செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 5 January 2024

 விட்டுவிடாதே


விட்டுவிடாதே எட்டிப்பிடி

வானம் உன் வசமாகும் 

அந்நாள் தூரமில்லை!


கனவு கண்டு களத்தில் நின்று

முயற்சி பூண்டு வெற்றி கண்டு

வானை வசப்படுத்தும் நேரமிது!

உன்னுள் உதித்த கனவுக்கதிரை

கயிறாய் பிடித்து களத்தில் குதித்து

வாகை சூடிடு வழி காட்டிடு!


எத்தனை பேர் உலகில் சாதித்தனரோ

அத்தனை பேர் இதைச்செய்தனரே!


விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா!



Thursday, 4 January 2024

சுடர்!


சுடர் விடு ஒளியாய் 

சுடர் சிறியதாயினும்

ஒளி தர இருள் அகலும்

நம் முயற்சி சிறிதேனும் 

அதன் பலன்‌ அளப்பரியதே

இன்று தெரியாவிட்டாலும் 

நன்மை அதனாலே என்றும்!


-செல்வா!


Wednesday, 3 January 2024

 முடியும்!


உன்னால் முடியும் என்பதை

 முதலில் நீ நம்பிக்கை கொள்!

தன்னால் வெல்ல என்பதை

 முயன்று வெற்றி கொள்!


காட்டாற்று வெள்ளத்தில்

எல்லாம் மாயும் ஆனால்

மலை வீழ்வதில்லையே?

நீ மலையான நம்பிக்கையால் 

சிலேகிக்கும் வெற்றி கொள்!


விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா




Friday, 9 June 2023

சோலை!

வாழ்க்கை சில நேரம் 
வறண்டு போகலாம்
ஏன் பாலையானது என
சிந்தித்து வீணாக்காமல்
ஒரு விதையை ஊன்றி 
நீர் விட ஆரம்பிப்போம் 
நீர் துளி மண்ணில் விழ
புதிய தளிர் முளைக்கும்
பூ பூக்கும் காய் காய்க்கும்
பறவை வந்து வாழ்ந்திட
ஒன்று பலவாகி பெருகும்
பாலை ஓர்நாள் சோலையாகும்
நாம் நட்ட விதையாலே
நாம் விட்ட நீர்துளியாலே

சோர்ந்திருந்து என்ன பயன்?
விழித்திடு! எழுந்திடு! நாளை நமதே!

நம் முயற்சி வானளவு இருக்கட்டும் 
நம் வெற்றி கடலாய் பரவட்டும்! 

-செல்வா!



Sunday, 2 April 2023

தடை!


துணிந்து செல்பவனுக்கு 

தூரமும் பாரமும் தடையில்லை!


இலக்கை கொண்டவனுக்கு 

ஓய்வும் பயிற்சியும் வேறில்லை!


பயந்து நிற்க எதுவும் சாத்தியமில்லை!

துணிந்து எதிர்க்க தடைகள் நிற்பதில்லை! 


படை சிறியதோ பெரியதோ!

மனித மனம் பெரியதே!

மனதார நினைப்பின்

அடைவது உறுதி!


-செல்வா!


Monday, 30 January 2023

 வாழ்க்கை!


வாழ்க்கை இனிமையானதே

சுவைக்கத்தெரிந்தவர்களுக்கு!


வாழ்க்கை சுவாரசியமானதே 

ரசிக்கத்தெரிந்தவர்களுக்கு!


வாழ்க்கை எல்லையற்றதே 

பார்க்கத்தெரிந்தவர்களுக்கு!


வாழ்க்கை தொல்லையற்றதே 

பழகத்தெரிந்தவர்களுக்கு!


வாழ்க்கை சண்டையற்றதே 

கேட்டு பேசுபவர்களுக்கு!


வாழ்க்கை மகிழ்வானதே

சிரிக்கத்தெரிந்தவர்களுக்கு!


எண்ணங்களை மாற்றினால் 

வண்ணங்களாய் வாழ்க்கை மாறும்!


- இனிய தமிழ் செல்வா





Tuesday, 27 September 2022

நம்பிக்கை!


பிரச்சனைகள் எல்லாம் 

தீர்ந்து போகும் தன்னாலே

நம்பிக்கை நிறைந்த மனிதன்

வாழ்வில் எப்போதும் வீழ்வதில்லை!


படகு கவிழ்ந்த போதிலும் 

துடுப்பை பற்றி கரை சேரலாம்!

துடுப்பு உடைந்த போதிலும்

வெள்ளப்போக்கில் கரை சேரலாம்!


கலக்கம் இருக்க தெளிவு ஏது!

விளக்கம் பிறக்க தடை ஏது!

நம்பிக்கை வைத்திடு 

நாளை நம்வசம்!


-செல்வா!











#tamil #iniyatamilselva #tamilquotes #tamilpoem #motivation #selfmotivation #selfhelp #kavita  #yourquote #quote #stories #qotd #quoteoftheday #wordporn #quotestagram #wordswag #wordsofwisdom #inspirationalquotes #writeaway #thoughts #poetry #instawriters #writersofinstagram #writersofig #writersofindia #igwriters #igwritersclub