செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 26 June 2021

பிரச்சனை!


பிரச்சனைகளே தீர்வுக்கு ஆரம்பம்!

பிரச்சனை யில்லாத வாழ்வில்லை யார்க்கும்!


பிரச்சனைகள் நம்மை வளர்க்கும்!

பிரச்சனைகள் தீர்வு உண்டாக்கும்!

பிரச்சனைகள் திறமை அள்ளித்தரும்!


பிரச்சனை பிரச்சனையாக அனுகாதே!

பிரச்சனையிலிருந்து விலகி நின்று பார்!

பிரச்சனை சிறிதாக தெரியும் தீர்வும் வரும்!


பிரச்சனை தீர்க்க முடியுமானால்!

பிரச்சனை பிரச்சனையே இல்லை!


விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா!





Sunday, 20 June 2021

தந்தை!

ஆற்றிய கடமைக்கும் 
சேமித்த உடமைக்கும் 
கணக்குகள் இல்லை!

இலக்கமைத்து எங்களை ஏற்றினாய்,
வாடியபோதெல்லாம் தேற்றினாய்!

அனுபவ அறிவை புகட்டினாய்!
தனதுவாழ்வை அர்பணித்தாய்!

ஒரு பிறவி போதாது பட்ட கடன் தீர்க்க!
இனிவரும் பிறவியிலும் வரம் வேண்டும்!
உங்களுக்கு குழந்தையாய் பிறக்க!

இனிய தந்தையர் தின 
வாழ்த்துக்கள் அப்பா!

-செல்வா





Saturday, 19 June 2021

செயல்!


மாற்றம் என்பது செயலில் உள்ளது,

பேச்சிலும் சொல்லிலும் இல்லை!


நம்பிக்கை என்பது நிரூபணத்தில் உள்ளது,

புராணத்திலும் பேச்சு வழக்கிலும் இல்லை!


இன்று என்பது அனுபவத்தில் உள்ளது,

நேற்றும் நாளையும் இன்றைய வடிவில் உள்ளது!


உலகின் தலைசிறந்த சொல் செயல்!

சொல்லாமல் செய்தால் செயலுக்கு அழகு!


-செல்வா


Read my thoughts on YourQuote app at https://www.yourquote.in/selva-sankar-cgsnu/quotes/ceyl-maarrrrm-ennnptu-ceylil-ulllltu-peeccilum-collilum-col-b8tgi7

Friday, 18 June 2021

வள்ளுவம்!


வள்ளுவம் வாழ்வியலுக்கானது!

பயிற்றுவிக்க தவறிவிட்டார்கள்!


இன்றும் தாமதமில்லை,

இன்றே துவங்கினால்,

நன்றாய் துணைவரும்!


வாழ்வின் எந்த சூழ்நிலைக்கும்!

விடை கொடுக்கும் ஓர் அரிய புதையல் திருக்குறள்!


மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை

வாழ்விற்கு அருள் சேர்க்கும் அரும்பொருள்!


நாம் தமிழராக பிறந்த கொடை!

திருக்குறளின் உண்மை உணர்தலே!


-செல்வா!




Wednesday, 16 June 2021

தேவை!


தேவையின் பொருட்டே

தேடலின் ஆழம் நீள்கிறது.


பாடலின் பொருட்டே

இசையின் சுரம் நீள்கிறது.


ஆடலின் பொருட்டே

கால்களின் வலிமை நீள்கிறது.


ஆசையின் பொருட்டே

வாழ்வின் தேவை நீள்கிறது.


தேவையுடன் நிறுத்த பழகினால்

தேடலும் குறைவுதான் வாழ்வும்

நிறைவுதான்! 


-செல்வா


Tuesday, 15 June 2021

உண்மை!


உண்மை அழியாது என்பார்

யாரும் அறியவில்லை எனில் 

உண்மைக்கு மதிப்பு உண்டோ?


உலகம் உண்மையை திரிக்கும் 

உலகம் உண்மையை பழிக்கும்

உலகம் உண்மையை கிழிக்கும்

உலகம் உண்மையை மறுதலிக்கும்!


உண்மை ஒருபோதும் உண்மையாக 

வெளிகொணராதவரை!

உண்மைக்கும் மதிப்பில்லை!

அது மறைந்திருந்தும் பயனில்லை! 


-செல்வா!


Monday, 14 June 2021

தமிழ் போல் வாழ்க!


தமிழ் போல் வாழ வரம் வேண்டும்!

ஆண்டு பல நூற்றாண்டு கண்டும்!

தன்னகத்தே அனைத்தையும் கொண்டும்!

மாறுதலுக்கு தகவமைத்துக் கொண்டும்!


செழுமையிலும் வளமையிலும் 

குறைவிலாமல் நிறைவாய்!

எல்லோருக்கும் சான்றாய்

சகிப்பின் ஊன்றாய் நிற்க!


எவர் எதை தேடிப்பயணித்தாலும்

தமிழில் அதற்கான விடை உண்டு!


தமிழ் போல் வாழ்வு கிட்ட 

எவரும் வரம் பெற்று வர வேண்டும்! 


-செல்வா!





Saturday, 12 June 2021

வாய்ப்பு!


வாழ்க்கை எப்போது யாருக்கு

வாய்ப்பளிக்கும் என்பது தெரியாது?


கற்பனைக்கு எட்டாத கனவும்

விற்பனைக்கு எட்டாத பொருளும்

இடைவிடாத முயற்சியால் எட்டும்!


வாழ்க்கை அதன் ஒவ்வொரு படிக்கும் 

நம்மை வெகுவாய் தயார் செய்யும்!


வாய்ப்பு கிடைக்கும் வரை பயிற்சி செய்!

தக்க நேரத்தில் வெற்றிக்காக முயற்சி செய்!


வரலாற்றின் பக்கங்களில் சுவாரசியம் குறையாமல் 

உனது கதையே சேர்த்திடு!


-செல்வா





Friday, 4 June 2021

பரிசு!


எனை முட்டிச்செல்லும் யாவும்

வல்லமை படைத்தவையே!

எனை விட்டுச்செல்லும் யாவும்

தகுதி அற்றவையே!


எனை கடந்து செல்லும் யாவும்

பாடம் கற்றுத்தந்தவையே!

எனை படர்ந்து செல்லும் யாவும் 

உணர்வாளன் என உணர்த்தியவையே!



எனை இகழ்ந்து செல்லும் யாவும்

நானாக இருந்ததை காட்டியவையே!

எனை புகழ்ந்து செல்லும் யாவும்

கடமை இருக்கென சொல்லியவையே!


எத்தனே மனிதர் உலகில் அத்தனை புதுமை அதிலில்

ஒன்றாக படைத்திருந்தால் 

படைப்பின் அருமை விளங்க

வாய்பில்லை அதனாலே 

ஒன்றாய் படைத்து மனதை

பரிசாய் கொடுத்தான்!


பரிசோ நம்கையில் 

பயன்பாடும் நம்கையில்!


விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா!