பிரிவு!
திங்கள் பத்து உதிரத்திலிருந்து,
அனுதினமும் அணுவாய் வளர்ந்து!
உதிர்ந்தேன் உன் மடியிலிருந்து!
உலகம் கண்டேன் முதல் பிரிவானது !
எனினும் உந்தன் மடியில் தவழும் பாக்கியம் சுகமே!
பள்ளி கண்டு, கல்வி கொண்டு,
பருவம் கண்டு, வேலை கொண்டு,
உழைப்பின் காரணமாய்!
உண்மையின் தோரணமாய்!
வெளிநாடு வந்தேன்!
இரண்டாம் பிரிவு!
தூர நின்றாலும் துரத்தும் அன்பது!
பாரமென்றாலும் சுமக்கும் அன்பது!
இன்றும் என்றும் வேண்டும் உன்மடி
என் தலை சாய்க்க ஏதுவாய்!


