செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Sunday, 31 May 2020

ஒப்பனை!

ஒப்பனையும் ஒப்பீடும்
வாழ்வின் இருபெரும் தவறுகள்!

இரண்டும் இருப்பதை கண்டும் காணாது,
இல்லாததை பிடித்து ஒருபோதும் விடாது!

ஒப்பனை நிகழ்காலத்தை மறக்கடிக்கும்!
ஒப்பீடு நிகழ்காலத்தை இருட்டடிக்கும்!

இருப்பதில் பெருமை கொள்வோம்!
முயற்சி கொண்டு முன்னேறுவோம்!
முடியாததை நமக்கானதில்லை
என விட்டொழிப்போம்!

இல்லாத ஒன்றிற்காக இருக்கும்
தொண்ணூற்று ஒன்பதை மறவாதீர்!
வெறும் கல்லும் சிலையாகும்
சிறந்த சிற்பியின் கை படின்!

உன்னை உருவாக்கும் சிற்பி நீயே!
நினைவில் கொள்வாயாக!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!

Monday, 25 May 2020

அமிலம்!

ஒரு விதத்தில் சொல்லப்போனால்,
உணர்வுகள் மனதை அரிக்கும் அமிலம் போலும்!

தேங்கி நிற்க நிற்க மனதை அரித்துவிடும்,
வழிந்து ஓட படும் இடமெல்லாம் சுட்டு விடும்!

மனதில் உள்ள அமிலத்தை
மதி கொண்டு சிறுக சிறுக
நீர்த்துப்போக செய்யாவிடில்,
மெல்ல மெல்ல சிதைத்துவிடும்
மனக் குடுவையை!

கண்ணாடியாய் மனதை மாற்றினால்,
எந்த வித அமிலத்திற்கும் தாக்குப்பிடிக்கும்!
எத்தனை காலத்திற்கும் மாறாமலிருக்கும்!

உணர்வுகளுக்கும் உயிர் உண்டு,
அதனை பாதுகாப்புடன் கையாளுவீர்!

-செல்வா!

Sunday, 17 May 2020

தீர்வு!

தீர்வு கிட்டும்
தீர்க்கம் நீயெனில்!

வழி கிட்டும்
விழி நீ திறந்திடில்

வாழ்வு சிறக்கும்
வாழ நினைத்திடில்

எல்லாம் மாறும்
மனதை மாற்றினால்!

இலக்கு எதுவானாலும்
ஆரம்பம் மனதிலே!

மனதை பழக்கு
மனதை அடக்கு

மதிலும் தாண்டலாம்
மகுடம் சூடலாம்!

எல்லாம் உன்கையில்!

-செல்வா!

Saturday, 16 May 2020

இசைமழை!

இனிமை பொங்கும், 
இன்னிசை மாமழை!

மனதில் தூறும் ஓர் அலை,
மகிழ்வு தரும் பேரலை!

இசை அளப்பறியா கொடை,
இசை மனதை ஈர்க்கும் மழை!

இசையில் நனையாத இதயம் காணீரோ,
இளமை தளிரும் தருணம் மீண்டும் கண்டீரோ!

இசையின் தொண்டு இனிதாகும்,
இளமை கூட்டும் பண்பாகும்! 

இசை மழையிலே நாம் நனைவோம்,
இளமையினை நான் உணர்வோம்!

நாளும் புதிதாகும் இசையாலே,
இன்றும் என்றும் என்றென்றும்!


-செல்வா!

Monday, 11 May 2020

வெண்மேகம்!

வான் கொண்ட மலை மேலே,
வெள்ளை பூப்பூவாய் மேகங்கள்!

மான் கொண்ட புள்ளி போலே
வெள்ளை மேகக்கோலங்கள்!

கண் கொண்டு காணும் காட்சி,
கனவிலும் தோன்ற இயலுமோ!

கண் கொண்டு காணும் காட்சி,
நினைவிலும் பிடிக்க இயலுமோ!

இயற்கையின் எழில் முன் 
மனித கற்பனைகள் தோற்குதே! 
கவிதை வரைய மனமும் ஈர்க்குதே! 
அழகினை புகழ சொற்பஞ்சமாகுதே! 

இயற்கை எழிலே எழில்!


-செல்வா

Sunday, 10 May 2020

மாற்றம்!

எங்கு மாற்றமோ,
எப்போது மாற்றமோ!

நல்ல மாற்றமோ!
நற்கதியான மாற்றமோ!

நிலையாத இவ்வுலகில்
நிலைபெற்ற ஒன்று உண்டெனில்!
அஃது மாற்றம் என்றால் மிகையாகாது!

மாறா பொழுதுகளை கண்டு
ஏங்கித் தவித்த நாட்களுமுண்டு!
மாற விளையும் நிகழ்வுகளை
இறுக்கி பிடிக்க நினைத்த நாட்களுமுண்டு!

உலகம் உருண்டை வடிவமானதாலோ!
இத்தனை ஆட்டம் இத்தனை மாற்றம்!
மாறாக உலகம் தட்டையெனில்
என்பாடு நற்கதி தானே!

மாற்றத்தை தவிர்த்திட இயலாத மானிடன்!

-செல்வா