செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Wednesday, 27 January 2021

 உழைப்பு!


உழைப்பு!


நாளை மாற்றத்திற்காக இன்று உழைப்போம்!

நாளை நன்றாக மலர இன்று உழைப்போம்!


சில வேலைகளில் அயர்ந்தாலும்!

சில வேளைகளில் சோர்ந்தாலும்!


தாளாமல் தளராமல் 

உழைப்பால் உயர்வோம்

தன்னிகர் அடைவோம்!


நமக்கான முத்திரையை 

நாமே பதிக்க வேண்டும்!


உயர்ந்தோர் எல்லாம்

ஓர் நாளில் வளரவில்லை!

அதுபோல உழைத்தோர் வீண்போனதாக சரித்திரமில்லை!


உழைப்பால் உலகை வெல்வோம்!

இவ்வுலகமும் காத்திருக்கிறது உனக்காக!


விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா!🦋


Tuesday, 26 January 2021

என் தேசம்!


என்தேசம் வலிமையானது!

என் தேசம் இளமையானது!


மாறி வரும் சூழலுக்கேற்ப

தன்னை தகவமைக்கும் 

வடிவம் கொண்டது!


வேற்றுமை பலபல இருக்க

ஒற்றைமை குறையாத தேசமிது!


புதுமை பலபல கண்டு

கால் பதித்திடா துறை 

இல்லா வண்ணம்

ஏற்றம் வரட்டும்!


இந்த குடியரசு தின 

நன்னாளில் குடிமை

மலரட்டும்!


இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!


-செல்வா!


Monday, 18 January 2021

 திருவள்ளுவர்!


நெடுந்தமிழின் பொற்கலைஞனே!

உன் பாக்களால் தமிழெங்கும் பூவாசம்!


கற்போர் கற்கும் விதம்! 

காண்போர் வியக்கும் விதம்!

வாழ்வில் பயில்வோர் மகிழும் விதம்!

ஈரடியில் இணையில்லாமல் சொன்னாய்!


கற்றல், கேட்டல், நட்பு, அரண், பகை

உளவு, ஈதல், அறம், பொருள், இன்பம்!

அனைத்தும் அமிழ்தம் போல் தந்தாய்!


நீர் வாழி நின் குறள் வாழி

தமிழ் வாழி வாழ்வாங்கு வாழி!


-செல்வா!


Thursday, 14 January 2021

தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!


நம்பிக்கை வித்தை விதைத்து,

நல்ல பலனை கையில் எடுப்போம்! 


இனிய சொற்களில் உரையாடி,

நல்ல உறவுகளை சேர்ப்போம்!


நாம் விரும்பும் வாழ்விற்கு 

நாமே எடுத்துக்காட்டாய்  இருப்போம்!


இந்த தை நல்ல வாய்ப்பையும்

பற் பல சிறப்பையும் 

உயர்வையும் வளத்தையும்

குணத்தையும் நலத்தையும் 

வாரி வாரி வழங்கிட இனிய 

தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்


வாழிய தமிழ்...

வாழிய வாழியவே! 


-செல்வா!


Saturday, 9 January 2021

 தழல்!


துணிந்தவனுக்கு எதுவும் தூரமில்லை பக்கம் தான்!


எதிர்ப்பு எங்குதான் இல்லை!

தடையில்லை எனில் வாழ்வில் சுவையும் இல்லாமல் போய்விடுமல்லவா!


விறுவிறுப்பாய் இருப்பதாலே 

சுறுசுறுப்பாய் இயங்குகிறோம்!


படபடப்பாய் இருப்பதாலே 

பயிற்சி எடுக்கிறோம்!

எல்லாம் ஆயத்தமே!


வரலாறு இடம் பிடிக்க ஆசைபடுவதோடு!

வரலாற்றை எழுத எழுதுகோலை உனது கையில் எடு!


வாழும் வாழ்க்கையை வரிகளாக்கிடுவாயாக!


செல்வா!