கண்னே துயில் எழு!
புதுவிடியல் பிறந்தது!
கண்னே துயில் எழு!
உனக்கான பொன்நாள் உதயமானது!
கனவில் காணும் ஓவியத்திற்கு,
உழைப்பால் உயிர்கொடு ஆகவே துயில் எழு!
வாழ்கை முடிசூட்டுகிறது,
எவன் புதுமை படைத்து அதற்கு அர்த்தம் அளிக்கிறானோ!
ஆகவே துயில் எழு! துயில் எழு!
என்றும் உன்னை உலகம் போற்ற,
உன்காலம் பொற்காலமாக விளங்க துயில் எழு!
இலக்கு ஒன்றே உனது உயிர்துடிப்பாய் ஓயாமல் ஒலிக்க!
காலம்பாராமல் காரியம் செய்!
அண்டசராசரமும் உதவி பயக்கும்!
அகிலம் போற்றும் ஒருநாளுக்கான முதல்நாள் இன்று!!!
காலம்பாராமல் காரியம் செய்!
அண்டசராசரமும் உதவி பயக்கும்!
அகிலம் போற்றும் ஒருநாளுக்கான முதல்நாள் இன்று!!!
விழித்திடு!
விளைபடு!
விண்முட்டும் விருட்சமாய் வளர்ந்திடு!!!
-செல்வா

nice quote
ReplyDelete