செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 15 May 2021

தனித்தன்மை!


தனித்திரு தனியாக எழு,

பிறரின் எதிரொலியாகாதே,

உனக்கான குரலாய் நீயே இரு!


பிறரை நகலெடுக்காதே,

தனக்கான சாயலாக நீயே,

வடிவமைத்துக்கொள்வாயாக!


இறைவன் படைப்பில் யாவரும் ஒன்றில்லை,

ஒரே மாதிரி படைக்கப்படவுமில்லை,

ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்!

தன்னகத்தை திறமை புதைந்து வைத்திருப்பவர்!

இதை கண்டறிந்தவர் வெல்வார்!


முதலில் நமது திறமையை கண்டறிவோம்,

பின்பு அதனை நன்றாக வளர்ப்போம்!

இறுதிவரை அதன் பலன் நிழல் போல் நமக்குத்தரும்!


விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா!



Sunday, 9 May 2021

அன்னை!


ஓர் சொல்லில் அடக்க 

முடியாத உனதன்பு முடிவிலி!


ஓர் பிறவியில் கடக்க 

முடியாத உறவிது முடிவிலி!


ஓர் வாழ்வில் அளக்க 

முடியாத ஆழமது முடிவிலி! 


உனதன்பு உண்மைத் தவம்!

உன்னால் என் வாழ்வு தவம்! 

இப்பிறவி எனக்கு தவமோ தவம்!


-செல்வா!




Thursday, 6 May 2021

நல்ல நேரம்!


இல்லாத நேரத்தை 

எங்கு போய் தேடுவது 

என பிதற்றுவோறே கேளீர்!


பொல்லாத நேரமாம் பேணாதோர்க்கு!

இல்லான நேரமாம் எண்ணாதோர்க்கு!

வீணான நேரமாம் 

கழித்தோர்க்கு!

விரையமான நேரமாம் இகழ்ந்தோர்க்கு!


பயனான நேரம் யாருக்கு?

நேரத்தை தங்கம் போல

செலவழிப்பார்க்கு!

நேரத்தை உழைப்பில் 

முதலீடு செய்வோர்க்கு!

காலம் தன் அரிய பரிசை அளித்திடும் காலம் வருமே! 


விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா 





Wednesday, 5 May 2021

வேண்டுதல் பலிக்கட்டும்!


உலகம் சரியாகனும் 

இயல்பு நிலை திரும்பனும்

இது எல்லோர் வேண்டுதல்கள்

நல்லோர் சிலர் செய்த 

புண்ணியம் பலிக்கட்டும்!


அல்லல், நோய், இன்னல் இடர் அகலட்டும்

சூழ்நிலை மாறட்டும் கடவுள் உலகை காக்கட்டும்!


நிலையற்ற வாழ்வு என்பதை படித்த நாட்கள்,

இன்று கண்முன்னே கற்பனைக்கு மேலாக தெரிகிறது!


மேலும் தாங்க சக்தி யில்லாத எழைக்கு இறங்கிடுவாய்,

இறைவா மனித சக்திக்கு மேலானது உனதென அற்புதம் புரிந்திடுவாய்! 


இறைவா ஏழைக்கு அருள்வாய்!


-செல்வா!