செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 23 July 2021

பறவை!


தேறிக்கொண்டிருக்கும் பறவை நான்,

தேர்ச்சி பெரும் நாள் எப்போது வரும்?


தேடல் கொண்டிருக்கும் பறவை நான்,

தகுந்த பொருள் எப்போது வரும்?


நாடல் கொண்டிருக்கும் பறவை நான்,

தன்னை மறந்து திளைத்திடும் நாள் எப்போது வரும்?


நாளும் உழைக்கும் விண்மீனாக இருத்தல் நலம்!

அதன் ஆற்றல் ஒருபோதும் குறைவதில்லை!


-செல்வா!






Tuesday, 20 July 2021

தொடர் ஓட்டம்!


காலங்கள் கடக்கின்றன,

மாயங்கள் நடக்கின்றன!


தொடர் ஓட்டத்தில் 

தொடர்ந்து ஓடினால் 

இலக்கை அடைந்திடலாம்

ஆனால் எத்தனை முறை

தொடர்ந்தோம் கேள்விக்குறி?


சில சமயம் ஏன் ?

பல சமயங்களில்

எல்லையின் தூரம் 

கண்களை அச்சுறுத்தும் 

கால்களை பலவீனமாக்கும்

ஆனால் மனதின் பலத்தால்

சாதித்தவை பல உண்டு!

நம் வாழ்விலும் உண்டு!


நம்பிக்கை வைத்து ஓட,

தூரமும் பாரமும் குறையும்!


காலங்கள் கடந்து செல்ல 

மாயங்கள் நிகழ்ந்து விடும்!


விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா 





Saturday, 10 July 2021

யார் அழகு!


எல்லோரும் அழகு தான் 

அவர் அவராவே இருக்கும் வரை!


பிறருக்காக தன்னை மாற்றினால்,

தன்னிலை மறந்து மாறினால்,

மனிதன் அழகு மாறிடும்!


யார் தன்னை மறவாமல் 

பிறருக்காக மாறாமல் 

மனம் கோணாமல் 

நேராக இருந்தால் 

அதுவே அழகு 

அதுவே 

எழில்!


-செல்வா







Monday, 5 July 2021

உறுதிகொள்!


உறுதி ஒன்றை ஏற்றுக் கொள் குருதி வற்றும் வரை ஆற்றல் கொள் 

பகுதி ஒன்றை வெற்றி கொள் தொகுதி முழுதாக்கிக் கொள்


சிந்தும் முயற்சி அதற்கில்லை வறட்சி! 

முந்தும் வளர்ச்சி குறைவிலா வெற்றி!

தங்கும் நிலையே தளர்விலா புகழ்ச்சி!


உறுதிகொள், உலகம் உன் கையில்!

விழி எழு விருட்சமாகுக!


-செல்வா!


Friday, 2 July 2021

மழலை!


உன் சிரிப்பினில் உலகம் 

தலைகீழாய் தெரிகிறது!

உன் கண்களில் மீண்டும் 

வாழ்வதற்கு ஆசை பிறக்கிறது!


எனை தேற்றும் மழலை மொழி,

எனை ஆற்றும் நிழலை பொழி,

விழிகளில் தெரியும் நளினம்

வழிகள் பல பல தருகிறது

வாழ்வில் புதிய துவக்கம்

அமைத்திடவே!


-செல்வா!