செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 27 July 2020

அம்மா!
அழகான ஓவியம் நீ!
எத்தனை கவிதைகள் 
வரைந்தாலும் போதாது 
அம்மா உன் பெருமைக்கு 
அது ஈடாகாது இணையாகாது!

எனை சுமந்த உனக்கு 
மறுகை என்ன செய்வேன்
எத்தனை செய்தாலும்
சிறு கையில் ஊட்டிய
கூழ் போல சிறியனவே!

எத்தனை பிறவி எடுத்தாலும் 
உன் மடியில் நான் தவழ்ந்திட 
வரம் தருவாய்  நீ எனக்கு
தாயே அச்சொல்லின்
பொருள் உணர்ந்தேன் 
உன் செழுத்த அன்பிலே!
தேர்ந்த நற்பண்பிலே!

உன் போல் யாராலும் 
தர இயலாது அவ்வன்பு
என்றும் மாறாத அன்பு! 

வாழி நீர் வாழி...

-செல்வா!





























































































































Tuesday, 14 July 2020

இயற்கை எழினி!

தூரத்து நிலவும் பக்கம் தெரிகிறது!
என் பாரமெல்லாம் பஞ்சாய் மாறுகிறது!

வானத்து தேவதையே,
முகில் என்ன உன் உறவோ,
மின்னல் என்ன உன் தூதரோ,
இடி என்ன உன்  தோழியோ,
தூரல் என்ன உன் கோபமோ!

ஏதேதோ வந்து செல்கிறது,
உனது வருகையை சொல்ல!
எதேதோ நின்று செல்கிறது,
உனது அருகாமையை சொல்ல!

கனவுலக ராணியே!
நினைவுலக தேனீயே!
பாதை மறவாதே!

-செல்வா!

Monday, 13 July 2020

பஞ்சம்!

கவிஞனுக்கு உவமை பஞ்சமில்லை!
குழந்தைக்கு தூக்கம் பஞ்சமில்லை!

நிலவுக்கு வானம் பஞ்சமில்லை!
மழைக்கு நிலம் பஞ்சமில்லை!

எனக்கு மட்டும் நினைவுப்பஞ்சம்!
கொஞ்சம் நஞ்சம் இல்லா அதீதபஞ்சம்!

தீயாய் பரவும் பசியாய்!
ஆறாய் விரியும் நீர் திமிலாய்!

நீளும் உந்தன் நினைவுப்பஞ்சம்! 
தாளாதோ இப்பஞ்சம் காணாத நாள் வரை!

-செல்வா!


Wednesday, 1 July 2020

மழை முகில்!

மழையினில் முகம் புதைத்தாய்
முகிலென மனதில் வட்டமடித்தாய்!

எங்கோ உள்ள சந்திரன் இன்று,
என் அறை சன்னல் அருகில் வந்தது,
தூது ஒன்று தந்து சென்றது!

நான் காண மறந்த அந்த எழிலினை!
நான் காண வேண்டி ஒரு கடிதம் தந்தது!

நிலவின் அழகிற்கு நிகரானவளே!
நின் அழகில் இப்புவியும் மறந்து சுழல்கிறது!

நிற்கச்சொல்லி நிதம் வேண்டுகிறேன்!
ஒரு போதும் காதில் விழவில்லை ஏனோ!

-செல்வா!
வாராயோ தோழா!

வாசல் வரை வந்து நின்றேன்
நீ வருவதாக தெரியவில்லை!

வீதி எங்கும் தேடி அலைந்தேன்
நீ வருவதாக தெரியவில்லை!

ஊர் எங்கும் தேடித்திரிந்தேன்
நீ இருப்பதாக தெரியவில்லை!

சன்னல் ஓரம் தயங்கி நிற்கிறேன்
சாலையில் கடந்து செல்லும் 
வாகனத்தில் எதாவது ஒன்றில் 
உன்னை கண்டடைவேன் என!

வாராயோ தோழா வாராயோ!

-செல்வா!