செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 29 August 2020

 ஏறு முன்னேறு!

 கடந்த காலங்களை நினைவில் கொள்...

 

உனது  விடாமுயறச்சியால் இத்தனை தூரம் நடந்தாய்,

கடந்தாய்நிலைபெற்றாய்!

 

யாரும் உன்னை தடுக்கவில்லை!

எதுவும் உன்னை ஏற்றிவிடவில்லை!

 

உனக்கான நாள் வரும்,

உனதாற்றல் புலப்படும்!

அது வரை பொறுமை கொள்!

 

விழி உள்ளவனுக்கோ ஆயிரம் வழி!

விழி அற்றவனுக்கோ எல்லாம் குழி!

 

வழியும் குழியும் ஒருங்கே வந்தாலும்,

விழித்திருப்பவம் தப்பிவிடுவான்!

 

இனிமேல் எல்லாம் உன்வசம்!

 

விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா!




Friday, 14 August 2020

 எனது இந்தியா!

எனது இந்தியா நான் கண்ட கனவிலே நிற்கிறது!
எனது இந்தியா நான் படித்த புத்தகத்திலே தங்கியது!

தேங்கிக்கிடக்கும் வேற்றுமைகள் களையப்படுவது எப்போது?
சிதறிக்கிடக்கும் ஒற்றுமைகள் சேர்வது எப்போது? 

புதிய இந்தியா அவ்வப்போது பிறந்ததாக அறிந்தேன்!
ஆனால் ஒரு போதும் அது வளர்ந்ததாக அறியவில்லை!

நாம் படித்த வேற்றுமையில் ஒற்றுமை என்று நிறைவேறும்?
நாம் நேசிக்கும் வேற்றுமையில் ஒற்றுமை என்று நிறைவேறும்! 

பல பல தலைவர்கள் கண்ட கனவும்,
பல பல இளைஞர்கள் உழைப்பும் ஒருசேரவும்!
தன்னிறைவான தேசம் தன்னிலே மலரட்டும்!

இந்த சுதந்திர திருநாளில் மலரட்டும் நல்இந்தியா! 

வாழ்க பாரதம்.வளர்க பாரதம்!

-செல்வா!

Thursday, 13 August 2020

 முயல்!

பனி படர்ந்த சாலை ஓரம்,
வழிகாட்டும் தளிர் மலரே! 
தளர்வரியாத உன் முகம் 
காண ஓடிவரும் வண்டு நான்!

மணம் கமழ்ந்து நீ வீற்றிருக்க,
மதி மயங்காமல் என்னவாகும்!
மலை அழகோ மதி அழகோ 
மனம் வியக்கும் நீ அழகோ!

அயல் அல்லாத கயல் நீ,
புயல் அல்லாத அலை நீ,
மயல் அல்லாத இயல் நீ,
பயல் அல்லாத முயல் நீ!

நானோ முயன்றேன்,
நானே முயல்கின்றேன்!
அடையாமல் தீராது இந்த 
முயல் ஆமை பந்தயம்!

-செல்வா!

#முயல் #தமிழ்கவிதை #கவிதை #இன்பம் #குழந்தை #இனியதமிழ்செல்வா 
#Kavidai #iniyatamilselva #child #alwayshappy #Behappt