Friday, 9 June 2023
வாழ்க்கை சில நேரம்
வறண்டு போகலாம்
ஏன் பாலையானது என
சிந்தித்து வீணாக்காமல்
ஒரு விதையை ஊன்றி
நீர் விட ஆரம்பிப்போம்
நீர் துளி மண்ணில் விழ
புதிய தளிர் முளைக்கும்
பூ பூக்கும் காய் காய்க்கும்
பறவை வந்து வாழ்ந்திட
ஒன்று பலவாகி பெருகும்
பாலை ஓர்நாள் சோலையாகும்
நாம் நட்ட விதையாலே
நாம் விட்ட நீர்துளியாலே
சோர்ந்திருந்து என்ன பயன்?
விழித்திடு! எழுந்திடு! நாளை நமதே!
நம் முயற்சி வானளவு இருக்கட்டும்
நம் வெற்றி கடலாய் பரவட்டும்!
Sunday, 2 April 2023
Monday, 30 January 2023
வாழ்க்கை!
வாழ்க்கை இனிமையானதே
சுவைக்கத்தெரிந்தவர்களுக்கு!
வாழ்க்கை சுவாரசியமானதே
ரசிக்கத்தெரிந்தவர்களுக்கு!
வாழ்க்கை எல்லையற்றதே
பார்க்கத்தெரிந்தவர்களுக்கு!
வாழ்க்கை தொல்லையற்றதே
பழகத்தெரிந்தவர்களுக்கு!
வாழ்க்கை சண்டையற்றதே
கேட்டு பேசுபவர்களுக்கு!
வாழ்க்கை மகிழ்வானதே
சிரிக்கத்தெரிந்தவர்களுக்கு!
எண்ணங்களை மாற்றினால்
வண்ணங்களாய் வாழ்க்கை மாறும்!
- இனிய தமிழ் செல்வா



