செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Wednesday, 22 April 2020

பறவை மொழி!

பறவைகளின் மொழி பாசமொழி!
அடைபடாத சொற்களில்லா ஓசை மொழி!

போட்டியில்லா பொறாமையில்லா!
பறந்த உலகின் விரிந்த விண்ணின் ஈடில்லா!
இயற்கையின் கொடையை இறகால் அளக்கும் மொழி!

பறந்து பறந்து இலகானது இறக்கை மட்டுமல்ல!
பறந்து பறந்து மனதும் இலகானது!

இன்னல் புரிவோர் மத்தியிலும் இயல்பாய் இயங்கும் மொழி!
பறவை மொழி  புரிந்தோர் நிற்க வாய்பில்லை பறந்துகொண்டிருப்பர்!

வா உலகம் சுற்றி வருவோம்!
இறக்கை விரி உயர பறப்போம்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!

Saturday, 18 April 2020

யதார்த்தம்!

காலம் இனிதாகும்
நம் கால்கள் நடக்கும் வரை!

நேரம் இனிதாகும்
நாம் உழைக்கும் வரை!

யோகம் இனிதாகும்
நாம் முயற்சியை விடாத வரை!

சகுனம் இனிதாகும்
சுறுசுறுப்பாய் இருக்கும் வரை!

உண்மை இனிதாகும்
நேர்மையானவர்கள் சொல்லும் வரை!

வாழ்வு இனிதாகும்
பிறருக்கு கொடுக்கும் வரை!

எல்லாம் இனியதாகும்
நம் பார்வை தெளிவாய் இருக்கும் வரை!

கவனமாக பார்ப்போம்,
களிப்புடன் வாழ்வோம்!

-செல்வா


Friday, 10 April 2020

உடன் பிறப்பு தினவாழ்த்து!

இப்போது போல எப்போதும்
இருக்க வேண்டும்!
காலங்கள் கடந்தாலும்
கொண்ட பந்தங்கள்
நிலைக்க வேண்டும்!

கலங்கரை விளக்கம் போல
உதவியாய் வேண்டும்!
கடல் அலை போல ஓயாத
அன்பு ஒலிக்க வேண்டும்!

இன்னும் ஒரு பிறவி எடுப்பினும்!
உன்னுடனே பிறக்கும் வரம் வேண்டும்!

இனிய உடன்பிறப்பு 
தினநல்வாழ்த்துக்கள் சகோ!

இன்றும் என்றும்
என்றென்றும்
அன்புடன்!

-செல்வா

Wednesday, 8 April 2020

நிலவு!

வெட்ட வெளியில்
வட்ட நிலவு
வெள்ளை நிறத்தில்
கொள்ளை அழகு!

கார் இரவின்
திருஷ்டி பொட்டு
பால் வெளியின்
பளிங்கி தட்டு!

மாலை நேர
வண்ண சிட்டு
தேய்ந்து வளரும்
பருவ மொட்டு!

ஔவை உணவும்
காதல் கனவும்
சமைத்த நிலவே
நீ உறங்காமல்
விழித்திருப்பது
யார் வரவிற்கோ?


-செல்வா

Tuesday, 7 April 2020

சேவகர்கள்!

இடியோ மின்னல் மழையோ
கடுங்குளிரோ சுடும்வெயிலோ
எங்களுக்கு விலக்கில்லை!

பிணியோ தொற்றோ சளியோ
எங்களுக்கு விடுப்பில்லை!

உறவோ நலனோ பற்றோ
எங்களுக்கு மாற்றில்லை!

அதனால் தான் என்னவோ,
எங்கள் பெயர் சேவகர்கள்!

தன்னலம் மறந்து
இம்மாநில மக்களின்,
நன்நலம் போற்றும் நீர் வாழி!

இடைவெளி இன்றி நெருக்கடிகளிலும்
பணியாற்றும் சேவகர்களுக்கு சமர்பணம்!

-செல்வா!

Sunday, 5 April 2020

விழிகள்!

இறைவன் படைத்த அரிய படைப்பு விழிகள்!
விசும்பிய விழிகளால் உலகம் அச்சமுறும்!

விழி பேசிடாத மொழியில்லை!
அன்பு முதல் கருணை வரை!
கோபம் முதல் தாபம் வரை!
ஆசை முதல் ஓசை வரை!
வலையில்லாமல் சிக்க வைக்கும்
கலை தெரியும் விழிக்கு!


வழி தெரியாதவன்!
விழி யற்றவனாவான்!
விழி திறந்த எல்லோருக்கும்
வழியுண்டு நதி ஓடும் பாதை போலே!

விழி திறக்க, வழி பிறக்கும்!
சாதிக்க பிறந்தோர்க்கு,
சாதனை தூரமில்லை!


-செல்வா!

Saturday, 4 April 2020

பட்டம்!

பட்டம் போல உயர பறக்கனும் எண்ணம்!
விண்ணில் வட்டமிட்டு ஆகாயத்தை தொடனும்!

சிறிய குணத்தோர் தொடா வண்ணம் பறக்கனும்!
பெரிய குணத்தோர் தேடும் வண்ணம் பறக்கனும்!

உலகை ஒரு முறை வட்டமிட்டு வரனும்!
உலகை ஒரு முறை உயரிய எண்ணங்களில் தொடனும்!

எண்ணத்திற்கு வலிமை உண்டு என்பதை!
உயரே பறந்து வட்டமிட்டு உலகிற்கு காட்டனும்!

வானமும் வசப்படும்,
கடலும் அகப்படும்,
புவியும் இசை படும்!
பட்டம் போல உயர்ந்த
எண்ணம் கொண்டால்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!

Thursday, 2 April 2020

இரவு!

வெள்ளை இரவு!
வெளிர் நிற நிலவு!
வெளிச்சமான கனவு!
வெளிப்படும் உணர்வு!

அழகு நிலவு!
அழகில் இரவு!
அழகான கனவு!
அழகுமிகு உணர்வு!

கைசேரும் கனவு!
கைகளில் உணர்வு!
கை கோர்த்த நிலவு!
கை தேர்ந்த இரவு!

எது சேர்ந்தாலும்,
எது சேராவிடிலும்!
நம்பிக்கை இருப்பின்,
தன்னம்பிக்கை இருப்பின்!
நாளை விடியும் பொழுது நமது!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!