செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 21 August 2021

 பயம்!


காத்திரு அது தவம்

தவத்தின் பலன் அதை

காலம் இரட்டிப்பாக்கும்! 


பயம் தான் மனிதனை 

சங்கிலி போல் கட்டிவிடுகிறது

நம் பயதின் மீது பிறர் ஏறி 

நம்மீது சவாரி செய்கின்றனர்!


பயப்படாமல் துணிந்து 

மதிகொண்டு செயல்படு

எட்டாத தூரத்தில் 

ஏதுவும் இல்லை!


இதுவும் கடந்து போகும்

எதுவும் வந்து சேரும்

காலம் தந்து விடும்

காத்திருத்தல் தவம்

என்ற புரிதல் வரும்!


-செல்வா






Thursday, 12 August 2021

தன்னம்பிக்கை!


சாதிக்க உழைத்தால் 

வலியும் இனிமையே!


பொறுமையாக இருந்தால்

எக்காலமும் நல்லகாலமே! 


சிறுகச்சிறுக சேமித்தால் 

மலைபோல் செல்வம் சேருமே!


வடிகட்டி பேசினால்

மவுசு கூடுமே! 


எப்போதாவது வெல்லது அதிர்ஷ்டம்!

எப்போதும் வெல்வதே தன்னம்பிக்கை, முயற்சி!


-செல்வா!



Thursday, 5 August 2021

மகிழ்ச்சி!


மகிழ்ச்சி வாழ்வில்

விலைகொடுத்து

வாங்க இயலாத

பெரும் செல்வம்!

மனதில் தோன்றும்

அங்கேயே தங்கும்

நலம் வளம் நன்மை

அள்ளி வழங்கும்!

வாழ்வில் எப்போதும்

உடன் இருக்கவேண்டிய

வைப்புத்தொகை மகிழ்ச்சி!

எள்ளாமல் எட்டும் மகிழ்ச்சி

என்றும் தரும் இன்ப நுகர்ச்சி!

இது வாழ்வை வளமாக்கும் முயற்சி!