செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 6 January 2020

தோல்வி பாடம்!

நடப்பதெல்லாம் நன்மைக்கே,
இவ்வுலகில் அதிகம் வென்றது,
பொறுமையும் விடா முயற்சியுமே!

தோற்பது குற்றமில்லை தோல்வியிலிருந்து, கல்லாதது குற்றமே!
தோற்பது குற்றமில்லை தோற்றபின்பு, முயலாதது குற்றமே!

தோல்விக்கு பிடித்தவனை, வெற்றிக்கு பிடிக்காமலில்லை!
திறமையது கூடினால் வெற்றி தங்கிவிடும் கைவிடுவதில்லை!

காலமது தேயும், நேயமது தேயும்,
பாரமது கூடும், நாணமது கூடும்!
நம்பிக்கை மட்டும் விட்டிடாதே,
தன்னம்பிக்கை சுடர்விட்டால்,
நாளை அரசாளும் அதிபன்
நாமின்றி வேறாறோ?

-செல்வா




Saturday, 4 January 2020

நேர்கொண்ட பார்வை!

நேராக சிந்தித்தாலே போதும்,
நேராக பார்த்தாலே போதும்,
பாதி வழி வந்தடைவோம்!

வழியில்லா வீதிகளில்லை!
கரையில்லா கடலில்லை!
தீர்வில்லா இன்னலில்லை!

இல்லை என்றாலோ எங்குமில்லை!
எதிலுமில்லை எதிரிலுமில்லை!

உண்டு என்றாலோ எங்குமுண்டு!
எதிலுமுண்டு புதிரிலுமுண்டு!

ஒரு சிறு பொறியின் நம்பிக்கை!
ஒரு சிறு ஒளியின் வழிகாட்டுதல்!
ஒரு சிறு சொல்லின் ஊக்குவிப்பு!

எங்கும் உண்டு, கண்கள் திறக்கவேண்டும்!
என்ன என்று பார்க்க வேண்டும்!

வெல்வோம், நாமின்றி இப்புவியில் யார் வெல்வர்?

-செல்வா!

Wednesday, 1 January 2020

வாழ்வின் தேடல்!

வாழ்க்கையின் தூரமும்
வந்து செல்லும் பாதையும்
ஒவ்வொருவருக்கும் வேறு வேறே!

போதும் போதும் என்பது வரை,
சிரித்து, மகிழ்ந்து, உணர்ந்து வாழ்வோம்!
ஏனெனில் வாழும் வாழ்க்கை ஒன்றே!
நம் கையில் இறுக இருப்பது இன்றே!

இன்றை தீர்ப்போம் உற்சாகமாய்!
நாளை பிறக்கட்டும் இரட்டிப்பாய்!

வாழ்க எல்லை தீர வாழ்க!
வாழ்க எல்லை தீண்டி வாழ்க!
மகிழ்க எல்லை தாண்டி மகிழ்க!

வாழ்க வளமுடன், எஞ்ஞான்றும் மகிழ்வுடன்!


-செல்வா!