செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 30 April 2021

உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!


உழைப்பாலே உயர்வு,

உழைப்பாலே வாழ்வு,

உழைப்பில்லையேல்,

உயர்வில்லை இங்கு!


ஊழின் வழி உயர்வு,

ஊழின் வழி வாழ்வு,

ஊழ் இல்லை யேல்,

உயர்வில்லை இங்கு!


உழவர் கை மடங்க உணவில்லை,

தொழிலாளர் கை மடங்க எதுமில்லை!


உழைக்கும் வர்கத்திற்கு கர்வம் உண்டு!

உழைப்பாலே உயர்ந்தோர் பலர் உண்டு!


உலகம் உழைப்பாளர்களை போற்றட்டும்!

உழைப்பின் பயனை முழுதாய் காணட்டும்!


இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!





Wednesday, 28 April 2021

தேர்வு!


எது வேணாமோ தவிர்த்திடு!

அதை பார்க்கவும் வேணாம்,

அதை பேசவும் வேணாம்!

அதை கேட்கவும் வேணாம்,

அதை பகிரவும் வேணாம்,


வேண்டாததை தவிர்க்க 

வேண்டுவன பேசுவோம்

வேண்டுவன கேட்போம்

வேண்டுவன பார்ப்போம்

வேண்டுவன பகிர்வோம்!


அது நலமாக இருக்கலாம்

அது நல்லனவாக இருக்கலாம்

அது உதவியாக இருக்கலாம்

அது உற்சாகமாக இருக்கலாம்!


நம்பிக்கை விதைத்து நம்பி அறுவடை செய்வோம்!

எனில் நம்பி முயல்வோர்க்கு இப்பூவி ஏன் அப்பேர் பட்ட இறைவனும் உதவிட ஓடோடி வருவான்!


-செல்வா!




Sunday, 18 April 2021

வாழ்க்கை இனியதே!


வாழ்க்கை இன்னும் அழகானதே!

ஒப்பனைக்கு எட்டாத எழிலானதே!


எத்தனை காரணங்கள் இருப்பினும்

இனிதான வாழ்க்கையை மறுக்க இயலா!


நம் கண் கொண்டு காணும் புதினம் இது!

நம் புலன் கொண்டு உணரும் புத்துயிர் இது!


சலனமற்ற ஓடையில் மீன் நீந்திப்பழகாது!

அஃதே வாழ்வென்னும் சலனத்தில் நீச்சல் பழகு!

அதன் ஆழ அகலங்களையும் அலை உயரத்தையும்,

இயன்று பயின்று முயன்று இலக்கை அடைந்திடு!


நேரம் கிட்டும் போதெல்லாம் 

அதன் எழிலினை ரசிக்க மறவாதே!

செடிக்கு நாள் ஒரு மேனி நீர் போல,

நம் நற்பார்வையே எந்நாளையும் புதிதாக்கும்!


மகிழ்ந்திரு, இன்று இல்லையேல் என்று?


-செல்வா!



Thursday, 8 April 2021

வானமே எல்லை!


வானமே எல்லை வாழும் வரை!

வானமே எல்லை வெல்லும் வரை!


விதி கொண்டோர் மட்டும் வென்றதில்லை!

மதி கொண்டோர் எட்டும் வென்றனர்!


நல்ல பழக்கம் வாழ்வை உயர்த்தும்!

நம்பிக்கை வெற்றி ஈட்ட உதவும்!


தண்ணீரில் முதலையின் வெற்றி உறுதி!

தரையில் புலியின் வெற்றி உறுதி!


தனக்கான இடத்தை தெரிவு செய்து கொள்!

தகுதியினை சலிப்பின்றி வளர்த்துக்கொள்!

வானம் என்ன, அண்டம் கூட கையில் எட்டும்!


விட்டுவிடாதே! எட்டும் தொலைவே கனவு!


-செல்வா!






Tuesday, 6 April 2021

சிட்டுக்குருவி!


சின்னதாய் சிறகடித்து!

சிலாகித்து வானில் பறந்து!

அங்கும் இங்கும் சீராய் சத்தமிட்டு!

கொஞ்சி கொக்கரித்து வட்டமிட்டு! 

பறந்து திரித்து வானில் வலம் வந்து!

இடம் புறம் சிறிய இறகால் அளந்து!

மனிதனிடம் சிக்காமலும் பழகாமலும்!

தள்ளி நின்று வேடிக்கை காட்டும் உன் கூட்டுக்குள்!

ஒரே ஒரு நாள் மட்டும் விருந்தாளியாக வர ஆசை!


பட பட என இயங்கும் உலகை விட்டு!

உன்னுடன் ஒரு நாள் மட்டும் பறக்க ஆசை! 


நிறைவேறா ஆசை எனினும்

கனவிலாவது நிறைவேற ஆசை!


-செல்வா!




Friday, 2 April 2021

செவிடு!

சிலநேரம் செவிடனாய் இருந்தால் என்ன?
தன்னை பற்றி புறம் பேசுபவர்கள் மத்தியில்?
தன்னை பற்றி புகழ்ந்து பேசுபவர்கள் மத்தியில்!

ஒத்துப்போகாமல் சண்டையிடும் வேளையில்!
குற்றம் கூறி குறை கூறி தட்டிக்கழிக்கும் வேளையில்!

சுற்றம் கூடி தகராறு புரிகையில்!
ஆசைச்சொற்கள் ஆளை விழுங்குகையில்!
அரசியல்வாதி வாக்குறுதி புரிகையில்!

கொஞ்ச நேரம் கேட்காமல் இருந்தால் என்ன?
எத்தனை இடர்களை தள்ளி நிற்கலாம்!

இடரெல்லாம் இடம் போகட்டும்!
நல்வாழ்வு வலம் வரட்டும்!

நல்லது நடக்க நல்லன கேட்டு!
நல்லது நடக்க நல்லன செய்வோம்!

விழித்திருப்போம்!

-செல்வா!