செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Sunday, 26 September 2021

கடினம்!


வாழ்வில் கடினமான என

ஒன்று இருந்ததில்லை!


நாம் தயாராக இல்லாத போது 

எளிமையானதும் மலைப்பாகிடும்!


வைரத்தினை வைரத்தினால் 

வெட்டிட இயலும்,

இமாலய சிகரத்தின் மீது 

எறி வென்றிட இயலும்!


கடினமான காலங்கள் 

கடந்து போகக்கூடியவையே!

பிறகு அசை போட்டால் 

நமக்கே சிரிப்பு வரும்!


கடினம் வரும் 

கவனமாய் இரு

கடந்து விடாலாம் 

கவலையை விடலாம்!


வாழ்வில் கடினமான

ஒன்று இருந்ததில்லை!


விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா!


Monday, 20 September 2021

ஆயத்தம்!


காத்திருந்தேன் என் கனவுகளுக்கு 

சிறகு முளைக்கும் வரை!


எதிர்பார்த்திருந்தேன்

என் சிந்தனைகள் 

வானத்தை எட்டும் வரை!


யார் என்ன செய்து விட முடியும்!

யார் என்னை வென்று விட முடியும்!


மனது படியாத வரை 

முயற்சி முடியாத வரை

இடர் வரினும் தடை வரினும்

தொட்டுவிடாலாம் விட்டுவிடாதே!


வெற்றி நமதே!


விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா!






Saturday, 18 September 2021

முடிவு!


இவர் ஒன்று சொல்லுவார் 

அவர் ஒன்று சொல்லுவார் 

முடிவில் திகைப்பவன் நீயே!


தீர்க்கமாக முடிவை எடு

முழு பொறுப்பும் உனதே!

அறிவுரை பற்பல கேள்

முடிவு உனதாக இருக்கட்டும்!


எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு,

அதை கண்டு அடைவதே காலம்,


இன்றைய நிலையை வைத்து,

நாளைய பொழுதை எடை போடாதே,

இன்று விதைத்தால் நாளை அறுவடை!


பொறுமை, காலம் இவை இரண்டும்,

பதில் உரைக்கும் திடமாக இரு!


-செல்வா!



Thursday, 16 September 2021

பெரியார்!


ஒரு கிழம் 

சிலகாலம் முன்பு

சமூகத்தில் மாற்றம்

ஏற்படுத்த முயன்றது!


அன்று தூவிச்சென்ற 

பகுத்தறிவு விதை இன்றோ 

கொழுந்து விட்டு எறிகின்றது!


மனிதனை மனிதன் மதித்து

மனிதம் காப்பதே புனிதம்!


இன்றும் முழுதாய் அடைந்தோமா?

எனினும் எரிகின்ற தனல் விடாது!

என்றாவது ஓர் நாள் அடைந்தே தீரும் இலக்கை! 


-செல்வா!