செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Sunday, 31 October 2021

வாழ்க்கை வரமா? சாபமா?

வாழ்க்கை வரமா சாபமா,

கேள்விகளிலே ஓடுகிறது

விடை தான் தெரியவில்லை!

எதையும் கனவிலே காண்பது சாபம்!

எதையும் கையிலே உண்டாக்குவது வரம்!

எதற்கும் பிறரை நாடியிருப்பது சாபம்!

எதற்கும் பிறருக்கு கொடுத்தளிப்பது வரம்!

கையில் எதுவும் வந்த உடன்

காணமல் செய்வது சாபம்!

கையில் ஈட்டியதை எப்படியாவது

இரட்டிப்பாக்குவது வரம்!

இவ்வுலகில் செய்வதற்கு ஆயிரம் உள்ளது!

இவ்வுலகில் பேர் பெருவதற்கு ஆயிரம் உள்ளது!

எது நமது என்று தேடி அதை நாடி

அதில் ஆடிப் பாடி நெகிழ்க வாழ்வு வரமாகும்!

-செல்வா




Friday, 29 October 2021

தனிமை!


தனித்து விடப்பட்ட காட்டில் 

தனியாக நிற்கப்பழகியவன் நான்!


தனிமை என்னை ஒன்றும் செய்ததில்லை!

தனிமை என்னை மென்றும் திண்ணவில்லை!


மாறாக நான் நன்றாகவே உணர்ந்தேன்!

மாறாக நான் நன்றாகவே இருந்தேன்!


இளமையில் தன்னை பற்றி யோசி!

முதுமையில் தன்னை பற்றி சுவாசி! 

தனிமை தெரியாமல் கலந்துவிடும்!


தனிமையும் இனிமையே!

இனிமையும் தனிமையே!


-செல்வா!



Thursday, 28 October 2021

சிரிப்பு!


சிரித்துப்பழகினால்

வாழ்க்கை எளிதாகுமே!

கடினமோ கவலையோ

இன்னலோ இக்கட்டோ

துன்பமோ துயரமோ

சிரித்திட எல்லாம்

விலகிப்போகும்!

தன்னை மறந்து

தன்னை நினைத்து

தானே சிரிக்க

யாரும் புத்தரே!

நடமாடும் உலகில்

நாகரிகம் என்றென்னி

சிரிக்காமல் ஓடுகின்றனர்

நாளுக்கு ஒருமுறையேனும்

சிரிப்போம் சிந்திப்போம்

வளமுடன் வாழ்வோம்!

-செல்வா


Wednesday, 27 October 2021

நம்பிக்கை!


நம்பிக்கை உடைபடும் 

அவ்வப்போது பலப்படும் 

சிலநேரம் தடைபடும்!

ஆனால் விடைபெறாது!


தடை வரும் போது எல்லாம் 

நினைவில் கொள்வாய்

தடை இறுதியில்லை!

படை கொண்டு தாக்கினால் 

தடை என்ன உடைபடும்!


சாதித்தவர்கள் எல்லோருக்கும் 

தடைகள் குறைவில்லை

படைகளும் குறைவில்லை!

மனநம்பிக்கையாலே வென்றனரே!


-செல்வா!


Tuesday, 26 October 2021

 தேநீர் நண்பனே!


என் உணர்வுகளுக்கு 

மதிப்பளிக்கும் உன்னத

தேநீரே உன்னில் கரையாத

உணர்வுகள் என்னில் இல்லை!


எவ்வுணர்வாயினும்

அதை இரட்டிப்பாக்கவும் 

அரைபாதியாக்கவும்

நீட்டிக்கவும் துண்டிக்கவும்

பலமுறை கைகோர்த்தாய்!


பேசாமலே உன்னால் 

இத்தனை காரியம் 

எவ்வாறு சாதிக்கிறாய்

என்னையும் ஈர்க்கிறாய்!


உன்னோடு கழிந்த 

நொடிகள் மறவாத 

இலக்கணவரிகள்!


தீராத்தாகம் தீர்க்க வா!

பருகி தணிகிறேன்!


-செல்வா!