ஏறு முன்னேறு!
கடந்த காலங்களை நினைவில் கொள்...
உனது விடாமுயறச்சியால் இத்தனை தூரம் நடந்தாய்,
கடந்தாய், நிலைபெற்றாய்!
யாரும் உன்னை தடுக்கவில்லை!
எதுவும் உன்னை ஏற்றிவிடவில்லை!
உனக்கான நாள் வரும்,
உனதாற்றல் புலப்படும்!
அது வரை பொறுமை கொள்!
விழி உள்ளவனுக்கோ ஆயிரம் வழி!
விழி அற்றவனுக்கோ எல்லாம் குழி!
வழியும் குழியும் ஒருங்கே வந்தாலும்,
விழித்திருப்பவம் தப்பிவிடுவான்!
இனிமேல் எல்லாம் உன்வசம்!

தன்னம்பிக்கையின் உயிர்த்துளி வரிகள்👍🤝
ReplyDelete