செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 19 October 2020

ஆறாய் ஓடும் வாழ்வு!


ஆறாய் ஓடும் வாழ்வினிலே!

பாதை நெடுக பாறை வரினும்,

பள்ளங்கள் பல கடக்க நேரிடுனும்!

நீரோட்டத்துடன் நிற்காமல் செல்கிறது நம் வாழ்வு!


இருளான நேரத்தில் கிடைக்கும் அருளும்!

இடரான நேரத்தில் கிடைக்கும் பொருளும்!


நம் நம்பிக்கைக்கு ஊற்று நீரே!


எவ்விடத்திலும் தங்காத நீர் கெடுவதில்லை,

மாறாக எல்லையில்லா முடிவிலியாகிறது!


அதுபோலவே சில பல இடர்களில் தங்கிடாதே!

பெரிய பரிசுகள் இவ்வுலகில் முயற்சிப்பவர்க்கே  சாத்தியம்!


-செல்வா!


Friday, 16 October 2020

 நேரமின்மை!


நேரத்தை இரவல் வாங்குங்கள்!

வாழ்க்கை இனிமையாகும்!


பேசும் நேரத்தை துறந்தால் மேதை யாகலாம்! 

ஓய்வு நேரத்தை துறந்தால் அறிஞன் ஆகலாம்!

தூங்கும் நேரத்தை துறந்தால் ஞானி ஆகலாம்!


மொத்தத்தில் மனிதனாக ஆக,

என்ன கடன் வாங்க வேண்டும்!


மனிதனாக ஆக கடன் வாங்கனால் இயலாது,

வரம் தான் வாங்கி வர வேண்டும் மனிதனாக!


மனிதம் உணர்வோம் தினமும் மகிழ்வோம்!


-செல்வா!


Thursday, 15 October 2020

எ.பி.ஜே.அப்துல்கலாம்!


கனவு நாயகரே வாழ்நாள் சாதனையாளரே!

பல இளைஞர் உள்ளத்தில் எதிர்கால

கனவை விதைத்தவரே!


அறிவியலும் ஆன்மீகமும் வேறில்லை 

ஒன்றில் மற்றொன்றை ஆழ்ந்து உணரலாம்

என்று உரைத்து உணர்த்தியவரே!


நீங்கள் தூவிய விதை ஒருபோதும் உறங்காது!

வளர வேண்டுமானால் சிறிது நேரம் எடுக்காலம்!

இவ்விதை ஓங்கி உயர மரமாக வளரும் ஓர்நாள்!


அதன் பயனே உமக்கும் எமக்கும் வெற்றியாகும்!


-செல்வா!



Thursday, 8 October 2020

 நேரம்!


இல்லை என்றால் 

என்றுமே இல்லை!

இருக்கிறது என்றால்

அளவிலாமல் இருகிறது!


மனம் என்னும் மாயாவி 

சுகம் என்னும் சூட்சமத்தை

விட முடியாமல் உழல்கிறான்!


நேரத்தை இல்லை என்று மனதை தேற்றாமல்!

நேரம் இருக்கு என்று மனதில்  நினைத்துப்பார்! 


மறைந்திருந்த நேரமெல்லாம்!

மடை திறந்த வெள்ளமாய் வரும்! 


காலம் உன்வசம் கனவும் உன்வசம்

உழைப்பு உன்வசம் வெற்றியும் உன்வசம்!


விழி! எழு! விருட்சமாகுக!


-செல்வா!


Sunday, 4 October 2020

 சிந்தனை!


சிந்திக்க பழகிடு மனிதா,

சிகரம் பல அடைவாய் நீ மனிதா!


சிந்தனையை அகலமாக்கு மனிதா,

சிறந்த படைப்புகள் நீ படைத்திடுவாய் மனிதா!


சிந்தனையை விரித்திடு மனிதா,

சீரான வாழ்வு வசப்படும் ஓ மனிதா!


சிந்திக்கத் தெரிந்தவனை அடக்கமுடியாது!

சிந்திக்கத் தெரிந்தவனை ஒடுக்க முடியாது!


சிந்தை அது வலிமையான விந்தை,

வாழ்வை மாற்றிடும் அரிய செய்கை!


விழித்திடு, உன் வாழ்வும் 

தாழ்வும் உனது கைகளிலே!


-செல்வா!