பளிப்பாயா!
நட்பென்னும் பந்தலை இருகரம் கொண்டு தைத்திடுவோம்! 
ஒருமுறை மன்னிப்பாயா!
மன்னிப்பாயா?

-இனிய தமிழ் செல்வா

Monday, 22 October 2018

எண்ணம் போல் வாழ்வு!

ஒருவருக்கு எண்ணம் திடமெனில்,
அந்தியும் தலை சாய்க்கும்,
ஆகாயமும் நீர் சுரக்கும்,
இமயமும் ஏற இடம் தரும்,
ஈர மண் சிற்பமாய் மாறும்,

உலகில் முன்னேற்றம் வரும்,
ஊழ் முயற்சி வெற்றி பெரும்,
எண்ணம் போல் நிறைவேறும்,
ஏணி போல் வாழ்வு உயரும்,

ஐயமின்றி வாழ்வு மிளிரும்,
ஒன்று பட்ட முயற்சி கைகூடும்,
ஓடி உழைத்த பலன் கிடைக்கும்,
ஔவை கூற வில்லை, இது வாழ்வின் அனுபவம்,
அஃதே எண்ணம் இருப்பின் வாழ்வு வளமே!

-செல்வா

Tuesday, 16 October 2018

எதிர்பார்ப்பு!

வாழ்க்கை முன்னேறும் என்பதே நாளும் உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்பு!
கல்வி வாழ்க்கையில் உயர்த்தும் என்பதே ஏழை குடிமக்களின் எதிர்பார்ப்பு!

வெளிநாட்டில் வேலை செய்து விரைவில் கடன், கடமைகளை அடைப்பதே பரதேசியின் எதிர்பார்ப்பு!
ஆசை பட்ட எல்லாவற்றையும் அழுது வாங்கிவிடலாம் என்பதே குழந்தையின் எதிர்பார்ப்பு!

எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்வில்லை யாருக்கும்!
எதிர்பார்ப்பு பலிக்க செய்யும் முதலீடு தெரியவில்லை பலருக்கும்!

உழைக்காமல் இருந்தால் முன்னேற்றமில்லை!
கற்காமல் இருந்தால் உயர்வில்லை!
துயில் எழாமல் இருந்தால் எழுச்சியில்லை!
சேமிக்காமல் இருந்தால் செல்வமில்லை!

எதிர்பார்ப்பு பலிப்பது நம் கையிலே!
அதை சிலர் உழைப்பு என்பர், சிலர் புண்ணியம் என்பர்,
இன்னும் பலர் அதிர்ஷ்டம் என்பர்!
எது எப்படியாகினும் உனது முயற்சியே உனது எதிர்பார்ப்பை நிறைவேற்றும் கருவியாகும்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா


Sunday, 14 October 2018

இடைவெளி!

பிறப்பிற்கும் இறப்பிற்கும்மான இடைவெளி வாழ்க்கை!
இருப்பதோ எண்ணிவிடும் நாட்கள் இவ்வுலகில்!
இதில் எத்தனை சண்டைகள் எத்தனை வேற்றுமைகள்!

மனிதன் பறந்து திரியவே பெரிய உலகம் வைத்தான் இறைவன்!
மனிதனோ தனக்கொரு சாதி, மதம் என கூட்டம் கண்டு தேங்கலானான்!
அதில் அவன் பெருமை இருப்பதாய் உணர்ந்தும் கொள்கிறான்!

சாதிகளை சாலையிலே விட்டு விடவும், 
மதங்களை வீட்டின் மதில் சுவரில் விட்டு விடவும்,
சற்று எட்டிப்பாருங்கள் மனித நேயத்துடன்,
பிறர் போற்றும் படி வாழ்வு வாழ வேண்டும்,
வாழையடி வாழையாய் நம்மை யாவரும் வாழ்த்த வேண்டும்!
இப்படி ஓர் வாழ்வை ஓவ்வொருவரும் வாழத்துடித்தால்!
அந்த இறையும் இறங்கி வந்து வேடிக்கைபார்ப்பார்!
வா தோழா வா, நாளை நமதே!

-செல்வா

Friday, 12 October 2018

விசித்திர மனிதர்கள்!

இவ்வளவு சுயநலமாகியதா மனிதவாழ்வு?
இரக்கம் கொண்ட மனிதர்கள் அற்ப சொற்பம் தானா?

இன்றளவில் இரக்கம் குடும்பத்தினர் மத்தியிலே கூட இல்லை என்றாகின!
அக்கறை கொண்ட பால்ய உறவுகள் கூட பணத்தின் பெயரால் பகைத்து நிற்கின்றன!

பகைவன் கூட நம் வளர்ச்சியில் ஆர்வப்படுவார் ஆனால் பக்கத்து வீட்டுகாரரிடம் அதுஇல்லை!
நான் எனது என்ற குறுகிய வட்டத்தில் சுழலும் இயந்திரமாகின மனித வாழ்வு!

ஓடும் ஓட்டத்தில் வழியில் காணும் வித்தைகளில் சற்று இளைப்பாறி இதுதான் வாழ்வாகின!
பொருட்களை சேர்க்கின்ற வேகத்தில் சில மனிதனை கூட சம்பாதிக்க முடியாமல் போகின்றன!

உலகமயமாதலினால் ஒருவன் வைத்திருக்கும் பொருளே அவனது மதிப்பு என்றாகின!
ஒரு வெள்ளத்தில் பொருட்கள் அடித்துச்சென்றால் எல்லோரும் சமமே!

சேர்ப்பதை இதயமாகவும், சேமிப்பை முதலிடாகவும் செய்யின் எதிர்காலம்
இரக்கமான காலமாக தோன்றும்...

நாளும் சிந்திப்போம் நல்மனிதனாக இருப்போம்...

-செல்வா





Wednesday, 10 October 2018

குறையில்லா மனிதன்!

குறையில்லா மனிதன் உண்டா இவ்வுலகில்?
நம் எதிரில் உள்ளவர் குறையில்லாதவரே நமக்கு!
நாம் அடுத்தவர் தட்டையே எப்பொழுதும் நோக்குகிறோம்!
நமது தட்டை நாம் எப்போது பார்க்கின்றோமோ,
அன்றிலிருந்து குறையில்லை, ஏனென்றால் நம்முடையதோ அக்ஷயபாத்திரம்!

எதுவாகினும் அது நம்மிலிருந்து துவங்குகிறது!
நமது எண்ணம் எப்படியோ அதுவே நமது சூழ்நிலை!
நமது சூழ்நிலை எப்படியோ அதுவே நமது செயல்!
நமது செயல் எப்படியோ
அதுவே நமது வெற்றி!

தடைகள் தடையாகவும் இருக்கலாம்!
தடைகள் சவால்களாகவும் பார்க்கலாம்!
தடையாக தோன்றின் சோகyம், தோல்வியாய் முடியும்!
சவாலாக தோன்றின் உற்சாகம், வெற்றியாய் முடியும்!

விழி திறப்பின்,வழி பிறக்கும்! 
விழி திறப்பின்,ஒளி பிறக்கும்! 
வாகை சூடுவோம் மனக்கண் மார்க்கமாக!

-செல்வா