செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Sunday, 11 February 2018

திங்கள்கிழமை அது வரம்!!!

வாரத்தின் முதல் நாள் அது வரம்!!!
தன் கனவுகளை செதுக்கி சிலை செய்பவனுக்கு!!!
உளியும், சிலையும் போல் நம் நினைவும்,காரியமும்...

நிலைத்த இலக்கும் அதற்கான நித்திய சிந்தனையும் உடையவன் வெற்றியடைகிறான்.
மற்றவன் மனதை அலைபாயவிட்டு வெற்றிடமாகிறான்!!!
யாருடைய எண்ணம் செயலாகி, செயல் பழக்கமாகி, பழக்கம் குணமாகி தொடருகிறதோ வெற்றியும் வாகையும் அவனிடமே அகப்படுகிறது!!!
கனவு நினைவாக எழுச்சி கொள்க! இந்த நிமிடம் நமதே!!!
தேனின் சுவை எத்துளியிலும் மாறாததுபோல்,
நமது எண்ணங்களும் வண்ணங்களாக அமைந்து வாழ்க்கை மிளிரட்டும்!!!

விழி!எழு!விருட்சமாகுக!!!

-செல்வா

1 comment: