செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Wednesday, 31 January 2018

விழுவதும் எழுவதும் வாழ்வின் பரிணாமமே,
பகல் முடிந்து இரவைப் போல...

கடிவதும் கட்டி அணைப்பதும் அன்பின் குணமே,
நல்மனிதனாய் உலகத்தில் உருவெடுக்க...

இன்பமும் துன்பமும் ஒழுக்கத்தின் சன்மானமே,
ஒன்றை அனுபவித்தால் தான் மற்றதன் உண்ணதம் உணர...

ஏற்றத்தாழ்வுதனை புன்னகையுடன் ஏற்றுக்கொள், ஏற்றத்தில் உயரத்தையும் இறக்கத்தில் ஆழத்தையும் அளந்தேன் என பெருமை கொள்...

வாழ்க்கையை புன்னகையால் அளவளாவு,
அழுதவுடன் மறந்து சிரிக்கும் குழந்தைப்போல!!!

-செல்வா


Monday, 22 January 2018

நகரத்து வாழ்க்கை!!!

நகரத்து வாழ்க்கையை நவநாகரிக வாழ்க்கை என்பார் பலர்,
இங்கு வந்தடைபவர்கள் இருவரே, 
ஒருவர் கனவுகளையும், மற்றொருவர் கடன்களையும் சுமந்து வருபவர்களே!!!

எல்லாம் இங்கு காசே!!!
காலை முதல் மாலை வரை, மல்லிகை முதல் மனிதம் வரை.

ஓடு,ஓடு இடைவிடாமல் ஓடு லட்சியம் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் வழி ஒன்றே!!!

இங்கு காலம் பாராத உழைப்பிற்கே ஊதியம் அதில் பகலுமில்லை, இரவுமில்லை, பனியுமில்லை, மழையுமில்லை,
எந்நிலை உயரும் என்ற நம்பிக்கை மட்டுமே!!!

தன்னை நம்பி! தன் உழைப்பை நம்பி! கனவுகளையும் கடன்களையும் பூர்த்தி செய்ய ஓடுபவர்களை ஒருபோதும் கைவிட்டதில்லை இந்நகரம்!!!
மொத்தத்தில் அனைவரின் கனவுகளினால் தூங்காமல் விழித்திருக்கிறது இந்நகரம் இப்பொழுதும் எப்பொழுதும்!!!

-செல்வா

Saturday, 20 January 2018

விழி.எழு.விருட்சாமாய் வளர்ந்திடுக!!!

வாழ்க்கையில் நம்மை உயர்த்துவது தன்னம்பிக்கையே, எண்ணம் செயலாக வந்து நற்பழக்கமாக உருவம் பெற்றால் வெற்றி நம்மிடம் அகப்படும். 🌱🌴🌲🌳

உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று-குறள் 591

வானம் உங்கள் வசப்பட வாழ்த்துக்கள்!!!


Friday, 19 January 2018

காலத்தின் கொடுமை!!!
காசே எல்லாமாய் ஆன பிறகு  உண்பதற்கு சோறு எதற்கு?
கழுவித்தீர்க்க முடியாத பாவமடா!
ஓர் ஓட்டிற்கான பிரதிபலனடா,
ஆட்சியிலிருப்பவருக்கோ அவசரம் அள்ளி குவிப்பதில்!
அப்போது கூச்சலும் கேட்காது குழப்பமும் இராது!
தட்டிக்கேட்பவனை எல்லாம் விலங்கிட்டு அடைத்து தனது விசுவாசத்தை துதிபாடி,
கறையில்லா துணி உடுத்தி பவுசாக உலவுகின்றது அந்த கூட்டம்!
எங்கனம் மன்றாடுவேன் அவ்வப்போது போராடிய என் மக்களுக்கு போராட்டமே வாழ்வான நிலை,
தரிசு நிலத்தை மலடாக்கி, அபாயமான அணுஉலை மேலும்  பல கட்டி வாழவைப்போம் பிறரை தலைமகனாய்,
நதிநீர் இணைப்பில்லை, காவிரி நீர் எமக்கில்லை, ஏழை மக்களுக்கு மானியமில்லை, விவசாயிக்கு வாழ்வாதாரமில்லை!
இன்னும் எத்தனையோ மாற்றங்கள் திணிக்கப்படும் வேலையில் குரல் கொடுக்காவிடில் மெல்ல மெல்ல காணாமல் போய்விடும் ஓர் இனம்!
விழி.எழு.நிமிர்ந்து நில்
-செல்வா

Saturday, 6 January 2018

வாழ்வின் அதீத நேரங்களில் நமது சந்தோஷங்களை பணத்திற்காக துறக்கின்றோம்!

அனுபவிக்காத சின்ன சின்ன சந்தோஷங்களை விலைகொடுத்து,
வாங்கிவிடலாம் எனநினைத்து விடுகின்றோம்!

இந்த உலகமும் அப்படியே வெற்றி பெற்றவனுக்கே மகுடம் சூட்டுகிறது,
வெற்றி பெற்றவனை கேட்டுப்பாருங்கள் அவன் பெற்றதைவிட இழந்ததே அதிகம்!

முடிந்தவரை மிடுக்காய் திரியாமல், கடுக்காய் அளவு மகிழ்ச்சியானாலும் மனம்குளிர மகிழ்வோம்!

சின்ன சின்ன மகிழ்ச்சிகளே நம்வாழ்வின் உயிர்ப்புகள்!
புன்னகைப்போம் புத்துயிர் பெறுவோம்!

-செல்வா

முதல் நண்பனே!
அனுதினமும் சலிக்காதவனே!
நாளின் தொடக்கமுதல் உறக்கம் வரை என் நினைவை பகிர்பவனே!
உன்னை நான் பருக நான் திளைத்தேன்!
களைப்பினில் உற்சாகம் தர, காலையில் புத்துணர்ச்சி தர,
சிந்தனையில் சித்தம் நிலைத்திர, நித்திரை கொள்ளாத விழி தர,
உன் பங்கு என்னில் அதிகம்!
எவ்வகையான மனதையும் தேற்றுவதாலேயோ என்னவோ தேநீர் ஆனாய்!!!
என்னை உற்சாகம் செய்யும் உன் சௌகரியம் அதிசிறப்பே!!!

-செல்வா



Monday, 1 January 2018

🎆🎇🎈🎊🎋🎄விதையிலிருந்து விருட்சமாகி, ஓங்கி உயர வளர்ந்து, தளைத்து நின்று, நிழல் தருவதே மரம்... இதுபோல் நம் ஒவ்வொருவரின் வாழ்வும் இந்த இருபது பதினெட்டாம் ஆண்டில் சிறக்க வேண்டும் என்பதே என் எண்ணம் & பிரார்த்தனைகள் 🔔🎄🎆🎇🎊🎉

🎆🎇🎈🎉🎊இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2018🎄🎆🎇🎈🎉🎊